இதை செய்தால்
முழு ஆரோக்கியமாக வாழலாம்

மருந்து மாத்திரை வேண்டாம்
தீவிர உடற்பயிற்சி வேண்டாம்
தீவிர யோகாசனம் வேண்டாம்
அதிக உணவு திங்க வேண்டாம்
அப்படி என்றால் என்ன தான் செய்ய வேண்டும்

நம் உடம்பு இயற்கையாகவே நேரம் தவறாமல் சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.
அதற்கு நாம்  ஒத்துழைத்தால் போதும்.

கடவுளின் மர்மம் நமது உள்ளுறுப்புகள் என்ன செய்கிறது
எப்போது செய்கிறது
எப்படி செய்கிறது
எது எது செய்கிறது என்பது தெரியாமலே இதுவரை இருந்து வந்தோம்.

அந்த மர்மம் இன்று உடைக்கப்படுகிறது.

இது தெரிந்த பின்னும் இதை செய்யாமல் இருந்தால் அதற்கு முழுப் பொறுப்பு அதை
செய்யாதவர்கள் மட்டுமே.

உண்மை இதுதான்
கால கடிகாரம் ஒன்று இயங்குவதுபோல

உயிரியல் கடிகாரம்
ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது.
பயாலஜிக்கல் கிளாக் (BIOLOGICAL CLOCK) அதனடிப்படையில் முதல் வேலையாக

1. அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை
நுரையீரலுக்கான நேரம் அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது இறந்த
செல்களை வெளியேற்றுகிறது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துடிக்கிறது இதற்கு
ஒத்துழைக்க நாம் இந்த நேரத்தில் எழுந்து பயிற்சி செய்தால் முழு ஆரோக்கியம்
பெறலாம்.

2. காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலின் நேரம் உணவுக் கழிவுகள்
வெளியேறும் நேரம் இந்த நேரத்தில் தூங்கி கொண்டிருக்காமல்  அதை வெளியேற்ற
நாமும் முயற்சிக்க வேண்டும்.

3. காலை 7 மணி முதல் 9 மணி வரை வயிறு சம்பந்தமான நேரம்
உணவை ஜீரணம் செய்ய அமிலங்களும் நொதிகளும் சுரக்கும் நேரம் இந்த நேரத்தில்
கண்டிப்பாக காலை உணவு சாப்பிட்டு ஆகவேண்டும். இல்லை என்றால் அமிலமும்
நொதிகளும் அசிடிட்டி ஆக மாறி நோயை ஏற்படுத்தும்

4. காலை 9 மணி முதல் 11 மணி வரை  மண்ணீரல் -  நேரம் காலை உணவுகளை ஜீரணம்
செய்து ரத்த சிவப்பு அணுக்களுக்கு அனுப்பும் நேரம்

5. முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை
இதயத்துக்கான நேரம் உடலில் நீர் சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும்.
அதிக மன அழுத்தம் கோபம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் நகைச்சுவைகள் கேட்டு
சிரிக்க வேண்டும்.

6. பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
மதிய உணவு நேரம் இந்த நேரத்தில் கண்டிப்பாக சாப்பிட்டாக வேண்டும். சாப்பிடும்
போது மெதுவாக நன்றாக மென்று அரைத்து சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது
நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் தூங்கக்கூடாது.

7. பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீரகத்திற்கான நேரம் இந்த நேரத்தில்
சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்கக்கூடாது எப்படியாவது அதை வெளியேற்ற வேண்டும்.

8. 5 மணி முதல் 7 மணி வரை கழிவுகள் வெளியேற்றும் நேரம் உடலில் உள்ள அத்தனை
நீர்க் கழிவுகள் வெளியேற வேண்டும் அது வியர்வை வழியாகவும் சிறுநீர் வழியாக
வெளியேற்றி ஆகவேண்டும் இந்த நேரத்தில் நடைபயணம் அதிக வேலை செய்வது
உடற்பயிற்சிகள் போன்றவை செய்யலாம்

9. இரவு 7 மணி முதல் 9 மணி வரை இதயத்திற்கான நேரம் இரவு உணவை ஏழு மணிக்கு
முன்பு சாப்பிட்டாக வேண்டும். இந்த நேரத்தில் இதயத்திற்கு மேலே  பாதுகாப்பாக
இருக்கும் பெரிகார்டியம் என்னும் மேற்பகுதி தன்னிடம் உள்ள அழுக்குகளை
வெளியேற்றும் நேரம்

10. இரவு 9 மணி முதல்  11 மணி வரை பித்தப்பை நேரம் பித்த நீர் சுரந்து
செரிமானம் நடைபெறும் நேரம்.

11. இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை  லிவர் நேரம் இந்த நேரத்தில்
கண்டிப்பாக ஆழ்ந்து உறங்க வேண்டும். இந்த நேரத்தில் உறங்காமல் வேலை செய்தால்
மொபைல் பார்த்துக் கொண்டே இருந்தால் ஃபேட்டி லிவர், ஹார்ட் அட்டாக்,
சோரியாசிஸ், ஹார்மோன் இம்பேலன்ஸ் போன்ற நோய்கள் வர காரணமாக அமையும்.

ஆகவே அனைவரும் இந்த உயிரியல் கடிகாரத்தை பின்பற்றினால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

அனைவரும் பின்பற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்......CT.N. Kodambakkam.
 JUST FOR INFORMATIONONLY aUM


<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
Virus-free.
www.avast.com
<https://www.avast.com/sig-email?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
<#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtYEAxiOiE%3Dr7GvHuNUn1-NVLrkvu_sr5496ueveNf63A%40mail.gmail.com.

Reply via email to