Though I have sent in these columns some of them, why to render the Tamil beauty, shall speak a madras language?. Nilakayudu and Sindu songs are not parallel to Kamban ethics. 2 *மடக்கு* என்பது செய்யுளில் தொடை அமைக்கும் பாங்குகளில் ஒன்று, இது அணி <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF> வகையில் மடக்கணி எனவும் யாப்பு வகையில் யமகம் <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D> எனவும் பெயர் பெறும். திரிபு என யாப்பு வகையாலும், திரிபணி <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF> என அணி வகையாலும் பெயர் பெற்ற மற்றொரு வகையும் உண்டு. இந்த வகைப் பாடல்களைப் பாடிப் புலமை விளையாட்டு விளையாடிச் சில புலவர்கள் தம் சொல்வளத்தைப் புலப்படுத்துவர். In short of using a letter or a word or a phrase, why even a sentence, if meanings can be altered with the relevance, then it is Madakku style in Tamil or YAMAGA style in sanskrit. There are many KA ,TA ,illathavan, il+ aadhavan styles. A little variation is SLADAI like paalum kasakkavaillai tuniyum ..........Ki Va.Ja. Kambar used the word PAADAL+ AM 1 *பாடலம் //**பாடல் அம் //**பாடு அலம்//**பாடு அலம் //. tHE OPENING mADAKKU IS VULGAR. KR IRS 161122*
On Wed, 16 Nov 2022 at 09:09, Rangarajan T.N.C. <[email protected]> wrote: > > > ----- Forwarded message ----- > *From:* Chittanandam V R <[email protected]> > *Sent:* Wednesday, 16 November, 2022 at 06:59:44 am IST > *Subject:* Fwd: Andaman Tamilnenjan - Karpom Kambanil > > > *மடக்கி போட்டோம்லெ….* > > கற்போம் கம்பனில் > > > கயிற்றுக் கட்டில் என்றவுடன், பரமக்குடி ஹாசனின் சகலகலா வல்லவன் படம் > நினைவுக்கு வருதா? அப்பொ, நீங்க இன்னும் இளைஞர்தான் போங்க! அதிலும் அந்த > முக்கல் முனகல் பாட்டு , அதாங்க அந்த ‘நிலாக் காயுதே….’ ஞாபகம் இருக்கா? ஆம் > எனில் நீங்க இன்னும் சூப்பர் இளைஞன்தான். ஆனா பரமக்குடியில், அந்தக் காலத்தில் > ஒரு மடக்குக் கட்டில் புழக்கத்தில் இருந்தது. தெருவில் அந்த மடக்குக் கட்டில் > விரித்துப் படுத்துள்ளோம். ஒரு கொசு பாத்ததில்லை அப்பொ. இப்பொ… தெருவில் > நடந்து போகவே மடங்கி மடங்கி போக வேண்டியிருக்கே! > > இளவட்டங்கள் மத்தியில் மடக்கிப் போடுதல் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? > (அட… இது மட்டும் எப்படி எல்லாருக்கும் கரெக்ட்டாத் தெரியுது?) அப்படிப் > பாத்தா, காதலி என்ன வணங்காமுடி மாதிரி மடங்காமுடிகளா என்ன? திருடனை போலீஸ் > பிடிக்கும்போது மட்டும், ’சுற்றி வளைத்துப் பிடித்தனர்’ எனப் போடும் > தினத்தந்தி, பொது மக்கள், திருடனைப் பிடித்தால் மட்டும் ’மடக்கிப் பிடித்தனர்’ > என்று போடுகிறதே? ஏன்? யோசிங்க… யோசிங்க. > > ஆண்கள்தான் மடக்குவாகளா என்ன? ஒரு சங்கீத வித்வானை இசையால் ஒரு பெண் மடக்கி > வென்ற காட்சி திரையில் வந்ததே? நினைவிருக்கிறதா? ’நான் ஒரு சிந்து… காவடிச் > சிந்து’ என்று பாடி..; மடக்குதல் என்பதற்குப் பொருள் தேடினா, ‘ஒருவன் தன் > சொல்லாலோ, செயலாலோ மற்றொருவனை அடக்கி தனக்குக் கீழாக ஆக்கிவிடுதல்’ என்பதாக > கிடைக்குது. அப்பொ சிந்து பைரவி மடக்கல், சூப்பரா ஒத்துப் போகுது? அவெய்ங்க > மடக்கிப் போட்டதெ உடுங்க, அந்த பாட்லெ ஒரு வரி பாத்தீயளா? > > *சொன்னது தப்பாதப்பா * > > இதனைப் நம்ம பழைய கனவுக்கன்னி சுஹாசினி இருமுறை பாடுவார். முதன்முறை “சொன்னது > தப்பாதப்பா” என்று பாடுவார். அதாவது நான் சொல்வது தப்பாதப்பா = தவறாது, > நிச்சயம் நடைபெறும்” என்ற பொருள்படி முதலில் பாடப்பட்டிருக்கும்; இரண்டாம் > முறை “சொன்னது தப்பா? தப்பா?” என்று பிரித்து பாடுவார். அதாவது “நான் > சொன்னதில் ஏதேனும் தப்பு உண்டா? தப்பு உண்டா (தவறு உண்டா)” என்று > பொருள்படும்படி பாடி இருப்பார். (ஒரு சினிமா பாட்டுக்கு இம்புட்டு விளக்கம் > சொல்ல வேண்டி இருக்கே? ) ஆனா அந்த வரிகள் இப்பவும் ரசிக்க முடியுதில்லெ? > > சினிமாப் பாட்டிலேயே நம்மளை இந்த மடக்கு மடக்கினா, நம்ம பழங் கவிஞர்கள் > பத்தி கேக்கவா வேணும்? ஒரு பாட்டு தாரேன். அதுக்கு முன்னாடி தண்ணியெ மடக் மடக் > எனக் குடிச்சிட்டுப் படிங்க… > > *உமாதர னுமாதர; னுமாதர னுமாதர* > *னுமாதர னுமாதர; னுமாதர னுமாதரன்* > > இப்பொப் புரியுதா? ஏன் தண்ணியெக் குடிக்கச் சொன்னேன்னு. நீங்க 23 ஆம் > புலிகேசி மாதிரி விளக்கம் கேட்டா, நான் ஓணாண்டி மாதிரி சொல்லத் தயார் வரிக்கு > வரி, இதுதானுங்க அதன் மீனீங்கு… > > உமாதரன் ஆதரனும் (உமாதேவியின் ஊட்டுக்காரன்; ஆதரவா இருப்பவன்) > மாதரனும் ஆதர (மானை ஏந்தியவன்; உயிரை ஆள்பவன்) > மாதரனும் ஆதர (யானைத் தோலை அணிந்தவன்; இடபத்தை வாகனமாய் உடையவன்) > மாதரனும் ஆதரன் (செல்வத்தை உடையவன்; நம்ம சிவன்) > > அட ரொம்ப சிம்பிளா ’பித்தா’ என மடக்கும் லெவல்லெ இருக்கும் சிவனைப் பாட, > இம்புட்டு சிரமமா? > > இதுக்கே இப்படி மிரண்டு போனா எப்படி? இன்னும் ஒரு பாட்டு வருது பாருங்க; > கரோணா வந்தா, பிழை இல்லாமல் பத்து தடவை சொல்லச் சொல்லுங்க; ஓடியே போயுடும். > ”எங்கே நீ சொல்லு பாப்போம்!” என்று கேட்டா, இன்னா செய்றது? அதனாலே நாமளும் > கொஞ்சம் படிச்சி வச்சிக்குவோம். > > *காக்கைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை,* > *கோக்குக்கூக், காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்* > *காக்கைக்குக் கைக்கைக்கா கா* > > ஏன்..ஏன்.. இப்படி எந்திரிச்சி ஓடறீங்க? ஒரு லையனாவது பிரிச்சிக் > காமிக்கிறேன். அப்புறம் பாருங்களேன். > > காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை > கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை > > என்னதான் சொல்ல வாராரு அந்த காகா கவிஞரு? இரவில் காக்கைக்கு ஆந்தை (கூகை) > ஆகாதாம். பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். > இரவில் கூகை வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப்போல > காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வெற்றியும் > இந்திரனாக இருந்தாலும் கிடைக்காது. ஆக நாம் வீட்டோட இருந்து கரோணாவை ஜெயிக்கிற > மாதிரி… (யப்பா..ரொம்பவே சிரமம்தான்) > > இந்த மாதிரி கரடு முரடான பாடல்களுக்கு மொத்த குத்தகைக்காரர் ஒருத்தர் > இருக்கார்னா, அவரு நம்ம ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ எழுதிய அருணகிரியார். > (என்னது…? ஒட்டக்கூத்தரா..? துண்டெக் காணோம், துணியெக் காணோம்னு ஒட > விட்ருவீங்க போல…!!!) அருணகிரி பாட்டு போடலைன்னா முருகனே வேலோட நம்மளை > மடக்கிடுவார். அதுக்கு முன்னாடி பழனி முருகன் பாட்டும் பாத்திடலமே… > > *திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரை* > *திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்* > *திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற* > *திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.* > > திருவாவினன்குடியைப் பங்கு போட்டுக் கொண்டவர். எண்ணத் தக்க அழகிய வாவிகள் > நிறைந்த நல்ல ஊரில் வாழ்பவர். பரங்குன்று, திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, > திருவேரகம், குன்றுதோறாடல் படைவீடுகளிலும் சென்று குடிகொள்ளும் திரு ஆவி > (ஆவியர்) குடிமக்கள் வாழும், தண்ணிய கார்முகில் பொழியும் மலையின் பெயரைச் > சொல்லிப் பயனடையுங்கள். > > இப்புடி சொல்லாட்டி சத்தியமா யாருக்கும் புரியாது. > > ஆமா கம்பர் ஏன் இன்னும் வரலை? அடெ... மெஸேஜ் அனுப்பி இருக்கார். சவுத் > அந்தமான் பகுதி ஹாட் ஸ்பாட் என்பதால் வரலையாம். மடக்கு அணிக்கு பாட்டுதானே > வேணும். சுந்தர காண்டத்தில் இருக்கு தேடிக்கோ... என்று சுருக். > > செய்யுளில் வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் > அல்லதுஅடிகளிற் பின்னும் வந்தால் அதுவே மடக்கு அணி. (பாட்ஷா படத்து ரஜினி > ஸ்டைலில் )எனக்கு யமக என்று இன்னொரு பேரும் இருக்கு. உலகில் இந்த மடக்கு அணியை > உரிய முறையில் அமைக்க வல்ல மொழிகள் சிலவே உண்டாம். சம்ஸ்க்ருதம் போன்ற சில > மொழிகளில் யமகம் அமைக்க முடியுமாம். ஆங்கிலம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் > மடக்கணிப் பாடல்களை அமைக்க முடியாதுங்கிறதும் பெரியவங்க சொல்றாய்ங்க! > > கம்பர் தந்த பாடலையும் லேசா படிங்களேன்... > > *பாடலம் படர் கோங்கோடும், பண் இசைப்* > *பாடல் அம் பனி வண்டொடும், பல் திரைப்* > *பாடு அலம்பு உயர்வேலையில் பாய்ந்தன,-* > *பாடு அலம் பெற, புள் இனம், பார்ப்பொடே* > > [சுந்தர காண்டம் - பொழில் இறுத்த படலம்] > > தமது குஞ்சுகளுடனே மரங்களில் இனிது தங்கியிருந்த பறவைகளின் கூட்டம் துன்பத்தை > மிகுதியாய் அடைய உயர்ந்து வளர்ந்துள்ள கோங்கு மரங்களும், பாதிரி மரங்களும், > சிறப்பித்துக் கூறப்பெறுகின்ற இசைப் பாடலைக் கொண்ட அழகிய குளிர்ந்த > வண்டுகளோடும் பல அலைகள் கரைகளை வந்து தழுவி அலம்பும் கடலிலே போய் விழுந்தன. > (யமக அணி விளங்க ஆரம்பிச்சிருச்சோ?) > > > > *அந்தமானிலிருந்து * > *தமிழ்நெஞ்சன்* > > > ***************************************************************************** > > > சித்தானந்தம் > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorO8ZFx8w%3DiQD%3DLaq6fUwvqnFcu6S82zOkYUGatTjCTGQ%40mail.gmail.com.
