விவாகரத்து சட்ட‍ம் பற்றி அரிய தகவல்கள்

*சட்டம் உன் கையில்*

*பொதுவாக இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம்,பார்சி திருமணம்
மற்றும் விவாகர த்துச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ்
விவாகர த்து வழக்கு தாக்கல் செய்யலாம்.*

*Naveen Kohli Vs Neelu Kohli (AIR 2006 SC 1675)*

*ஒரு நிறுவனத்தில் 94.5 சதவிகிதம் பங்கு வைத்திருக்கும் ஒருமனைவி அந்த
நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணி செய்யும் கணவர்மீது, ‘கம் பெனி விதிகளுக்கு
எதிராகச் செயல்பட்டு நஷ்டம் ஏற்படுவதால்அவரு டன் கம்பெனி சார்பில் யாரும்
தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று நாளி தழில் அறிவிப்பு வெளியிட்டதை மேற் கோள்
காட்டி, ‘மனத ளவிலான கொடுமை’ என்று அந்தக் கணவர், மனைவிமீது விவா கரத்து மனு
தாக்கல் செய்தார். இதன் தீர்ப்பில் தாம்பத்யத்தில் கணவனோ மனைவியோ சுயநலமாகவோ,
கஞ்சத்தன மாகவோ, வெறுப்பூட்டும் வகையிலோ அல்லது சிறு கோபத்தின் வெளிப்பாடாக
சிறுமையுடன் நடந்து கொள்வது, திருமண உறவு நீர்த்து விட்டதைக் காட் டுகிறதே
தவிர, ‘ மன க்கொடு மை’ என்று கூற இயலாது.*

*இது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மனைவி வீம்புக்காகவே தொடர முடியாத திருமண
உறவை தொடர நினைப்பது யாருக்கும் எந்த பய னையும் தரப்போவதில்லை என்று கூறி
விவாகரத்து வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையே, ‘முறிந்து மீள முடியாத
திருமண பந்தத்தைத் தொடர இயலாத நிலை’யையும்விவாகரத்துக்கு அடிப்படைக் காரணமா க
கொண்டுவர, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய காரணமாக அமைந்தது. அந்த மசோதா
இன்னும் நிலுவையிலேயே உள் ளது.*

*Kamaleshwar Bai Vs Peelu Ram Sahi*

*மனைவி தனக்கு இழைக்கப்படும் வன் கொடுமை, வரதட்சணைக் கொ டுமை போன்றவற்றுக்காக
சட்டப்படி புகார் கொடுப்பதை விவாகரத்துக் கான மனக்கொடுமை என்ற அடிப்ப டைக்
காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறுகிறது.*

*Usharani Lenka Vs Panigrahi Subash Chandra Dash*

*கணவன், தன் மனைவிமீது தங்கள் திரும ணத்துக்கு முன்னர் யார்மூலமாகவோ கருவு
ற்று கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் திருமணம் செல்லாது என்று கூறும் ஒரு
வழக்கு… மேலும், தன் மனைவி தொடர்ந்து பல ஆண்டு காலம் தன்னுடன் எந்தவித திருமண
உறவிலும் ஈடுபடாத து விவாகரத்துக்கான மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாகவும்
காட்டி விவாகரத்துக்கான ஒரு வழக் கும் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பி ல்
எந்த முகாந்திரமோ, சாட்சியமோ இல் லாமல் ஒரு பெண்ணின்மீது அவதூறு கூறுவது தவறு
என்ற கண் டனத்தை பதிவுசெய்தது.*

*ஆனால், ‘தாம்பத்ய உறவு மறுக்கப்பட்ட து மனக்கொடுமைதான்’ என்பதை ஏற் று,
மனைவியின் வாழ்வாதாரத்துக்கு நிதி நிவாரணம் அளித்து தீர்ப்பளி க்கப்பட்டது.
தகுந்த காரணம் இன்றி பிரிந்து செல்லுதல்… குறிப் பிட்ட காலம் வரை இணையாமல்
இருத்த ல் கணவனோ, மனைவியோ தகுந்த காரணமில்லாமல் மனைவியையோ , கணவரையோ விட்டுப்
பிரிந்து செ ல்லுதல். இவ்வாறு பிரிந்து செல்லும் நபர் திருமண உறவில் தனக்கு
இருக்கும் சட்டப்படியும் தர்மப்படியு மான கடமையிலிருந்து தவறுவது ஆகும்.
ஒருவேளை பிரிந்து இருப்பதற்கான தகுந்த காரணத்தை எதிரா ளி காண்பிக்கும்
வேளையில், இந்தப் பிரிவின்கீழ் தாக்கல் செய்யப்படு ம் விவாகரத்து மனுக்கள்
தள்ளுபடி செய் யப்படலாம்.*

*Vikas sharma Vs Anita Sharma*

*திருமணமான பெண் கணவருடன் இணைந்து வசிக்க விரும்பினாலும், கணவ ர் இல்லாமல்
அவரின் பெற்றோருடன் வசிக்க விரும்பாதது சட்டப்படி இணையா மல் இருத்தல் என்று
கூற முடியாது என்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. திருமணம் செய்து
கொள்ளும்போது இருக்கும் மதத்தை மாற்றி வேறு மதம் ஏற்றுக் கொள்ளுதல் ஆணோ,பெண்ணோ
தான் திருமணம் செய்து கொள்ளும்போது பின்பற்றிய மதத்திலி ருந்து, அந்தத்
திருமணம் நிலுவையிலி ருக்கும் போதே வேறு மதத்துக்கு மாறு வதால், ஒரு வேளை
அந்தத் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டால், இந்தக் காரணத்துக்காகவும்
விவாகரத்து கோர லாம். இந்த அடிப்படைக் காரணம் சிறப் புத் திருமணச் சட்டத்தின்
கீழ் திருமணம் செய்து கொள் ளும் தம்பதிக்கு பொருந்தாது.*

*மனநலப் பாதிப்பு… மனநலம் சம்பந்தப்பட்ட நோய் சிறு கோபமோ, மன அழுத்தமோ மனநலப்
பாதிப்பு அல்ல. தொடர்ந்து கட்டுக்கு அட ங்காமல், தன்னையும் அறியாம ல்செய்யும்
செயல்கள் மருத்துவ ரீதியாக மனநல ப் பாதிப்பு என்று சான்று அளிக்கப்படக்கூடியவை
இதன் கீழ் அடங்கும்.*

*Hema Reddy Vs Rakesh Reddy*

*மனைவியின் தொடர் அமைதி அல்லது அவரின் கணவரின் குடும்பத் தாருடன் நல்ல
முறையில் பழ காதது அல்லது கையைக்கொண்டு தலையை சொரிந்து கொண்டிருக்கு ம் விதம்
போன்றவற்றை மனநலப் பாதிப்பு என்று கூற இயலாது. மேலு ம் இந்த வழக்கில் அந்தப்
பெண் தன் தாயார் தவறிய காரணத்தினால் சிறிது காலம் கவலையில் இருந்தார். இந்
நிலையை மனநோய் என்று கூற இய லாது. இதற்காக விவாகரத்து கொடுப்ப து இயலாது. *

*தொழுநோய் கொடிய தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் துணையு டன் தொடர்ந்து
திருமண உறவை தொடர விருப்பம் இல்லாவிட்டால், அதற்கான போதிய மருத்துவ சான்றிதழ்க
ளோடு விவாகரத்து கோரலா ம்.*

*Swarajya Lakshmi Vs G.G.Padma Rao*

*திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட பிறகு தன் மனைவிக்கு
தொ ழுநோயும் காசநோயும் இருப்பதற்கான போதிய மருத்துவ சான்றிதழ் பெற்று,
தொடர்ந்து அந்த மனைவியுடன் வாழ்வது தனக்கும் குழந்தைக்கும் ஆபத்தும் நோய்
தொற்றிக் கொள்ளும் அபாயமும் இருப்பதால் விவாகரத்து கோரி மனு தாக்கல்
செய்யப்பட்ட கணவனின் மனு, மனி தாபிமான அடிப்படையில் கீழமை நீதி மன்றங்களில்
விவாகரத்துக்கு மறுக்கப்பட்டாலும், மேல்முறையீட்டில், இவ்வாறு இருக்கும்
நோயாளிகளுடன் தொடர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபட கட்டாயப்படுத்த முடியாது என்று
விவாகரத்து வழங்கி தீர்ப்ப ளிக்கப்பட்ட து.*

*பாலியல் நோய்*

*உடல் உறவின் மூலம் தொற்றிக் கொள் ளும் பாலின நோய்கள், எய்ட்ஸ் போன்ற வற்றின்
மூலம் பாதிக்கப்பட்டிருப்பின் அந்தக் காரணத்துக்காக விவாகரத்து வழ க்கு
தாக்கல் செய்யலாம். உலக வாழ் வை துறந்து துறவறம் மேற்கொள்ளு தல் திருமணமான
ஆணோ, பெண்ணோ இல் லற வாழ்வை துறந்து, சந்நியாசம் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில்,
அதன்மூலம் பாதிக்கப்படும் துணை, இந்த அடிப்படைக் காரணத்துக்காக விவாகரத்து
கோரலாம். இந்து திரு மணச் சட்டத்தில் மட்டுமே இது விவா கரத்துக்கான ஒரு
அடிப்படைக் காரணம். உயிருடன் இருப்பதற் கான 7 ஆண்டுகள் வரையில் கேள்வியுறாமல்
இருப்பது ஒரு தனிநபர் திருமண பந்தம் நிலுவை யில் இருக்கும் போது, 7 ஆண்டுகள்
வரை எங்கே இருக்கிறார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை என்றாலும், அவர்
உயிருடன் இருப்பதற்கான எந்தச் சான்றும் ஆதாரமும் யாராலும் சமர்ப்பிக்கப்பட
இயலாத பட்சத்திலும், பாதிக்கப்பட்டவர் இந்த அடிப்ப டைக் காரணத்துக்காக
விவாகரத்து கோரலாம்.*

*தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின்மீதா ன
தீர்ப்புக்குப் பின் ஒரு ஆண்டுக்கு மேல் ஒன்று சேராமல் இருத்தல் கணவருக் கோ,
மனைவிக்கோ எதிராக தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்வதற்காக
தாக்கல் செய்யப்படும் மனு, அவருக்கு சாதகமாக தீர்ப் பாகி ஒரு ஆண்டுக்குப்
பிறகும் இருவரும் திருமண பந்தத்தில் இணை யாத பட்சத்தில், யாரேனும் ஒருவர் அதன்
அடிப்படையில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.*

*கிரிமினல் குற்றத்துக்காக 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை பெறு தல்*

*ஒரு நபர் திருமண உறவில் இருக்கும்போது 7 ஆண்டுகளோ அதற்குக் கூடுதலாகவோ
கடுங்காவல் சிறை த்தண்டனை பெறும் குற்றம் இழைப்பின், பாதிக்கப்பட்ட துணை
விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய, பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்
மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமண ரத்து சட்டத்தின்கீழ் ஒரு
அடிப்படைக் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.*

*திருமண – உடல் உறவில் ஈடுபடாமல் இரு த்தல்*

*திருமணத்தின் அடிப்படையே அடுத்த சந்த தியினரை உருவாக்குவதே. அதற்கு மனத
ளவிலும் உடலளவிலும் முழு ஈடுபாடு அவசியம். கிறிஸ் தவர்களுக்கான 1969
விவாகரத்துச் சட்டத்திலும், பார்சி திருமணம் மற் றும் விவாகரத்துச்
சட்டத்திலும் தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் தவிர் ப்பது விவாகரத்து கோர
அடிப்படைக் காரணமாக உள்ளது.*

*பெண்களுக்கு மட்டுமே ஆனவை…*

*விவாகரத்து கோர ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான உரி மை உண்டு. இருப்பினும்,
சில அடிப்படைக் காரணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரை
யறுக்கப்பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறிய
தவறான உறவுமேற்கொள்ளுதல் ஆண், ஆணுடனோ, மிருகத்துடனோ உடலு றவு வைத்து
க்கொள்ளுதல்).*

*ஒருதிருமணம் சட்டப்படி நிலுவையில் இருக்கும்பொழுதே மறுமணம் செய்து கொள்ளுதல்.*

*இந்து திருமணச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து
வழக்கு தாக்கல் செய்யலாம். ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு இருந்தும் கணவன் திருமண
உறவில் ஈடுபடாமல் அதற்கான கடமை ஆற்றாமல் இருக்கும் போது… இந்து திருமணச்
சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ்
பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய் யலாம். ஒரு
பெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டா ல் அவள் 18 வயதுக்கு முன் அத
னை ரத்து செய்ய கோருதல்… இந்து திருமணச் சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இய
ற்றப்பட்ட இஸ்லாமிய திருமணங்கள் ரத்து சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ்
பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது விவாகரத்துவழக்கு தாக்கல் செய்யலாம்.*

*ஒரு சில நேரங்களில் தங்களுடைய திரும ண உறவு தொடர்வதனால் எந்தப் பயனுமே இல்லை
என்று நினைக்கும் தம்பதி, ஒருமன ப்பட்டு விவாகரத்து மனு தாக்கல் செய்யவும்
இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களுக் கான விவாகரத்துச் சட்டம், பார்சி
திருமணம் மற்றும் விவா கரத்து சட்டம், சிறப்புத் திரு மணச் சட்டம் ஆகிய
அனைத்துச் சட்டங்க ளின் கீழும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் கணவர்,
மனைவி இருவரும் விவாகரத்துக்கு முழுமனதுடன் சம்மதித்து அவர்களுடையஜீவனாம்சம்,
எதிர்கால வாழ்வாதாரம், குழந் தை இருப்பின் அவற்றின் காப்பாளர் உரிமை, அவரவர்
சொத்தின் மேலுள்ள உரிமை ஆகிய வற்றை முடிவுசெய்து, ஒரு தீர்வு கண்டபின், இந்த
மனமொத்த விவாகர த்து மனு தாக்கல் செய்யப்படும்.*

*இவ்வாறு தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்கு ஏற்றுக்
கொள்ளப்பட்டதிலிருந்து இறுதி விசாரணைக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க அனைத்துச்
சட்டங்களும் வகை செய்துள்ளது. இந்தக் கால அவகாசம் கொடுப்பதற்கான அடிப்படைக்
காரணம் – தம்பதி தங்களுக்குள் ஏற்பட் டுள்ள கருத்து வேற்றுமையை மறந்து
ஒன்றுகூட இந்த கால அவ காசம் உதவலாம் என்ற எண்ணமே. இந்த மனமொத்த விவாகரத்து மனு
தாக்கல் செய்த தினத்திலிரு ந்து 18 மாதங்கள் மட்டுமே நிலு வையில் இருக்கும்.
அதற்குள் விவாகரத்து பெறாவிடில் தள்ளு படி செய்யப்பட லாம். அதுபோல 6 மாதகால
அவகாசம் முடிந்து வழ க்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது இருவரில்
யாரேனு ம் ஒருவர் விவாகரத் துக்குச் சம்மதிக்காத பட்சத்திலும் வழக்கு
தள்ளு படி செய்யப்படலாம். பெரும்பாலா னோர் இந்த கால அவகாசம் தேவைய ற்றது என்று
எண்ணுவதன் காரணத்தி னால், திருமணச் சட்டங்களுக்கான சட்ட திருத்த மசோதாவிலும்
இயற்ற ப்பட்டுள்ளது.*

*விவாகரத்து மனு தாக்கல் செய்ய விரு ம்புபவர் மனதில் இருத்திக் கொள்ள
வேண்டியவை…*

*1. மனநல ஆலோசகரையோ, குடும்ப நல ஆலோசகரையோ சந்தித்தால் தீர்வு கிடைக்குமா
என்று யோசித்தல்.*

*2. முடிவில் விவாகரத்து அவசியமெனில் வழக்கு தாக்கல் செய்ய முடி வு செய்யலாம்.*

*3. வழக்குக்கான அடிப்படை தஸ்தாவேஜுகள் – அதாவது, திருமண பத்திரிகை, திருமண
பதிவு சான்றிதழ், திருமணத்தின் போது எடுத்த புகைப்படம், கணவனும் மனைவியுமாக
வாழ் ந்ததற்கான விலாச ஆதாரம், குழந்தைகளுக் கான பிறப்பு சான்றிதழ், எதிர்
தரப்பினர் செய் யும் தவறினை சுட்டிக்காட்டுவதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தயா
ராக உள்ளதா என்று கவனித்தல்.*

*4. கணவனுக்கோ, மனைவிக்கோ சேரக் கூடிய சொத்துகள், நகை மற்றும் தனிப் பட்ட
பொருள்கள், அவருக்குச்சேர வேண் டிய தஸ்தாவேஜுக ள், அவருக்குச்சேர வேண்டிய
விலையுயர்ந்த ஆபரணங்கள் இருப்பின் அவற்றுக்கான பட்டியல் தயா ரிப்பது அவசியம்.*

*5. விவாகரத்து வழக்கை கையாளும் நல்ல வழக்கறிஞரின் முகவரியை பெற்று அவரிடம்
ஆலோசனை பெறுதல்.*

*நம் நாட்டில் தன்னிச்சை யாக தாக்கல் செய்யப்படு ம் பெரும்பாலான விவா கரத்து
வழக்குகள் நிறை வாக மனமொத்த விவா கரத்து மனுவாக முடிவு பெறும் வாய்ப்புகள்
அதிக ம். ஒரு நல்ல தாம்பத்ய வாழ்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது
சகிப்புத்தன்மை, விட் டுக்கொடுத்து போவது, பரஸ்பர புரிதல், மரியாதை போன்றவை.
எந்த ஒரு தம்பதியும் சிறு சண்டை கூட இல்லாமல் தாம்பத்யம் நடத்துவது கனவிலும்
நடை பெறாத ஒன்று. திருமண உறவில் சிறு சிறு பூசல்கள் வரும்போது அவ ற்றை பெரிய
சண்டைகளாக மாற்றி நல்லறமாக இருக்கும் இல்லற வாழ்வை சீர்கு லைக்காமல் இருப்பது
நலம். சொர் க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதாகச் சொல்லும் திருமணங்களை நரகங்க
ளாக்கிக் கொண்டு நீதி மன்ற கதவுகளைத் தட்டுவது போன்ற பேதமை செயல் வேறொன்றும்
இல்லை!*

*எழுத்து வடிவம்: சாஹா*
*நன்றி குங்குமம் தோழி*
-- 

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



    *v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to