*பழநி மகிமை 12*

தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகனைப் போர் வீரனாகச் சித்தரிக்கும்
சூரசம்ஹார விழாவான கந்தசஷ்டி விழாவைக் கொண்டாடாத முருகன் கோயிலே இல்லை
எனலாம்.  தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் முருக அவதார காரணமாகிறார்.
ஐப்பசித் திங்கள்  வளர்பிறைக் காலத்தின் முதல் ஆறு நாட்களும்  தேவர்கள்
உண்ணாவிரதமிருந்து முருகனை இடையறாது துதிக்கிறார்கள்.

சூரபத்மனை ஜெயிப்பதற்காக அன்னை பராசக்தி வேல் கொடுப்பாள். அருணகிரிநாதர் இதை
அருமையாகப் பாடுகிறார்.
‘‘பம்பரமே போல ஆடிய
சங்கரி, வேதாள நாயகி,
பங்கய சீபாத நூபுரி, கரசூலி
பங்கமிலா நீலி, மோடி,
பயங்கரி, மாகாளி, யோகினி,
பண்டு சுராபான சூரனொடு
எதிர்போர்கண்டு

எம்புதல்வா! வாழி! வாழி!
எனும்படி வீறான வேல்தர
என்றுமுளானே!
(‘கொம்கனையார்’ திருப்புகழ்)

தாரகாசுரன், சிங்கமுகன் ஆகியோரை அழித்த பின் ஆறாம் நாளான சஷ்டி அன்று முருகப்
பெருமான் சூரசம்ஹாரம் செய்து, அவனைச் சேவலும் மயிலும் என இருகூறாக்கித் தன்
அருகிலேயே என்றென்றும் இருக்கும்படி வைத்துக்கொண்டான். இதையே திரும்ப
நடித்துக் காட்டும் விழாவாகக் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

‘‘கடற் ஜலந்தனியே ஒளிசூரனை
உடற்பகுந்து இரு கூறெனவே அது
கதித் தெழுந்தொரு சேவலுமாமலையில்
விடும்வேலவா”
(‘மனத்திரை’ - திருப்புகழ்)

கந்த சஷ்டி தத்துவத்தையே ஒரு பாடலின் பிற்பகுதியில்
கூறி நம்மை அசர வைக்கிறார் அருணகிரிநாதர்.

‘‘தன்வினாட்டரசாள்வான், வேணுவின்
உருவமாய்ப் பலநாளே” தானுறு
தவசினால் சிவன் ‘ நீபோய்
வானவர் சிறைதீரச்

சகல லோக்கியமே தானாளுறும்
அசுர பார்த்திபனோட சேயவர்
தமரை வேற்கண்டு நீறாயே படவிழமோதென்’
றருள, ஏற்றமரோடே போய் அவர்

உறையு மாக்கிரியோடே தானையும்
அழிய வீழ்த்தெதிர் சூரோடே அமர் அடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறைய மீட்டரனார்பால் மேவிய
அதிபராக்ம வீரா! வானவ பெருமாளே”

கற்பகத்தரு உள்ள அமராவதிக்கு அரசனான இந்திரன் சூரனுக்குப் பயந்து மூங்கில்
(வேணு) வடிவத்தில் பலநாட்கள் செய்த தவத்திற்கு இரங்கி, சிவபிரான் உன்னைப்
பார்த்து ‘‘நீ சென்று தேவர்களின் சிறையை நீக்கும் பொருட்டு எல்லாவிதமான உலக
இன்பங்களையும் அனுபவித்து வரும் அசுர அரசனாகிய சூரபத்மனுடன் அவனுடைய
பிள்ளைகளையம் சுற்றத்தாரையும் வேலாயுதத்தால் அவர்கள் தூளாகும்படி
அழியத்தாக்குவாயாக” என்று திருவாய் மலர்ந்து சொல்ல,

 அவ்வறிவுரையை ஏற்றுக்கொண்டு, போரிடச் சென்று அவ்வசுரர்கள் வசித்து வந்த
கிரௌஞ்ச மலையுடன் அவரது சேனைகளும் அழிந்து விழும்படிச் செய்து, எதிர்த்து வந்த
சூரனுடன், வலிய போர் செய்து அவனை அப்போரில் மாளச் செய்தும், தேவர்களைச்
சிறையிலிருந்து விடுவித்து சிவபிரானிடத்தில் திரும்பி வந்த மகா பராக்ரம வீரனே!
தேவர்கள் பெருமாளே” அருணகிரிநாதரின் இப்பாடலைக் கந்தபுராணச் சுருக்கம் என்றே
கூறுவார் மறைந்த மாமேதை திருப்புகழ் அடிமை திரு.எஸ்.நடராஜன் அவர்கள்!

பழநியில் கந்த சஷ்டி விழாவின்போது பக்தர்கள் பலவிதமான காவடிகளை எடுத்து
வருகின்றனர். ஆறுநாளும் துளசி நீர் மட்டுமே குடித்து உண்ணாவிரத நோன்பு
இருப்போர் பலர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டியின்போது விரதம் இருப்பர்.
சஷ்டியில் (விரதம் இருந்தால் அகப்பையில் (கரு) வரும் என்ற பழமொழி மருவிப்
போய், சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்றாகிவிட்டது.

மலைக்கோயிலுள்ள மலைக்கொழுந்து அம்மனுக்கு வெள்ளை புடவை சாத்தி வெள்ளை அரளி
முதலான வெண்ணிற பூக்களால் அலங்கரித்து, பராசக்தி சின்னக்குமரருக்கு வேல்
கொடுத்து அனுக்ரஹிக்கும் நிகழ்ச்சி நடித்துக் காட்டப்படுகிறது. ஆண்டுக்கொரு
நாள் நடக்கும் இவ்விழா நிகழ்ச்சியில் மட்டும்தான் சின்னக்குமரர் மலைக்கொழுந்து
அம்மனிடம் சக்திவேல் பெற்று தங்க மயில் வாகனத்தில் புறப்பாடாகி மாலை
பாதவிநாயகர் கோயில் வந்தடைவார். பின் ஊர்க்கோயிலிலிருந்து வரும்  தங்கமயில்
வாகனத்தில் புறப்பட்டு கிரி வீதியில் வந்து சூரசம்ஹாரம் செய்வார்.

வீரபாகு, மலையிலுள்ள வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்படுவார். மற்ற நான்கு
வீரர்களும் ஒரு கேடயத்தில் வைக்கப்பட்டு புறப்பாடாகி அனைவரும்
சின்னக்குமரரிடம் வந்து சேர்ந்து கொள்வர். ஊர்க்கோயிலிலிருந்து விநாயகர்
வெள்ளி மூஷிக வாகனத்திலும் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சமேதராய் வெள்ளி
மயிலிலும் புறப்பாடாகி மாலை பாத விநாயகர் கோயில் வந்தடைவர்.

கிரி வீதியிலுள்ள நான்கு மயில் சிற்பங்களை ஒட்டி சூரன் வதை நடைபெறும்.

தாரகாசுரன் வடக்கு கிரிவீதியிலும், பானுகோபன் கிழக்கு கிரி வீதியிலும், சிங்க
முகன் தெற்கு கிரிவீதியிலும், சூரபத்மன் மேற்கு கிரிவீதியிலும் சம்ஹாரம்
செய்யப்படுவர். சூரசம்ஹார நிகழ்ச்சி முடியும்வரை முத்துக்குமரர் மீனாட்சி
மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்.

சம்ஹாரம் முடிந்ததும் சின்னக்குமரருக்கும், முத்துக் குமரருக்கும் தீபாராதனை
காட்டப்படும். பின் சின்னக்குமரருடன் மற்ற வீரர்களும் மலைக்குத்
திரும்புகின்றனர். முத்துக்குமரர், வள்ளி தெய்வானையுடன் பூக்களால்
அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில், வெள்ளி மயிலில் ஏறி (மயிலாய் மாறிய
சூரபத்மன்) விநாயகருடன் ஊர்க்கோயில் ரதவீதிகளில் வலம் வந்து புறப்பட்ட
இடத்திற்கு வந்தடைவர்.

‘‘அஷ்ட லட்சுமிகளில்
வீரலட்சுமிக்கு விருந்து உணவாகக்
சூரபத்மாவைத் துணித்த கை அதனால்
இருபத்தெழுவர்க்கு உவந்து அமுது அளித்த
குருபரன், பழநிக் குன்றிலிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி!
என்னைத் தடுத்தாட்கொள்ள என்றனுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனாபதியே போற்றி!
(கந்த சஷ்டிக் கவசம்)
என்று உள்ளம் துதிக்கிறது.

8 - திருக்கார்த்திகைத் திருவிழா
திருமயிலையில் ஞானசம்பந்தப் பெருமான்,
பூம்பாவையை உயிர்ப்பிக்கையில்
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்திள முலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”
என்று கேட்குமளவு பிரசித்தி பெற்றது திருக்கார்த்திகை நாள்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் நிறைமதியோடு கூடிய கிருத்திகை
நட்சத்திர நாளை திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் அழைப்பர்.
அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி எனும் ஆறு கார்த்திகைப்
பெண்கள்  குழந்தை முருகனுக்குப் பாலூட்டி ஆதரித்த காரணத்தினால் கிருத்திகை
விரதம் மிக உயர்ந்த விரதமாகக் கருதப்படுகிறது. இதனால் முருகன் கார்த்திகேயன்
எனும் பெயரையும் பெறுகிறான்.

‘‘முருக, க்ஷடாக்ஷர, சரவண, கார்த்திகை முலைநுகர்பார்த்திப” என்று அருணகிரியார்
பாடுகிறார். ‘‘குமரகுர கார்த்திகைப் பெருமாளே” (பிறவியலை
திருப்புகழ்)‘‘முருக, சரவண, மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக”(சீர்பாத
வகுப்பு)

முருகனுக்கு ஆறு கார்த்திகைப் பெண்களுடைய இந்த நெருங்கிய தொடர்பினை
ஆறுமுகங்களும் குறிப்பிடுகின்றன என்றும் கொள்ளலாம். ‘‘மகிழ்ச்சியால் மக்கள்
ஏற்றிய விளக்குகள் அடுக்கடுக்காய் இலவ மலர்கள் போல் அமைந்துள்ளன” என்று
சங்ககாலத்திலேயே ஔவையார் வர்ணித்திருப்பதிலிருந்து இத்திருநாளின் தொன்மை
நமக்கு விளங்குகிறது.

பழநியில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா சேக்கிழார்
திருக்கூட்டத்தாரால் முதல்நாள் துவங்கி வைக்கப்படுகிறது. சின்னக் குமாரர்
நாள்தோறும் தங்க விமானத்திலும் கார்த்திகையன்று தங்க மயில் வாகனத்திலும்
மலையின் உட்பிராகாரத்தில் வலம் வருவார். வெளிப்பிராகாரத்தில் தங்கரதத்தில் உலா
வருவார். கார்த்திகை தீபம் எனும் கார்த்திகை ஜோதியாகச் சொக்கப்பனை ஏற்றுவது
சிறப்பாக நடைபெறுகிறது.

‘‘தீபமங்கள ஜோதி நமோ நம”
‘‘தீப விளக்கம் காண எனக்கு உன் சீதளபத்மம் தருவாயே”
‘‘விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே” என்று பலவிதமாகத் துதிக்கிறார்
அருணகிரியார்.ஒவ்வொரு கார்த்திகைதோறும் மலைக்கோயிலில் திருக்கோயில் சார்பில்
திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள்
காணிக்கைக் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம். பௌர்ணமியிலும் திருவிளக்கு
பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

9 - மார்கழி திருப்பள்ளி எழுச்சி நாட்கள்

மார்கழி மாதம் முழுவதும் பழநியில் திருப்பள்ளி எழுச்சி திருநாட்களாகக்
கொண்டாடப்படுகின்றது. அன்றாடம் அதிகாலை நான்கு மணிக்கு மலைக்கோயில்
திறக்கப்படுகிறது. முப்பது நாட்களும் திருப்பாவை, திருவெம்பாவை பள்ளி
எழுச்சிப் பாடல்கள் கோயில்களில் ஒலிபரப்பப்படுகின்றன. ஆங்கிலப் புத்தாண்டு
தினத்தன்று அதிகாலை முதல் பக்தர்கள் பழநி ஆண்டவனை வழிபடுகின்றனர்.

10 - தைப்பூசப் திருவிழா

பத்து நாட்கள் விழாவாகப் பழநியில் கொண்டாடப்படுவது தைப்பூசத் திருவிழா.
சிவபெருமான் தனது ஐந்தொழில் நடனமான ஆனந்த தாண்டவம் ஆடிய திருநாளே தைப்பூச
நன்னாள் ஆகும். தாரகாசுரனை வென்றுவர, அன்னை முருகனுக்கு வேல் எடுத்துக்கொடுத்த
நன்னாளும் இதுதான் என்றும் கூறுவர்.  பக்தர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் காவடி எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக
வருவது இவ்விழாவின் மிகப் பெரிய சிறப்பாகும். திண்டுக்கல்லிலிருந்து பழநிவரை
பக்தர்களுக்கு நடந்துவர வசதியாகச் சாலையை ஒட்டி தனி நடைபாதை அமைக்கப்பட்டு
வருகிறது. விழாவின் கொடியேற்றம் பெரிய நாயகி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது.
பலவித வாகனங்களிலும் திருத்தேர்களிலும் ஊர்வலம் வரும் ஆண்டவனைக் காணக் கண்கோடி
வேண்டும்.
சித்ரா மூர்த்தி

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Inline image 13]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: Dancing smiley animated emoticon]    *v **a n a k k a m**  S u b
b u*   [image: Dancing smiley animated emoticon]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to