பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும்; குறிப்பாக
தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாற்றைப் பார்க்க வேண்டுமானால்
நாம் சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 நோக்கி செல்ல வேண்டும். பொங்கல்
என்பது சமஸ்கிருத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை
பண்டிகையாக அறியப்பட்டாலும் கூட, வரலாற்று அறிஞர்கள் இந்த பண்டிகையை சங்க
காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என நம்புகின்றனர்.

இப்போது சங்க கால பொங்கல் பற்றியும், பொங்கல் பண்டிகை பற்றிய
புராணக்கதைகளையும், பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றியும் பார்ப்போமா!!!

[image: சங்க கால பொங்கல் பற்றிய ஒரு பார்வை (தை நீராடல்)]சங்க கால பொங்கல்
பற்றிய ஒரு பார்வை (தை நீராடல்)

சங்க காலத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக
மாறியுள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தை நீராடலின் போது சங்க கால
பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர். பல்லவர்களின்
ஆட்சி காலத்தில் (கி.பி. 400-கி.பி.800) இது மிகவும் முக்கியமான பண்டிகையாக
விளங்கியது. தமிழ் மாதமான மார்கழியின் (டிசம்பர் - ஜனவரி) போது இது
கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது நாட்டில் மழையும் வளமும் செழிக்க
வேண்டி இளம் பெண்கள் வேண்டுவார்கள்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை  நூல்கள் நமக்கு சங்க
காலத்தில் தைப் பொங்கல் கொண்டாடியதைச் சிறப்பித்துக் கூறும்.


[image: சங்க கால பொங்கல் பற்றிய ஒரு பார்வை (தை நீராடல்)]
சங்க கால பொங்கல் பற்றிய ஒரு பார்வை (தை நீராடல்)

இந்த மாதம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பார்கள். தங்கள்
முடிக்கு எண்ணெயிட்டு கொள்ள மாட்டார்கள். மேலும் பேசும் போது கடுமையான சொல்லை
பயன்படுத்த மாட்டார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து
விடுவார்கள். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் தெய்வத்தின் சிலையை
அவர்கள் வணங்கி வந்தார்கள். தை மாதத்தின் (ஜனவரி - பிப்ரவரி) முதல் நாள்
தங்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள். நெற்பயிர்கள் செழிப்பதற்காக அளவுக்கு
அதிகமான மழையை கொண்டு வருவதற்காகவே இந்த நோன்பு. பழமை வாய்ந்த இந்த மரபுகளும்,
சடங்குகளும் தான் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது.
[image: திருப்பாவை மற்றும் திருவெம்பாவை]
திருப்பாவை மற்றும் திருவெம்பாவை

தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும்
சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின்
திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. குலோத்துங்கா
என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலையத்தை பரிசாக அளிப்பார். அதிலும் குறிப்பாக
பொங்கல் பண்டிகையின் போது என திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
[image: பொங்கல் பண்டிகை பற்றிய புராணக்கதைகள்]
பொங்கல் பண்டிகை பற்றிய புராணக்கதைகள்

பொங்கல் பண்டிகையுடன் சில புராணக்கதைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பொங்கல்
பற்றிய புகழ் பெற்ற இரண்டு வரலாற்று கதைகள் உள்ளது - ஒன்று சிவபெருமானுடன்
தொடர்புடையது, மற்றொன்று இந்திர தேவனுடன் தொடர்புடையது.
[image: சிவபெருமான் மற்றும் நந்தி]
சிவபெருமான் மற்றும் நந்தி

புராணத்தின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே
மனிதர்களிடம் தினமும் எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே
உண்ணுமாறு கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும்
உண்ணவும் மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் அனைவரிடமும் கூறி விட்டது.
இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில்
வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழ
வேண்டும் என கூறினார். அதனால் தான் இந்த நாளில் மாட்டிற்கு தொடர்புண்டு.
[image: கிருஷ்ணர் மற்றும் இந்திர தேவன்]
கிருஷ்ணர் மற்றும் இந்திர தேவன்

இந்திர தேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட மற்றொரு புராணத்தாலும்
பொங்கல் கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசனானதால் மிகவும்
கர்வத்துடன் இருந்து வந்த இந்திர தேவனுக்கு பாடம் புகுத்த எண்ணினார் குழந்தை
பருவத்தில் இருந்த கிருஷ்ணர். ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் இனி இந்திர தேவனை
வணங்க வேண்டாம் என கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திர தேவன், புயல் மழையை
உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது.
கிருஷணரோ மனிதன் இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து
கொண்டார். பின் தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார்
இந்திர பகவான்.

பொங்கல் கொண்டாட்டங்கள்

இந்து புராணங்களின் படி, 6 மாதங்களாக நிலவி வரும் நீண்ட இரவுகளுக்கு பிறகு
வரும் கடவுள்களின் தினம் தான் இது. மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த
பண்டிகை, தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் உருக்கமான
அறுவடை திருவிழாவாகும். பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு
கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை மற்றும் நெல்
அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும்
விவசாயிகள் வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான்
நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள்.
[image: நான்கு நாள் பண்டிகை]
நான்கு நாள் பண்டிகை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான
போகிப்பொங்கல், குடும்பத்திற்கானது. இரண்டாம் நாளான சூரியப் பொங்கல் சூரிய
பகவானை வழிபடுவதற்கான நாளாகும். மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல், மாடுகளை
வழிபடுவதற்கான நாளாகும். இந்த நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு
அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிடப்படும். கடவுளுக்கு
படைத்த பின், அந்த பொங்கல் கால்நடை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்
உண்ணுவதற்கு வழங்கப்படும்.
நான்கு நாள் திருவிழா

பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
போகி
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Festival_crop_India_pongal_Tamil_word_14.jpg>
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் *பூலாப்பூ (அ) காப்புக்கட்டு*
முதன்மைக் கட்டுரை: போகி

   - போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையாளம் கொண்டு வேளாண்மையை
   மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
   - போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும்
   நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.
   பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு
   பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
   - பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி
   கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல்
   வழக்கம்.ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.
   - அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம்
   இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள்,
   அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.JPG>
மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் மாடுகள்
மாட்டுப் பொங்கல்
முதன்மைக் கட்டுரை: மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே
இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை
மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!

பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி
மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
முதன்மைக் கட்டுரை: காணும் பொங்கல்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D>

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும்
உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில்
நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
பொங்கலை ஒத்த பிற விழாக்கள்

வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும்
நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும்
சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள்.
பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம்
உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை
மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும்
தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக் காெண்டாடினர்.
தமிழக அரசுகள் செய்த மாற்றங்கள்

2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே
தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது. சூரியன்
அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த
மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு
என்றும் கூறப்பட்டது. அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது
வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011 வரையிருந்த
தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச்
சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.

2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே
அதிருப்தியை உருவாக்கியது.  தமிழக அரசுக்கு தமிழகப் பாரம்பரிய விடயங்களில்
தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆகத்து 23, 2011ல்
தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.. அதற்கு
2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

[image: Law Article]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to