அருள் விருந்து

   - ஆசைகளை அகற்றும் அளவு ஒருவன் தூயவனாகிறான்.
   - தெய்வத்தை நம்புவதால் உள்ளத்தில் உறுதியும் நேர்மையும் இயல்பாகவே
   உண்டாகின்றன.
   - ஒரு நாட்டில் சட்டம் அதிகரிக்கும் அளவு குற்றம் செய்யும் தன்மையும்
   மக்களுக்கிடையில் அதிகரிக்கும்.
   - வற்றாத ஊற்றாயிருந்து வழங்கவல்லது தேங்கிய மனம்.அக்ஷய பாத்திரம் என்று
   இயம்பப் படுவதும் அதுவே.
   - மன்னுயிரின் நலத்தில் தன்னுயிரை மறந்திருக்கும் வேளையில்தான் மனிதன்
   உண்மையாக வாழ்ந்திருக்கிறான்.
   - சோம்பித்திரிபவன் சான்றோன் ஆவதில்லை. பேருழைப்பிக்கிடையில்
   அமைதியுற்றிருப்பவன் சான்றோன் ஆகிறான்.
   - தேட்டையுள் (செல்வத்துள்) பெரியது அமைதி. அமைதியுற்றிருப்பவன்
   அனைத்தையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான்.
   - கட்டிடம் ஒன்றின் அஸ்திவாரம் பூமியுள் ஆழ்ந்து புதையுமளவு அது மேலே எழ
   வல்லதாகிறது. பணியுமளவு ஒருவன் மேலோன் ஆகிறான்.
   - சேவை செய்யாதவர்களுக்கு வாழ்க்கை வெற்றியுடையதாகாது. சேவை
   செய்கின்றவகளுக்கு வெற்றியும் மனத் தூய்மையும் உண்டாகின்றன.
   - யாசகன் ஒருவன் அருவருப்பை உண்டு பண்ணுகிறான். தாராளமான மனப்பான்மை அடையாத
   பணக்காரனோ அதைவிடப் பெரிய அருவருப்பை உண்டுபண்ணுகிறான்.
   - தங்களை அறியாமலும், விளம்பரம் செய்யாமலும் பக்தர்கள் உலகுக்கு உதவி
   புரிகின்றனர். அவர்கள் புரிகின்ற உதவிக்கு நிகரானது வேறு எதுவும் எவ்வுலகிலும்
   இல்லை.
   - -=-=-=-=-=-=-=-=-=-=                  தவத்திரு சித்பவானந்தர் அவர்களின்
   அருள்விருந்து  .

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to