*ஓம்*
* சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி (5)*


*(5)  இரட்டை ஆட்சி முறை*
(
















































* மீர்ஜாபருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே ஏற்பட்ட உறவு நெடுநாள் நீடிக்கவில்லை.
மீர்ஜாபருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
மீர்ஜாபர் ஆட்சி நிர்வாகத்   திறமை  அற்றவராக   இருந்தது மட்டுமின்றி,
ஆங்கிலேயரின் தாசனு  தாசனாக தொடர்ந்து இருக்க விரும்பவில்லை.
ஆங்கிலேயர்களுக்கு, பாரத நாட்டின் ஒரு மன்னனுக்கு இருக்கவேண்டிய தகுதி;
எப்போதும் தங்களுக்கு ’சலாம் ‘ போடவேண்டும்- தங்கள் ஆதிக்கம் வளர உதவ வேண்டும்
என்பது தான்.  இந்தத் தகுதி மீர்ஜாபருக்கு இல்லை என்று ஆங்கிலேயர்கள்
விளங்கிக் கொண்டனர்.  ஆகவே, மீர்ஜாபர் நவாப் பதவியிலிருந்து விலக்கப்
பட்டார்.  மீர்ஜாபரின் மருமகன் மீர்காசிம் என்பவர் வங்காளத்தின்
நவாபாக நியமிக்கப் பட்டார்.   மீர்காசிம் தங்களுக்கு ஏற்ற சரியான தலையாட்டிப்
பொம்மையாக இருப்பார் என்று ஆங்கிலேயர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள்
வெகு விரைவிலேயே ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டி வந்தது.    மீர்காசிம்
ஆங்கிலேயர்களுக்கு ஒரேயடியாக அடிமையாகச் செயற்பட விரும்பவில்லை. ஆகவே,
அவருக்கும் ஆங்கிலேயர்களுக்குமிடையே உறவு சீர்கெடத் தொடங்கியது.
மீர்ஜாபர் போல் அல்லாமல் மீர்காசிம் தன்னை மிகவும்
சுதந்திரமாகப் பலப்படுத்திக்கொண்டார். அயோத்தி நவாப்புடனும், மொகலாயச்
சக்கரவர்த்தியாக இருந்த ஷா ஆலம் என்பவருடனும் நெருக்கமான தொடர்பு
வைத்துக்கொண்டார்.  ஆங்கிலேயர்களால் மீர்காசிமுக்கு ஏதாவது தொல்லை ஏற்பட்டால்
தாங்கள் உதவுவதாக அவர்கள் இருவரும் வாக்குறுதி அளித்தனர்.  மீர்காசிமின் கையை
ஓங்கவிட்டால் பாரதத்தில் தங்கள் ஆதிக்கம் தொடர்ந்து பரவாது என்பதை ஆங்கிலேயர்
விளங்கிக் கொண்டனர்.  ஆகவே பக்சர் என்னுமிடத்தில் 1761-ஆம் ஆண்டு
ஆங்கிலேயர்களின் படை மீர்காசிம், அயோத்தி நவாப், மொகலாயச்  சக்கரவர்த்தி ஷா
ஆலம் ஆகிய மூவரையும் எதிர்த்துப் போரிட்டது.
இந்தப் போராட்டத்திலும் ஆங்கிலேயப் படையே வெற்றி பெற்றது.  மீர்காசிம்
தோற்கடிக்கப் பட்டதோடு   ஆங்கிலேயர்கள் திருப்தியடைந்து விட்டனர். உடனடியாக
சக்கரவர்த்தி ஷா ஆலத்தை பழிவாங்க நினைக்க வில்லை.  அவ்வாறு செய்தால்
மக்களிடையே கடும் எதிர்ப்பும் வெறுப்பும் தோன்றக்கூடும் என்று அஞ்சினார்கள்.
அதனால், 1865-ஆம் ஆண்டு  ஷா ஆலத்துடன் ஒரு சமாதான உடன்படிக்கையினைச்   செய்து
கொண்டனர்.   அந்த உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர் பீகார், வங்காளம்,
ஒரிஸா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையினை மொகலாயச்
சக்கரவர்த்தியிடமிருந்து பெற்றனர்.  வங்காள ஆட்சி முறையினைத் தங்களுக்குச்
சாதகமாக ஒழுங்குபடுத்தும் முயற்சியில் கிளைவ் ஈடுபட்டார்.  வங்காளத்தில் நவாப்
பதவி வகிப்பவருக்கு முழு அரசு உரிமை தராமல், அவர் ஓர் அதிகாரி என்ற
அந்தஸ்த்துக்கு கீழிறக்கப்பட்டார்.  நவாப் பெயரளவுக்கு அரசுத்
தலைவராக இருப்பார். நாட்டின் வரி வசூல் பொறுப்பும், பாதுகாப்புப்  பொறுப்பும்
ஆங்கிலேயரிடமே இருந்ததன.  இம்மாதிரி வங்காளத்தில் இரட்டை
ஆட்சிமுறைக்கு ஏற்பாடு செய்துவிட்டு 1768-ஆம் ஆண்டு கிளைவ் இங்கிலாந்து
நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.  வங்காளத்தில் செயற்படுத்தப்பட்ட இரட்டை
ஆட்சிமுறை பாரதத்தில் ஆங்கிலேயர் நன்கு அழுத்தமாக காலூன்றிக் கொள்வதற்கு
வழியமைத்துத் தந்தது.  (வளரும்}   *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduZUJj59H2j3csGd_kAwPDRBm6WXC%2B%2BTPkM99VEbtKhCQ%40mail.gmail.com.

Reply via email to