இராமகிருஷ்ணரின் உபதேசம்
🌿🌿🌿
   ஆணவம் என்னும் குன்றின்மீது மழைநீர் தேங்காது. வழிந்து கீழே வந்துவிடும்.
யாரிடம் ஆணவம் இல்லையோ அவரிடம் தான் இறைவனின் கருணைமழை பொழியும்.


🌿🌿🌿

சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
🌿🌿🌿
ஆண், பெண் குழந்தை ஒவ்வொருவரையும் கடவுளாகப் பாருங்கள். நீங்கள் யாருக்கும்
உதவி செய்ய முடியாது, சேவைதான் செய்ய முடியும். பகவானுடைய குழந்தைகளுக்குச்
சேவை செய்யுங்கள். உங்களுக்கு அந்தப் பேறிருந்தால் அதன் மூலம் ஆண்டவனுக்கும்
சேவை செய்தவர்கள் ஆவீர்கள்.


🌿🌿🌿
🌿🌿🌿
ஆசாரக்கோவை
🌿🌿🌿


     துறவிகளைப் போற்றுதலும், பழிக்கு அஞ்சுதலும், பெரியோர் முன் தான்
கற்றவற்றைச் சொல்லாது இருத்தலும் சிறந்த ஒழுக்கமாகும்.

🌿🌿🌿

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
🌿🌿🌿
தண்ணீர் ஜீரணக் கோளாருக்கு சிறந்த மருந்து. உணவின் இடையில் அருந்தும் நீரானது
தேனை போன்றது, அது ஜீரணத்திருக்கு உதவும். உணவின் இறுதியில் அருந்தும் நீரானது
விஷத்தை போன்றது
🌿🌿🌿
நாலடியார்

🌿🌿🌿

பிறர் மனைவியை நாடினால் அயலார் கண்டால் தன் குலத்திற்குப் பழிப்பாகும்; கையில்
அகப்பட்டால் கால் முறியும்; ஆண்மையற்ற இப்பிறர்மனை புகுதலைச் செய்யின் அச்சம்
தோன்றும்; பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ
இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்!



🌿🌿🌿


திரிகடுகம்
🌿🌿🌿
தனக்கு உதவி செய்யாதவரைச் சேர்தல், சினம் கொண்ட போது பயன்படாத சொற்களைப்
பேசுவது, குற்றங்களைப் பிறர் மேல் சொல்லுதல் ஆகியவை அறிவில்லாதவர் செயலாகும்.
🌿🌿🌿
திருக்குறள்
🌿🌿🌿
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு
இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
🌿🌿🌿
பகவத்கீதை
🌿🌿🌿
4.12 கர்மங்களுடைய பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை(ஒளியுடலில் வாழும்
முன்னோர்கள்) வணங்குகிறார்கள். ஏனென்றால் இவ்வுலகில் கர்மபலன் விரைவில்
கிடைக்கிறது

🌿🌿🌿
கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
🌿🌿🌿
என்பதைக் காட்டுவதற்காகத்தான்.
அந்தக் கதைகளை வெறும் கதைகளாக நோக்காமல், இறைவனின் தத்துவங்களாக நோக்கினால்,
மானிடத் தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும.
விதி-மதி ஆராய்ச்சியில் மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான்
அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

.🌸 🌸 🌸..
நமது தினசரி பதிவுகளை கூகுள் டிரைவில் பார்க்கலாம்

https://drive.google.com/drive/u/0/folders/1GNwm1Q3b7mkkNPWGQkG-x5WPhl-I-2VM

.🌸 🌸 🌸..
சுவாமி வித்யானந்தா தமிழ்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduK4yOxOD-coPgTorW4mDa-GAqURRrauXQ9nZCiMDBQMw%40mail.gmail.com.

Reply via email to