*ஓம்*

*கதை சொன்ன சேதி*

*=-=-=-=-=-=-=-=--=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-*

*திரு பாலகுமாரன் அவர்களின் குருவழி நூலிலிருந்து*

*-=-=-=-=-=-=-=-==-=-==-==-==-==-===-==-==-==-==-==-==-=-==-=-=-=-===-==-===*

*ஆதி மூலமே காப்பாற்று.*

*     குழந்தைகள் சாப்பிடும்போது மூத்தவர்கள் கதை சொல்வதுண்டு. ஒரு
நீர்குளத்தில் தாமரை மலர்கள் பறித்து இறைவனை அர்ச்சிக்க வந்த யானையின் காலினை
ஒரு முதலை கவ்விப் பிடிக்க, அலறிய யானை, “ஆதி மூலமே! என்னைக் காப்பாற்று என்று
முறையிட பகவான் விஷ்ணு கருடாரூடராய் வந்து சக்கரத்தால் முதலையைக் கொன்று
முதலையினின்றும் யானையை* *விடுவித்தார் என்பது கதை.*

*      கேட்டுக் கொண்டிருந்த சிறுமி கதையின் முடிவினை ஏற்றுக் கொள்ளவில்லை.
என்ன கதை பிடிக்கவில்லையா என்று கேட்டவரிடம் சிறுமி சொன்னாள், “ நானும்
தம்பியும் விளையாடும் போது சண்டைகள் வருவதுண்டு. சண்டையிடாதீர்கள் என்று
பெரியவர்கள் அறிவுரை சொல்வது தானே அழகு. அதை விடுத்து எவருக்கும் உயிரைப்
பாதிக்கும் நிலை உருவாகலாமா?**” **என்றாள். முதலைப் பண்ணைக்குப் போயிருந்த
போது முதலைகளிடம் நாம் சென்று துன்புறுத்தினால் மட்டுமே நமக்கு துன்பம் தரும்
என்றார்களே! இந்த யானை முதலையிடம் சென்றதால் தானே அது யானையின் காலைப்
பிடித்தது. அதற்காக உயிர் இழக்க வேண்டுமா? நீங்கள் சமர்த்தாக சண்டையிடாமல்
இருங்கள் என்று சொல்லியிருக்கலாமே! என்றாள்.*

*      கதை சொன்னவர் வாயடைத்துப் போய்விட்டார்.*

*இதுபற்றி யோசித்த போது இந்து மதத்தில் உள்ள புராணக் கதைகள் கற்பனையா அன்றி
நிஜமா? உண்மையாகவே கருடன் மீது ஆரோகணித்து திருமால் வந்தாரா? சக்கரம் கொண்டு
முதலையைக் கொன்று யானையை விடுவித்தாரா? அல்லது கதை வேறு ஏதாவது சொல்கிறதா?*

*      பிரகலாதனுக்காக, பக்தன் வேண்டிக்கொண்டதற்காக தூணிலிருந்து சிங்க
வடிவில் கடவுள் புறப்பட்டு பக்தனைத் தொந்தரவு செய்த, இம்சை கொடுத்த அவனது
தகப்பனைத் தூக்கி மடியில் போட்டுக் கிழித்து, குடலை மாலையாக்கி, இரவும் பகலும்
அற்ற நேரத்தில், உள்ளும் வெளியும் அற்ற இடத்தில் வதம் செய்தார் என்று
சொல்லப்பட்டிருக்கிறது. இது என்ன? இதை ஏன் ஒருவரும் உட்புகுந்து
பார்க்கவில்லை? பார்ப்பது யார்? யாரால் பார்க்க முடியும்?  யாருக்கு இது கதை?
யாருக்கு இது கருத்தாழம் மிக்க செய்தி என்று யோசிக்கவேண்டியிருக்கிறது.*

*    ஆனால், உண்மை கடவுள் என்பவர் யார், எல்லாம் கடந்தவர். அந்தக்
கடவுளுக்குத் தெரியாதா, எப்போது சமாதானம் செய்ய வேண்டும், எப்போது சண்டையிட
வேண்டும் என்று. யாரை அப்புறப்படுத்த வேண்டும், யாரைத் தண்டிக்கவேண்டுமென்று,*

*முதலையும் மூர்க்கனும் கொண்ட்து விடார் என்று சொல்வார்கள்.*

*     முதலை ஒரு மூர்க்கம். அப்படிப்பட்ட  ஒரு மூர்க்கத்தை அழிக்கத்தான்
வேண்டும். வலுவில் யானையும் முதலையும் சம அந்தஸ்து உள்ளவை.. ஆனால், யானைக்கு
சகலத்தையும் அழிக்கின்ற குணம் என்று எதுவும்  இல்லை. ஆனால், முதலைக்கு உண்டு..*

*     யானை சாக பட்சினி, முதலை மாமிசப் பட்சினி. இங்கு மாமிசப் பட்சினி என்று
குறிப்பிடுவது உண்ணும் உணவைப் பொறுத்தல்ல. பிறரை இம்சைப் படுத்தி வாழ்க்கை
நடத்துகின்ற குணம் முதலைக்கு உண்டு. இது யானைக்கு இல்லை. எனவே, இரண்டு
வலுவுள்ளவர்களில் பிறரை இம்சைப் படுத்துபவரை இறைவன் அழித்தான் என்று பொருள்
கொள்ளவேண்டும்.. எனவே, இந்தக் கதை நடந்த கதையா, இல்லை கற்பனைக் கதையா. ஆனால்,
நடந்த விஷயத்தை உருவமாக மாற்றி நமக்கு நீதி சொல்கின்ற கதை. முதலைக் குணமும்,
யானைக் குணமும் கொண்ட, இரண்டு பேர்களுக்கிடையில் போர் வருமாயின் கடவுள்
யாருக்குத் துணைசெய்வார். யார் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பார். யார்
அழிக்கப்படுவார்  யார் வாழ்த்தப்படுவார் என்று சொல்ல முயற்சிக்கின்ற கதைதான்
இது.*

*     இதே போன்று இரணிய கசிபுவைப் பற்றி யோசிக்க முடியுமா? இரணிய கசிபு யார்.
கர்வம். அகங்காரத்தினுடைய உச்ச கட்டம். அஹங்காரத்தின் உண்மையான மாதிரி இரண்ய
கசிபு,*

*      தன்னையே எல்லோரும் வணங்க வேண்டும், தானே சகல இடத்திலும் இருக்க
வேண்டும். தன்னைத் தவிர வேறு எவரையும் எவரும் புகழ்ந்து விடக்கூடாது என்ற
கர்வத்தின் உச்சாணிக் கிளையில் அமர்ந்து கொக்கரித்துக் கொண்டிருந்தவனை, ‘இறை**’
 **என்ற மாபெரும் விஷயம் அழித்துப் போடும்.  இங்கேயும் பிறரை இம்சை செய்கின்ற
ஒரு புத்தியைத்தான் ‘இறை**’ **அழித்தது.  பெற்ற பிளையையே விதம் விதமாக
துன்புறுத்த ஒருவனால் முடியுமெனில், அவன் தன் எதிரிகளை எப்படியெல்லாம்
துன்புறுத்தியிருப்பான் என்று நாம் யோசித்துக் கொள்ளலாம். அப்படியானால்
இதுவும் ஒரு உவமைக் கதையா, இப்படி ஒரு அரசன் இருந்திருப்பானா, அந்த அரசனுக்கு
ஒரு பிள்ளை இருந்திருக்குமா,  அந்தப் பிள்ளையின் கெஞ்சுதலால் இறைவன் வந்து
தகப்பனை அழித்தானோ என்ற கேள்வி வரலாம்.*

*     இது வேறுவிதமான உருவகம்.*

*     பிரகலாதன் என்று உருவகிக்கப்பட்ட ஜீவாத்மா இயல்பிலேயே, பிறப்பிலேயே
இறைவனை நோக்கிக் கைகூப்பி நிற்கிறது. அவனைச் சுற்றி எத்தனை விதமான
துர்க்குணங்கள் அமைந்திருந்தாலும், ஜீவாத்மா இடையறாது இறைவன் நாமத்தையே
சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஜீவாத்மாவைத் தன் வயப்படுத்திப் புத்தி
என்கிற கர்வம், அகங்காரம், ம்மதை இடையறாது முயற்சிக்கின்றன. ஜீவாத்மாவை
அலைக்கழிக்கிறது. இறை என்ன இறை, நானல்லவா முக்கியம் என்று புத்தி
கொக்கரிக்கின்றது.. இதற்குப் பெயர் நாத்திகம்.*

*     இந்த நாத்திகத்தை கம்பத்திலிருந்து வந்த கடவுள் அழிக்கிறார். கம்பம்
என்றால் தூண் என்று மட்டுமே எண்ணிக் கொள்ளக்கூடாட்து. வடமொழியில் கம்பம்
என்றால் நடுக்கம் என்று பொருள். (பூகம்பம் என்றால் நில நடுக்கம் அல்லவா.)*

*     புத்தி எத்தனை கொக்கரித்தாலும் ஏதோ ஒரு விஷயம் பற்றி, ஏதோ ஒரு
பலகீனத்தைப் பற்றிக்கொண்டு மனம் நடுக்கமுறுகிறது. அந்த நடுக்கத்தின்
நடுவிலிருந்து இறைவன் தோன்றுகிறான். அந்த நடுக்கத்திலிருந்து புத்தியை
அழித்துக் கிழித்துப் போட ஒரு சக்தி பிறக்கிறது. ஜீவாத்மா
காப்பாற்றப்படுகிறது.*

*     மனிதனுக்குள் நடக்கின்ற போராட்டங்களைத் தான் நரசிம்ம அவதாரமாக
ஹிரண்யகசிபுவின் மரணமாகச் சொல்கிறார்கள்.*

*     அதென்ன வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், மேலேயும்
இல்லாமல் கீழேயும் இல்லாமல், பகலிலும் இல்லாமல் இரவிலும் இல்லாமல். இதற்கு
ஏதேனும் பொருள் உனண்டா?*

*     உண்டு. இறை என்ற விஷயம் நடுநிலையிலிருந்து பிறக்கிறது.. மனிதனின்
புத்தியுமில்லை. உடம்பும் இல்லை. மனிதனுடைய அனுபவ அறிவு உள்ளேயுமில்லை.
அப்பாலும் இல்லை. அது தோன்ற பகல் இரவு என்ற விஷயமில்லை. கனவு போன்ற மெல்லிய
வெளிச்சம் கொண்ட ஒரு சூழல்தான் இறை தரிசனத்தின் போது கிடைக்கிறது.. இறை என்ற
விஷயத்தை உள்ளூற உணர்ந்தவர்கள், நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்படும் இந்த
விஷயங்களை அறிந்து கொள்வார்கள்.*

    *மனிதனின் புத்தி கர்வத்தைத் தாண்டி ஜீவாத்மாவுக்கு தன் இருப்பை
உணர்த்துகிற விஷயமே நரசிம்மாவதாரம். இதை எத்தனை நுணுக்கமாய்ச் சொன்னாலும்
எடுபடாது. இதைக் கதையில் சொல்லிவிட்டால், யோசிக்க யோசிக்க இந்தக் கதையில்
மூழ்கிப்போக, இது என்ன என்ற கேள்வி கேட்க, மிகத் தெளிவாக இது பற்றிய விஷயங்கள்
தெளிவாகும்.*

*     ராமர் என்கிற விஷயம் என்ன? உலகத்தில் தெள்ளத்தெளிவாக நியமிக்கப்பட்ட வேத
சாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட தர்மத்தைப் பிடிவாதமாக, அதே சமயம்
தன்னடக்கத்தோடு பின்பற்றுகின்ற மனிதனின் குணம்.*

*     அப்போது கிருஷ்ணர் என்பது என்ன? உலகத்தின் எல்லா விவகாரங்களிலும்
புரண்டு கொண்டு, தன்னையே இடையறாது அவதானித்துக் கொண்டிருக்கிற ஒரு நிலை. எது
சரி?*

*    இந்து மதம் மிகப் பெரியது. மனித நாகரிகத்தின் ஜீவரசத்தைத் தன்னுள்
அடக்கியது. பண்டிகைகளைக் கொண்டாடத்தான் கதை என்று நினைக்காமல், என்ன சொல்கிறது
இந்து மதம் என்று யோசித்துப் பார்த்தால், மனிதனுக்கு மிகப் பெரிய ஞானம்
கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் மதம் என்பது நாகரிகம், நாகரிகம்
என்பது மக்களின் வாழ்க்கை. இந்து மதம் கோடானுகோடி மக்கள் வாழ்க்கை வரலாறு.. –*

*நன்றி*

*வெ.சுப்பிரமணியன் ஓம்*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsXWn_oKvEPRiQd8nExAPtfUU4J5H6sW0_mRXmysLgAjw%40mail.gmail.com.

Reply via email to