Pranam
  as recd from our member:"There was a famous writer by name  Pe. Naa.
Appuswami ,who used to write interesting science  articles and nice
anecdotes about our past Kings and poets. In the pre-independence days,he
used to regularly contribute to the Ananda Vikatan Deepaavali Malars. Once such
a contribution  came to my mind.  Even though that Deepaavali Malar is now
not with me, I tried to recollect  them from memory and have reproduced the
same here. Naturally the original of PNA would be far more beautiful to
read!
போஜ மஹராஜர்  கலைஞர்களை ஆதரிப்பவர்..
தேடி வந்து பாட்டிசைக்கும் புலவர்களுக்கு பலமுறை  நன்கு அலங்கரித்த
யானைகளையே  பரிசாகக்கொடுப்பதும் உண்டு .
 ஒரு சமயம் பார்வதீ தேவியானவள் பாலகணேசனை  அன்புடன் அணைத்துக்கொண்டிருக்கும்
ஒவியம்  ஒன்று பார்வைக்கு வந்தது
           கலைஞர்களை  ஆதரிக்கவும் அரசர் , புலவர்களுக்கு  அடிக்கடி புதிரும்
போடுவார் .அரசர்  இந்த சித்திரத்திற்கு  தகுந்த விளக்கம் அளிக்கும்படி
புலவர்களிடையே  ஒரு போட்டி  வைத்தார் !
  அப்போது அரசவைக்கு வந்த ஒரு  ஏழைப்புலவர்  அரசே ! நான்
இதற்கு விளக்கம் கூறுகிறேன் என முன்வந்தார். அவர் கொடுத்த விளக்கம் :
        போஜ மகாராஜர் அன்புடன்  யானைகளையே  பரிசாகத்தருவதைக்கண்ட  பார்வதி
தேவி ,. எங்கே தனது மகனையும்  யாருக்காவது  பரிசாகத்தந்துவிடுவானோ  என்ற
பயத்தில் ,
தன்  மகனைத்தன்னுடன்  இருகக்கட்டியணைத்துக்கொண்டு  இருக்கிறாள் !
   புலவரின் இந்த விளக்கத்தைக்கேட்ட  அரசன்  மிக்க மகிழ்ந்து
அந்தப்புலவருக்கு  பதினாறு யானைகளை பரிசாகக்கொடுத்து    அனுப்பினான் !
KR
தமிழறிஞர் வரிசை – பெ.நா. அப்புசாமி
 என் பதின்ம வயதுகளில் Men of Mathematics
<https://siliconshelf.wordpress.com/2020/03/24/18623/> என்றால் ஏழெட்டு
வயதில் பெ.நா. அப்புசாமி விஞ்ஞானிகள் பற்றிய எழுதிய இரண்டு தொகுப்புகள்.
அந்தக் காலத்தில் என் வயதுப் பையன்களிடம் நீ பெரியவனாகி என்ன ஆகப்போகிறாய்
என்று கேட்டால் கலெக்டர், டாக்டர், அரசு வேலை, 4 figure salary, கிரிக்கெட்
வீரன், நடிகன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் விஞ்ஞானி ஆகப்
போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அறிவியல் பற்றிய பிரக்ஞையை
உருவாக்கியவர் அப்புசாமிதான். (எனக்கு ஒரு பிம்பமும் இருந்தது – குறுந்தாடியோடு
கண்ணாடியும் வெள்ளை நிற ஏப்ரனும் அணிந்து டெஸ்ட் ட்யூப்களில் வண்ண வண்ண
திரவங்களை கலந்து கொண்டிருப்பதுதான் விஞ்ஞானிக்கு முக்கிய அடையாளம், டெஸ்ட்
ட்யூப்களிலிருந்து புகை வர வேண்டியது மிக அவசியம்)

<https://siliconshelf.files.wordpress.com/2020/03/pe_naa_appusami.jpeg>பெ.நா.
அப்புசாமியின் இரண்டு வால்யூம் புத்தகங்களையும் ஏழெட்டு வயதில் கிராம
நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது எனக்கு இன்றும் அழியாத நினைவுதான்.
இன்னும் எந்த அத்தியாயத்தில் யாரைப் பற்றி எழுதினார் என்பது கூட
நினைவிருக்கிறது. அரிஸ்டாட்டில் (நான்காவது அத்தியாயம்), கேலன்
<https://en.wikipedia.org/wiki/Galen> (ஆறாவது அத்தியாயம்), வெசாலியஸ்
<https://en.wikipedia.org/wiki/Andreas_Vesalius> (ஒன்பதாவது
அத்தியாயம்), ராபர்ட்
ஹூக் (17-ஆவது அத்தியாயம்?), நியூட்டன் (18ஆவது அத்தியாயம்) பற்றி எழுதியவை
இன்னும் நினைவிருக்கின்றன. எனக்கு அறிவியலில், கணிதத்தில் ஆர்வம் பிறந்ததற்கு
முக்கியமான காரணம் இந்தப் புத்தகங்கள். முக்கியமான விஷயம், ஏழெட்டு வயது
பையனுக்கு எல்லாம் புரிந்துவிடவில்லை, ஆனால் நிறைய புரிந்தது. அதனால்
அறிவியலில் ஆர்வம் வலுத்தது.

அப்புசாமி அசப்பில் என் பெரியப்பா பி.எஸ்.ஒய். நாராயணன் போல இருப்பார்.
அதுவும் அவரது கவர்ச்சிக்கு ஒரு காரணம்.

பிற்காலத்தில் நினைத்ததுண்டு – இந்தப் புத்தகங்கள் நூலகங்களில் ஆயிரம்
பிரதிகள் இருந்திருக்குமா? இரண்டாயிரம் பேர் படித்திருப்பார்களா? 100
பேருக்காவது அறிவியலில் ஆர்வம் பிறந்திருக்குமா? 100 பேர் வாழ்க்கையை தன்
புத்தகங்கள் மூலம் மாற்றினார் என்றால் அது எத்தனை பெரிய சாதனை!

அவரைத் தவிர அந்தக் காலத்தில் “கல்வி” கோபாலகிருஷ்ணன் என்று ஒருவரும் அறிவியல்
பற்றி எழுதினார். குறிப்பாக ஒரு விஞ்ஞானியின் மகன் ஏதோ மாத்திரையை
சாப்பிட்டுவிட்டு மினியேச்சர் சிறுவனாக மாறி மனித உடலுக்குள் சென்று ரத்தம்,
குடல், பாக்டீரியாவைப் பார்ப்பது என்று போகும். ஆனால் அவர் சிறுவர்களுக்காக
எழுதுகிறார் என்பது அந்த வயதிலேயே தெளிவாகவே தெரியும். அவ்வப்போது
குழந்தைத்தனமாக இருக்கும். அப்புசாமி வேறு லெவலில் இருந்தார். அவர் எழுதியது
சிறுவர்களுக்காக அல்ல, ஆனால் சிறுவர்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றைத் தவிர தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுதிய “அப்போலோ கண்ட விண்வெளி
விஞ்ஞானம்” என்ற புத்தகமும் என் கனவுகளைத் தூண்டியது. நாசாவைப் பற்றிய
புத்தகம், நிறைய புகைப்படங்கள். அன்றைய விலை பத்து ரூபாய்!

தமிழில் அறிவியலை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று வாழ்க்கை முழுவதும்
முனைந்தவர் அப்புசாமி. வேறு சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.
கலைக்கதிர் என்ற
அறிவியல் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அவருக்கு எத்தனை
ஜே போட்டாலும் தகும்.

On Thu, 13 May 2021 at 02:55, Srinivasan Sridharan <
[email protected]> wrote:

>      Greetings.
> There was a famous writer by name  Pe. Naa. Appuswami ,who used to write
> interesting science  articles and nice anecdotes about our past Kings and
> poets.
> In the pre independance days,he used to regularly contribute to the Ananda
> Vikatan Deepaavali Malars.
>           . Once such contribution  came to my mind.
>  Even though that Deepaavali Malar is now not with me, I tried to
> recollect
>  them from memory and have reproduced the same here.
>    Naturally the original of PNA would be far more beautiful to read!
>                                     Sridharan
>
>
>
>
>                   போஜ மஹராஜர்  கலைஞர்களை ஆதரிப்பவர்..
> தேடி வந்து பாட்டிசைக்கும் புலவர்களுக்கு பலமுறை  நன்கு அலங்கரித்த
> யானைகளையே  பரிசாகக்கொடுப்பதும் உண்டு .
>
>  ஒரு சமயம் பார்வதீ தேவியானவள் பாலகணேசனை  அன்புடன் அணைத்துக்கொண்டிருக்கும்
> ஒவியம்  ஒன்று பார்வைக்கு வந்தது
>            கலைஞர்களை  ஆதரிக்கவும் அரசர் , புலவர்களுக்கு  அடிக்கடி புதிரும்
> போடுவார் .அரசர்  இந்த சித்திரத்திற்கு  தகுந்த விளக்கம் அளிக்கும்படி
> புலவர்களிடையே  ஒரு போட்டி  வைத்தார் !
>   அப்போது அரசவைக்கு வந்த ஒரு  ஏழைப்புலவர்  அரசே ! நான்
> இதற்கு விளக்கம் கூறுகிறேன் என முன்வந்தார். அவர் கொடுத்த விளக்கம் :
>         போஜ மகாராஜர் அன்புடன்  யானைகளையே  பரிசாகத்தருவதைக்கண்ட  பார்வதி
> தேவி ,. எங்கே தனது மகனையும்  யாருக்காவது  பரிசாகத்தந்துவிடுவானோ  என்ற
> பயத்தில் ,
> தன்  மகனைத்தன்னுடன்  இருகக்கட்டியணைத்துக்கொண்டு  இருக்கிறாள் !
>    புலவரின் இந்த விளக்கத்தைக்கேட்ட  அரசன்  மிக்க மகிழ்ந்து
> அந்தப்புலவருக்கு  பதினாறு யானைகளை பரிசாகக்கொடுத்து    அனுப்பினான் !
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop3vxUguO%3DGnfC0vHaZYp4dXVXuHjrVKM8vTMa-3h0EvQ%40mail.gmail.com.

Reply via email to