எக்ஸெல் டிப்ஸ்…டேட்டாவிற்கேற்ற பார்மட்:

டேட்டாவிற்கேற்ற பார்மட்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள
டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர்
மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம்
ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும்.
ஆனால், பலர், இதனால் நேரம் அதிகமாகிறது என்று எண்ணுகின்றனர். நேரத்தை
வீணடிக்கக் கூடாது என்பதற்காகவே, எக்ஸெல் சில ஷார்ட் கட் கீகளைத் தருகிறது.
அவற்றை கீழே காணலாம்.

Ctrl+Shift+~ பொதுவான பார்மட்
Ctrl+Shift+! எண்களுக்கானபார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான
கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும்,
நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+#தேதி அமைப்பதற்கான பார்மட்
Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல்
மற்றும் பிற்பகலும் (am/pm) அமைக்கலாம்.
Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.
பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட: எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப்
பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம்.
இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை
டயலாக் பாக்ஸின் இடது பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள
கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview
என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ
எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.
அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு
செய்தால், கீழே தந்துள்ளபடி செட் செய்திடவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties
கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க் ஷீட் மேலாக, சுருக்கமாக
properties காட்டும்.
2. அடுத்து Document Propertiesஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக்
செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல்
இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents
என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.
ஸ்கிரீன் டிப்ஸ் தேவையில்லையா?
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான்
அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான்
எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது
நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து
பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு
விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட,
எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007ல், ஆபீஸ்
பட்டன் அழுத்தி, பின்னர் கிடைப்பவற்றில், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக்
செய்திடவும். எக்ஸெல் 2010 தொகுப்பில், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து
அதில் Options என்பதனைக் கிளிக் செய்திடுக.
2. டயலாக் பாக்ஸில், இடது பக்கம், Popular (Excel 2007) அல்லது General (Excel
2010) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுக.
3. இங்கு கிடைக்கும் ScreenTip Style கீழ்விரி பட்டியலைத் திறந்திடுக. இங்கு
Don’t Show ScreenTips என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கொடுத்து வெளியேறவும்.
இனி ஸ்கிரீன் டிப்ஸ் தோன்றாது.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to