🙏

On Fri, 5 Mar 2021 at 15:14, subra manian <[email protected]> wrote:

> மகா சிவராத்திரி நாளில் அன்னதானம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா ?
>
> மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு
> அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும்,
> கோவிலின் மண்டபத்திற்குள்ளும், அன்னதானப் பிரியர்கள் பக்தர்களுக்கு
> அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம்
> கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின்
> சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்து கொள்வது
> அவசியமாகும்.
>
> உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக்
> கூறுகின்றன. நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என
> இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து
> சம்பாதிக்கிறோம். ஆனால், அந்த சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு,
> தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க
> கண்விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.
>
> மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும்
> கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து,அவரின் திருநாமங்களையும், அவரது
> பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு
> சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு
> நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.
>
> மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து
> முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து
> முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி
> விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் நம்முடைய
> முன்னோர்களும் செய்து வந்தனர்.
>
> சிவராத்திரி நாளன்று அனைத்து சிவன் கோவில்களிலும், அன்னதானம் கொடுக்கிறேன்
> என்று அநேகம் பேர், கேசரி, சாம்பார் சாதம், காய்கறி சாதம், தயிர் சாதம் என
> வரிசை கட்டி நின்று கொடை வள்ளலாக மாறி வாரி வழங்கி வருகின்றனர். அன்னதானம்
> தான் இருப்பதிலேயே மிக உயரிய தானம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை எதற்கு
> எப்போது கொடுப்பது என்ற ஒரு நியதி உண்டு. அப்படி செய்தால் தான், அன்னதானம்
> கொடுப்பவருக்கும், அதைப் பெறு பவருக்கும் உரிய பலனைக் கொடுக்கும்.
>
> நம்முடைய ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது உணவும் உறக்கமும் தான். இந்த
> இரண்டையும் கட்டுப்படுத்தினாலே, ஐம்புலன்களும் தானாகவே கட்டுக்குள் வந்து
> விடும். அப்படி கட்டுப்படும் போது, நம் மனதிற்குள் இறையுணர்வு தானாகவே வந்து
> விடும். அப்போது நாம் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். இதைத் தான்
> சிவராத்திரி விரதம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
>
> நம்மைப் படைத்த பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களும் முனிவர்களும், அட அன்னை
> பராசக்தி யே உண்ணாமல் சிவராத்திரி விரதமிருந்து இறைவனை வழிபடும் போது, நாம்
> ஒரு நாள் உணவை தியாகம் செய்வதால் ஒன்றும் கெட்டுவிடாது. அதோடு, சிவபெருமான்
> சதாசர்வ காலமும் தியான நிலையிலேயே அமர்ந்திருப்பவர். ஆரவாரத்தை அறவே
> வெறுப்பவர். அவருக்கு பிடித்தது ஏகாந்தமான அமைதி தான்.
>
> அதனால் தான் கோவிலுக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க செல்லும்போது, அமைதியாக
> வந்து தரிசித்து அமைதியாக வெளியேற வேண்டும் என்று முன்னோர்கள்
> கூறியிருக்கின்றனர். எனவே, இனியாவது சிவராத்திரி தினத்தில் அன்னதானம்
> கொடுப்பதை தவிர்த்து விரதமிருப்பவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையாகும்
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/593525037.849323.1614937352957%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/593525037.849323.1614937352957%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo8UBM%2BAd9tP3TvquBg%3DhLMAA7CVLikn5NqPF9jE7b_oQ%40mail.gmail.com.

Reply via email to