senthilvayal.com
<http://senthilvayal.com/2015/12/21/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8b/>
Read
Later
எக்ஸ்பி, விஸ்டாவில் குரோம் சப்போர்ட் இல்லை

   - by Vayal
   -  Dec. 21, 2015
   -  1 min read
   -  original
   
<http://senthilvayal.com/2015/12/21/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8b/>

வரும் ஏப்ரல் மாதம் முதல், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங்
சிஸ்டங்களில் இயங்கும் குரோம் பிரவுசர் செயலிக்கான சப்போர்ட் தருவதை, கூகுள்
நிறுத்திவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சப்போர்ட் செய்யாத,
ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இன்னும் இயக்கிக் கொண்டிருப்பவர்களைப் புதிய
ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள, இந்த நடவடிக்கை கட்டாயப்படுத்தும்
என கூகுள் கருதுகிறது. ஏப்ரல், 2016க்குப் பின், இந்த சிஸ்டங்களில், குரோம்
பிரவுசர் இயங்கும். ஆனால், அதன் பாதுகாப்பிற்கான செக்யூரிட்டி பேட்ச் பைல்கள்
தரப்பட மாட்டாது என கூகுள் தெரிவித்துள்ளது.

ஏப்ரல், 2016 உடன், மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கான சப்போர்ட் நிறுத்தி, ஏறத்தாழ
இரண்டு ஆண்டு காலம் ஆகியிருக்கும். விஸ்டாவிற்கான சப்போர்ட் 2012 ஆம் ஆண்டில்
நிறுத்தப்பட்டது. நீட்டிக்கப்பட்ட சப்போர்ட் 2017 வரை இருக்கும்.
விண்டோஸ் எக்ஸ்பியில், குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர், வேறு புதிய
ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தொடர விரும்பினால், இவர்களுக்கு பயர்பாக்ஸ்
மற்றும் ஆப்பரா பிரவுசர்கள் உதவிக்கு வரலாம்.
நவம்பர் தொடக்கத்தில், நெட்மார்க்கட் ஷேர் (Netmarketshare) என்னும் நிறுவனம்
மேற்கொண்ட ஆய்வின்படி, விண்டோஸ் எக்ஸ்பி, இன்னும் 12% பேர்களால்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 10 சிஸ்டத்தை, 8.1% பேர் பயன்படுத்தி
வருகின்றனர். ஆனால், Statcounter என்னும் அமைப்பு வெளியிட்ட கணிப்பில்,
விண்டோஸ் 10 சிஸ்டம் 11% பேராலும், விண்டோஸ் எக்ஸ்பி 8.46% பேராலும்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to