பகவான் பாபா வழங்கிய கருத்துக்கள்.

[image: father39s-day-source3]
Health and Hygine.
பாபா வழங்கிய கருத்துகள்.
நல வாழ்வு (Health) என்பது உடல் நலம், மன நலம் ,ஆன்ம நலம், சமுக நலம்
ஆகியவற்றைக் குறிக்கும். பகவான் பாபா கூறும் விளக்கம்:- வலிகளிலிருந்து
விடுதலையே உடல் நலம். தீய எண்ணங்களிலிருந்து விடுதலையே மன
நலம். பிறவிப்பிணியிலிருந்து விடுபடுவதே ஆன்ம நலம். சமுதாய
தீமைகளிலிருந்து விடுதலையே சமூக நலம்.
   பகவான் பாபா சொல்வார்:- நீங்கள் வாழுகின்ற வாழ்க்கையைப் பொறுத்தே நோய்
வருகின்றது. ஒவ்வொரு மருத்துவ மனைக்காகச் சென்று பணம் செலவழிப்பதை விட, நோய்
வருமுன்பே அதனைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.
(1) நாமஸ்மரணை என்ற மாத்திரை.
   இருமல் தலைவலி ஆகியவற்றை நீக்க சில மாத்திரைகளை மணிப்பர்ஸில்
வைத்திருப்பார்கள். . அம்மாத்திரை சிறுகச் சிறுக உமிழ்நீரில் கரைந்து
படிப்படியாக வலியைப் போக்கும். அது போன்று, நாமஸ்மரணை என்னும் மாத்திரையைச்
சுவைக்கும் போது தீய உணர்வுகள் படிப்படியாக நீங்கும். எத்துணை துன்பமாக
இருந்தாலும்
அது நிவாரணம் தரும். இந்த நாமஸ்மரணை என்ற மாத்திரையின் சக்தியில் நமக்கு
பரிபூர்ண நம்பிக்கை இருக்க வேண்டும்.
    (2) உண்வுக்கான விதி முறைகள்.:-
    நாம்  அதிக அளவு உட்கொள்ளக் கூடாது.. இயந்திரங்களுக்குக் கூட ஓய்வு
கொடுக்கிறோம். இந்த உடல் கூட ஒரு சிக்கலான இயந்திரம் தான். வாரத்தில் ஒரு நாள்
முழுவதும் உபவாசமோ, ஒரு வேளை விரதமோ இருப்பது உடலுக்கு நல்லது. பாபா
சொல்கிறார்,”நீ உபவாசம் இருக்கும் போதோ வியாதியில் வாடும் போதோ தண்ணீர்
மட்டும் அருந்து. உன் அழுக்கெல்லாம் போய்விடும். பறவைகளும் விலங்குகளும் கூட
நோய்வாய்ப் படும் போது உணவை நீக்கித் தன் வியாதியைப் போக்கிக் கொள்கின்றன.”.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtMhiNB30HSWKP4sLj%2BCQ2ZusNb_4zdusEC%2BtACAtc95w%40mail.gmail.com.

Reply via email to