Thank you.  V.Subramanian Aum
    On Tuesday, 27 September 2022 at 04:30:20 pm GMT+5:30, Narayanaswamy Sekar 
<nsekar...@gmail.com> wrote:  
 
 Beautiful write up.Your message gives hope to those unfortunate souls.Thanks N 
Sekar 
On Mon, Sep 26, 2022, 10:00 PM subra manian <v.dotth...@gmail.com> wrote:


| 
 |

தங்கள் தனி வாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து 
ஒளித்துக்கொள்ளவிரும்பும் மூவரின் குறிப்புகள்.. 
| ஓம்.
தன்னைக் கடத்தல்.
ஆசிரியர் திரு ஜெயமோகன்.
முதல் பதிப்பு 2022 வெளியீடு: தன்னறம் நூல் வெளி,
குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர் கிராமம்,
சிங்காரப் பேட்டை 635307- கிருஷ்ணகிரி மாவட்டம்
 பேச 9843870059
<thanna...@gmail.com>
<w.w.w.thannaraam.in>. .
 அச்சாக்கம்: ஜோதி எண்டர்பிரைசஸ், சென்னை -5
நன்கொடை ரூ.160
 காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டே யிருக்கும் ‘டின்னிடஸ் ’என்னும் நோய் கொண்ட 
ஒருவர்,. ’தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக’  மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட 
ஒருவர் என இருவர் அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள்  சொல்கிறார்கள். தங்கள் 
சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்.
 தங்கள் தனி வாழ்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து ஒளித்துக் 
கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதில் உள்ளன.
அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும், 
சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே பதிவாகி இருக்கின்றன.
  இந்நூல் வெவ்வேறு வகையில் வெளியே தயங்கி நின்றிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை, 
ஊக்கத்தை அளிப்பதாக அமையும். ஏனென்றால் இது தன் எல்லையைக் கடந்தவர்கள் மற்றும் 
கடக்க முற்படுபவர்களின் கதை. | 
 |
|  டின்னிடஸ்

 |

 அன்புள்ள ஜெ,நம்முடைய சமூகத்தில் டின்னிடஸ் என்ற நோய் பற்றிய விழிப்புணர்வு 
அவ்வளவாக இல்லை. நான் முதன் முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என் நண்பர்களிடம் 
கூறிய போது, யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள  வில்லை. சிலர் சிரித்துக்கொண்டே 
கேட்கவும் செய்தார்கள்.
டின்னிடஸ் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். என்று நம்புகிறேன். 
இருபத்தி நான்கு மணி நேரமும் கூடவே வரும் அந்த சத்தத்தைத் தாங்கிக் கொள்ள 
முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு 
குழந்தைகள். தான் செத்தே ஆகவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு 
இறந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்ட போது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்தப் 
பெண்ணின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா? என்று 
தெரியவில்லை. 
ஒரே வித்தியாசம் .அவர் சாவைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.   நான் வாழ்வைத் 
தேர்ந்தெடுத்து  விட்டேன்.   
பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம் என்று ஒரு திரைப் படத்தில் 
நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்குப் பேய் பற்றிய பயமெல்லாம் 
இல்லை. ஆனால், இந்த டின்னிடஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல 
இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த அரக்கன் டின்னிடஸ், அத்துடனான என் 
அனுபவங்களை நிறைய விவரமாக உங்களைச் சந்திக்க நேர்ந்தால் கூறுகிறேன். தூக்கம் வரும் 
போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை எதுவுமே இருக்க முடியாது. எனக்குக் 
கேன்ஸர் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், இந்தச் சத்தத்தோடு போடும் யுத்தத்தைப் 
போன்ற கொடுமையான வலி வேறொன்று இருக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 
என்னுடைய வலியைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொலியைப் பார்த்தாலே 
போதும்.எப்படியோ டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய  கொடுங் கனவில் இருந்து என்னை 
மீட்டு வெளியே கொண்டு வந்து விட்டேன். டின்னிட்ஸுக்குப் பல காரணங்கள். எனக்கு 
வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்கப் பலமுறை  MRI  ஸ்கேன்கள் 
எடுத்தாகிவிட்டது. எதை எதையோ வெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள 
மருத்துவர்கள்.  எல்லாம் இயல்பாகவே இருக்கின்றன; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள்.
இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஆனால், 
மருத்துவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. திறன் மிகுந்தவர்கள். அதில் 
எதுவும் சொல்வதிற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போல் செயற்படு  கின்றனர். 
மருத்துவர்கள் மட்டுமல்ல. பெரும்பாலான மற்றவர்களும் தான். ஐரோப்பியர்களிடமிருந்து 
நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், 
நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதை விட மிக மிக அதிகமாகவே இருக்கிறது.  
Especially, human aspects.
 டின்னிடஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்த போது, இந்தியாவிலுள்ள என்னுடைய 
குடும்ப மருத்துவரை அழைத்தேன். அவரோ,’ அதெல்லாம் ஒண்ணுமில்லடா’  என்று கூறியபோதே 
என் பாதிப் பிரச்சினை தீர்ந்துவிட்டது போல் இருந்தது.என் தந்தையார் ஒரு யோகா 
தெரப்பிஸ்ட் என்பதால் அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து யோகா செய்துவந்தேன். 
தீவிர உணவுக்கட்டுப்பாடு, எப்போதும் எதையாவது செய்துகொண்டு சுறு சுறுப்பாக 
இருப்பது என்பது மட்டுமே ஒரே வழி என்று புரிந்தது.
டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான 
தீர்வைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அமைதி வேண்டு  மென்  கிறார்கள். இவர்கள் 
சும்மாவே அமைதி விரும்பிகள்.  அர்த்தமற்ற அமைதியின் மீது அப்படி என்ன காதலோ? 
ஆனால், அவர்கள் வேண்டும் அமைதிக்கு நிச்சயம் சாத்தியமில்லை என்பதே உண்மை. எனவே 
தான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்  கொண்டேன்.  நண்பர்களாக்கிக் 
கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து  விட்டேன். அதன் மீது தியானம் செய்ய ஆரம்பித்து  
விட்டேன். இப்போது அதைக் கேட்காமலாக்கி விட்டேன். அது இருக்கிறது, ஆனால், இல்லை. 
ஏனெனில் கண்டுகொள்வதில்லை. மனதை வலிமையாக ஆக்கிக் கொள்வது மட்டுமே ஒரே வழி. 
ஆனால், இவர்களுக்கு அதை எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை  தற்கொலை செய்து 
கொள்வதை விட வேறு வழியே தெரியவில்லை என்று சொல்லிக்  கொண்டிருக்கும் நண்பன் 
ஒருவனை, ’ஒரு முறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்றுவா’ என்று 
தீர்வு சொல்வேன். இந்திய நகரங்களின் இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக 
அமைந்துவிடுமல்லவா? ஆனால், அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. என் நண்பனின் சகோதரி 
டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு 
வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணி நேரம் பேசிகொண்  டிருந்தேன். 
அழுதுவிட்டாள். இங்கிருக்கும் நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து 
மீண்டுவந்துவிட்டதால் என்னைக் கடவுளைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். எனக்கு 
என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னால் முடிந்த அத்தனையும் செய்து வருகிறேன். 
அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணி நேரமும் 
மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்க்கிறதாம்.
ஒரு புறம் சாகத் துடிக்கும் நண்பர். இன்னொரு புறம் அவரது முடிவு சரி என்று 
ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் Euthanasia  முடிவைப் பற்றிய 
இந்தக் காணொளி.  இந்த நேர்காணலை அந்த பெண்மணி யூதனேசிய (கருணைக்கொலை என்கிற 
வார்த்தை எனக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை)  செய்துகொள்வதற்குச் சில 
வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளி வருவதற்கு முன்பே 
அவர் இறந்துவிட்டார்.
நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது. 
உண்மையில் யுதேனிசியா பற்றிய என்னுடைய பார்வையே மாறிவிட்டது.    ஒருவேளை நான் 
அவரிடம் பேசி இருக்கலாமோ அது அவருக்கு உதவியிருக்கும்மோ? என்றெல்லாம் ஏதேதோ 
எண்ணங்கள் வந்து விழுகின்றன. உண்மையில் இதைப் பார்த்த அன்று இரவு எனக்குத் தூக்கமே 
வரவில்லை.
எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் 
இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் 
வேண்டிக்கொள்கிறேன். இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி உங்களுக்குச் சொல்ல 
வேண்டியதில்லை அவரைப் பற்றி யெல்லாம் கூறிவருகிறேன்.
இருபத்தோரு வயதில் அவருக்கு 'Motor Neurone Disease' வந்து உடல் முழுவதும் 
செயலிழந்து போய், அவர் இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ்வார் என்று 
மருத்து  வர்கள் கூறிக் கைவிரித்துவிட்டனர். ஆனால்,, ஸ்டீபன்  ஹாக்கிங் ஒரு 
நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது கேட்டால் அவருடைய 
வாழ்க்கையைத்தான் காட்டுவேன்.
இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்திநான்கு. அவரால் பேசமுடியாது; நடக்க முடியாது;  
அவரால் அவரது உடலைக்  கொண்டு எதுவும் செய்யமுடியாது.அவருடைய வலது பக்கக் 
கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்றுச் செயல்படும். அதன் மூலமாக அவர் 
தட்டச்சு செய்வதை, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டுப் பிரத்தியேகமாக 
வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவரே 
அவருக்குப் பிரியமான குரலைத் தெரிவு செய்துள்ளார்.  இந்தக் குரல்தான் அவருக்கும் 
உலகத்துக்குமான ஒரே தொடர்பு. ஒருமுறை அவரிடம், எப்படி இவ்வளவு நாள் இது போன்ற 
உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்? என்று கேட்டபோது, அவர் கூறியது,”While there is 
life, there is hope " இந்த வரிகள் தான் எல்லா  மாயும்  இருந்திருக்கின்றன.
ஹாக்கிங்கால் முடிந்திருக்கிறது. நானோ இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான 
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யூதனேசியா எல்லாம் 
தேவையா? அதைப்பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.நீண்ட கடிதத்திற்கு 
மன்னிக்கவும். குழந்தைகளுக்கு என் அன்பு.
                                       என்றென்றும் அன்புடன்                     
                மாதவன் இளங்கோ, பெல்ஜியம்                                    
madhavan.eia...@gmail.com
இன்னும் சில கடிதங்கள் வர  உள்ளன. தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். யாரோ ஒரு 
அன்பர் பயனடைவார் என்று இதைச் செய்து கொண்டிருக்கிறேன். பதிப்புரிமை யை இப்பகிர்வு 
பாதிக்காது என்று நம்புகிறேன்.அன்புடன் வெ.சுப்பிரமணியன். ஓம் 


-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1834432640.717571.1664209770837%40mail.yahoo.com.

  

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1806580880.1102483.1664288757246%40mail.yahoo.com.

Reply via email to