---------- Forwarded message ----------
From: p.v. narayanan
Date: 2016-04-14 20:10 GMT+05:30
Subject: Fwd: துர்முகி ஆண்டு
To:




Subject: துர்முகி ஆண்டு
To:


“மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை
உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம்.
வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும்
பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால்
முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை
அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால்
போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை
உண்டாகும்.” – Mahaperiyava in Dheivathin Kural Volume 1

14/4/2016 வியாழக்கிழமை பிறக்கிறது.

“துர்முகி” என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க
வேண்டியதில்லை. “துர்முகி” என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வோரு
தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. துர்முகி
புத்தாண்டின் பெயரில் தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது?

“துர்முக” என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு
முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக
ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின்
அதிதேவதை ஶ்ரீஹயக்ரீவர். ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம்,
நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான்.

இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஶ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத்
துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், ஶ்ரீஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய
இப்புத்தாண்டிற்கு “துர்முகி” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது, பரி (குதிரை)
முகத்தைத் கொண்டுள்ள ஶ்ரீஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத்
திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சம்மாக எடுத்துக்காட்டுகிறது.

Let us all pray our Kanchi Guruparampara to bless us all for a prosperous
New Year

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

-- 

T. PARAMASIVAN





-- 
P.V.NARAYANAN

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to