Brahma patra nasika Padithathil pidithathu I like this blog KR IRS 1/1/23 மூக்குப் பொடி
சார் ! ஒன்று கவனித்தீர்களா? இப்போதெல்லாம் பொடி போடும் ஆசாமிகளை அதிகம் பார்க்க முடிவதில்லை. அந்தத் தலைமுறை கடந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது. என் சிறுபிராயத்தில் என்னை சுற்றித் தான் எத்தனை ‘பொடி’யர்கள்?.. பொடித் திருமேனிகள்? ஆள்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே சிட்டிகைப்பொடி எடுத்து , சின்முத்திரை காட்டியபடி, அது சிந்திவிடாமலும் அதை லேசில் போட்டுக்கொள்ளாமலும், கையை ஆட்டிஆட்டி பேசும் எத்தனை சித்த புருஷர்கள் இப்போது நினைவில் நிழலாடுகிறார்கள்? பொடியை இட்டு வைக்கத் தான் எத்தனை தினுசில் சமாச்சாரங்கள்? காய்ந்த வாழை மட்டைநறுக்கில் மடக்கிய பொடி; சிலிண்டர் போல் உருண்டு, மேல் மூடியிட்ட தகர டப்பி.; சின்ன புத்தகம் போன்ற வடிவில் மூடும்போது கிளிக் என மூடிக்கொள்ளும் எவர்சில்வர்/வெள்ளி டப்பி என்று பல தினுசு. ரயிலில் போகும் போது ஒரு வளமான மனிதர் தங்கத்தில் பொடி டப்பி வைத்திருந்ததைக் கூட பார்த்திருக்கிறேன். பொடிக்கடைகாரரின் விசாரிப்பு… ‘பெரிய அய்யாவுக்கா தம்பி?’ … அங்கு பிங்கான் ஜாடிகளில் உள்ள பொடியை எடுக்க பிரத்யேகமான நீளக் கரண்டி. கரண்டியின் சின்ன குழிவில் அளந்து எடுத்து விற்கப் படும் லாவகம்; கடையின் காட்டமான மணம்… யாவும் ஞாபகத்தில்… நான் படித்த பள்ளியில், கிருத்துவ ஆசிரியர்கள் சிகிரெட் பிடிப்பதும் பிராம்மண ஆசிரியர்கள் பொடி போடுவதும் ஏதோ மத சம்பந்தமான சடங்குபோல் அந்த வயதில் எனக்குத் தோன்றும். மிக ஆச்சாரமான சிலரும்கூட, மூக்குப் பொடிக்கு ஒரு பூஜா திரவியத்தின் அந்தஸ்த்தைக் கொடுத்திருந்ததை நான் கண்டதுண்டு. ‘ஜபேஷு, ஜபமத்யேஷு, ஜபாந்தரேஷு, புன புன: நாஸிகா சூர்ணமாதாய கோடி யஞ்ய பலம்லபேத்’ என்ற ஸ்லோக டச்சும் உண்டு! (ஜபத்தின் ஆரம்பத்தில், இடையில், இறுதியில் மீண்டும்மீண்டும் பொடியைப் போடுகையில், கோடி யக்ஞங்கள் பண்ணிய பலன்கள் கிட்டும்) இதற்கு, ‘பிரம்மபத்ர நாசிகா சூரணம்’ என்று பொடிதாஸர்களின் பரிபாஷை வேறு. ‘பொடி போடுதல் புருஷ லக்ஷணம்’ என்பன போன்ற கித்தாப்புகள் மூக்குப் பொடிக்கு உண்டு. இந்தப் பொடி ரசிகர்கள் இடுப்பில் வேட்டி கட்டுகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாய்க் கையில் ஒரு கைக்குட்டை வைத்திருப்பர்! ‘ஓசிப் பொடி தனிசுகம்’ என்ற பெருமிதங்கள்.. பொடியில் கருப்பு பொடி, வெள்ளைப் பொடி, நெய்பொடி என ஏதேதோ வகைகள் உண்டு. சிலர் பொடி போட்டுபோட்டு மூக்கே வாணக்குழாய் போல் மாறியிருக்கும். ரொம்பவே ஊழலாகப் பொடியைப் போட்டு கொள்பவர்களே பெரும்பாலும்... என் அப்பா பொடி போடுவது ஏதோ கைக்குழந்தையை குளிப்பாட்டும் லாவகத்தோடு நாசூக்காய் இருக்கும். முதலில் கைக்குட்டையை நீளவாகில் உருட்டி அதை மடியமர்த்தி, பொடிடப்பியின் தலையில் வாஞ்சையோடு மெல்ல விரலால் தட்டி, ஒரு சிட்டிகை எடுத்து , சடேரென்று தலையை இடப்பக்கம் திருப்பி , கை மூக்கருகில் செல்வதும் தெரியாமல், பொடியை உள்ளுக்கிழுததும் தெரியாமல், பொடி போடப் பட்டுவிடும். இரு கைகளாலும் கைக்குட்டையை பிடித்து கீழ்மூக்கில் பிடில் வாத்தியத்துக்கு வில் இழுப்பது போல் மூக்கின் இருபக்கமும் சிலுப்புவது ஏதோ நாட்டிய முத்திரை போல் இருக்கும். பொடி போட்ட பின் ஓரிரு நிமிஷம் கிறங்கிய மௌனம் வேறு! அறிவாளிகள் அனைவரும் பொடிப் பிரியர்களே என என் அப்பா கட்டும் கட்சியில் , நெப்போலியன் போனபார்ட் முதல் அறிஞர் அண்ணா வரை அனைவரும் இருப்பார்கள். பொடி பற்றி சில கவிதைகள் வேறு சொல்லுவார். கொடியணி மாடமோங்கி குலவுசீ ரானைக் காவில் படியினி லுள்ளார் செய்த பாக்கிய மனையான், செங்கைத் தொடியினர் மதனன்,சோம சுந்தரன் கடையிற் செய்த பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே. உ.வே. சாமிநாதய்யர் எழுதியதாய் அப்பா சொன்ன நினைவு. இன்னொரு பாடலில் “நாறுபுனல் மூக்கோட்டை” என்ற பதம் மட்டும் நினைவிருக்கிறது. அப்போதேல்லாம் பல பொடிக் கம்பெனிகள் பிரபலமாய் இருந்தன. T.A.S .ரத்தினம் பட்டணம் பொடி, N.S.பட்டினம் பொடி, ஸ்ரீ அம்பாள் மூக்குத் தூள் போன்றவை. பின்னதன் பொடி டப்பியில் இரு குழந்தைகள் AMBAL SNUFF என எழுதப்பட்ட ஒரு பதாகையை இருபுறமும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் என்பதும் நினைவில் உள்ளது. T.A.S ஸிலோ ஒரு மீசை வைத்த முரட்டு ஆசாமி பொடி இடித்துக் கொண்டிருப்பதாய் விளம்பரம் இருக்கும். ஆற்றுத் திருநாள் மற்றும் உத்ஸவ காலங்களில் TAS பட்டிணம் பொடியின் முரட்டு அங்கிள் பெரிய கட்அவுட்டில் அசைந்தசைந்து பொடியிடிக்கும் விளம்பரம் பார்க்க அந்நாளில் ஒரு வேடிக்கை. இலவச விளம்பர கைவிசிறியும் விநியோகிப்பார்கள். ஏதோ பொடிசாய் ஒரு பதிவு போட நினைத்து பொடி பற்றியே போட்டு விட்டேன். இந்தப் பதிவை இன்னும் பொடி போடும் புண்ணிய மூக்குகளுக்கு... அது என்ன?? ஹாங்... DEDICATE செய்கிறேன். பொடி மஹாத்மியம் முடிவுற்றது! (பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எனது ப்ளாக் ‘வானவில் மனிதனில்’ எழுதியது-மீள்) xxxxxx Brahma patra nasika Nose powder Sir! Did you notice one? Now-a-days you don't see many people who use powder. That generation seems to have passed. How many 'Podi' people are around me in my childhood? Podit Thirumeni? How many Siddha Purushas are remembered now who took a pinch of powder between the forefinger and thumb and waved their hand without spilling it or lacing it as they showed the seal? How many Dinusil Samacharas just to keep the powder? Dried banana powder wrapped in batter; A tin can rolled like a cylinder and covered at the top.; Small book shaped Eversilver/silver tin that closes with a click. I have even seen a wealthy man carrying a gold powder box while traveling in a train. The powder shopkeeper's inquiry… 'Are you big bro?'… There is a special long spoon to take the powder from the pingan jars. Lavagam, which is measured and sold in the hollow of a spoon; The wonderful smell of the shop... all in the memory... In the school I attended, the Christian teachers smoking cigarettes and the Brahmin teachers smoking powder seemed to me at that age to be some sort of religious ritual. I have found that even some of the most ritualistic people have given nose powder the status of a pooja potion. 'Jabeshu, japamadyeshu, jabandareshu, puna puna: There is also a touch of the sloka 'Nasika Surnamadaya Kodi Yanya Palamlabeth'! (By applying the powder again and again at the beginning, in between and at the end of the japa, one gets the benefits of crores of yagnas) For this, 'Brahmabhatra Nasika Suranam' is different from the words of Bodhitasars. For nose powder there are Kitabs like 'Podi Podutal Purusha Lakshanam'. Whether or not these powder fans are wearing a waistcoat, they definitely have a handkerchief in hand! The pride of 'Osip Podi Thanisukam'.. There are different types of powder like black powder, white powder and ghee powder. Some people put powder on their noses and it turns into a tube. Most of the people who use powder are very corrupt... My father's powder is like a baby-bathing soap. First roll the handkerchief lengthwise and fold it, gently tap the head of the powder container with your finger, take a pinch, slowly turn your head to the left, without knowing whether your hand is going to the nose or inhaling the powder, the powder will be applied. Holding the handkerchief with both hands and drawing the bow of a fiddle under the nose, crossing both sides of the nose looks like a dance mark. The silence that followed for a couple of minutes after applying the powder was different! Everyone from Napoleon Bonaparte to Arignar Anna will be in the party that my father is building as all intellectuals are lovers of powder. He will recite some poems about powder. Kodiyani Matamongi Kulausee Ran Naik Ga Bhakya Manayan, Sengait, who made the step Made by Thodiyar Madanan and Soma Sundaran Don't put powder on your nose, don't bless your nose. U.V. I remember my father telling me that it was written by Saminathaiyar. In another song, I remember only the term "Narufunal Mookottai". Back then many boutique companies were popular. T.A.S. Ratnam Pattanam Powder, N.S. Pattanam Powder, Sri Ambal Nose Powder etc. It is also remembered that two children are holding up a banner written AMBAL SNUFF on either side of the binnathan powder canister. The ad will feature a mustachioed thug grinding powder in a T.A.S. During Arut Thirunal and Utsava seasons, it is fun to watch TAS Pattinam Podi's advertisement in which the rogue uncle shakes and powders in a large cutout. Free promotional fan will also be distributed. I thought of posting something about powder, so I posted it about powder. For those pious noses still dusting off this post... what is that?? Hang on... DEDICATE. Podi Mahatmiyam is over! (Written on my blog 'Rainbow Man' twelve years ago - re) KR IRS 1/1/23 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopAeKR4y34TOww_HCpOpX_h0srNBspdouQMYPU6BHXa8g%40mail.gmail.com.
