tamil.gizbot.com Read Later
கூகுள் விருது வென்ற சென்னை சிறுவன்.!
   
   - by Meganathan 
   -  July 21, 2016 
   -  1 min read 
   -  original
"கூகுள் கம்யூனிட்டி இம்பாக்ட் விருது எனக்கு மிகவும் முக்கியத்துவம் 
வாய்ந்ததாகும். இதன் மூலம் அதிகம் கற்று கொள்வதோடு எனது எண்ணங்களை மேலும் 
மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்," என ரமேஷ் தெரிவித்துள்ளார்.ரமேஷ் மீனவர் 
பாதுகாப்பிற்கு வழி செய்யும் வகையில் "FishErmen Lifeline Terminal (FELT)" என்ற 
தலைப்பில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்திருக்கின்றார். இந்தக் கருவியானது 
இந்தியாவின் ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள் வழங்கும் நேரடி ஸ்டான்டர்டு பொசிஷன் 
சர்வீஸ் Standard Position Services (SPS) பயன்படுத்தி மீனவர் பாதுகாப்பினை உறுதி 
செய்யும்."ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி 
தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்த செய்திகளை படித்திருக்கின்றேன். கடலில் 
அதிக நேரம் செலவழிக்கும் மீனவர்கள் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை 
காத்துக் கொள்ள இந்தக் கருவி உதவும்" என ரமேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.சமூகத்தினை 
சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் வளங்கள் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதில் 
மாற்றம் அடையச் செய்யும் கண்டுபிடிப்பாளரை ஊக்கப்படுத்தும் வகையில் கூகுள் சமூக 
மாற்றத்திற்கான விருது வழங்கப்படுகின்றது."சிறுவர்களின் மனது மிகவும் 
வித்தியாசமானது, மற்றவர்கள் கடினமாக நினைப்பவற்றை முயற்சிக்கும் நோக்கம் 
கொண்டவர்கள். இவர்களுக்குச் சரியான ஊக்கமளிக்க வேண்டியது நமது கடமை" எனக் கூகுள் 
நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உலகம் முழுவதிலும் இருந்து 
அனுப்பப்பட்டவற்றில் கூகுள் நிறுவனம் சுமார் 100 திட்டங்களைத் தேர்வு செய்தது, 
இதில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 14 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டப்பது 
குறிப்பிடத்தக்கது.prevnextShow Thumbnail

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to