As seen in FB and simply moved; Nallar oruvar ularael avar poruttu,
peyyena peyyum mazhai; even if there is only one good soul, rain will pour
piercing the sky. KR IRS 8323
I
Sankar Narayanan
1d
<https://www.facebook.com/sankar.narayanan.944/posts/pfbid02tMP2YrwaK5QSP7cu2dWWMhVEuK7Y3fFSXJ352HYbtDFmAUsjhUfjiudH1b9xqRRil>
 ·

இன்றோடு 17 ஆண்டுகள் முடிந்தது..

2006 மார்ச் 7. சென்னை அண்ணாநகர் ரவுண்டானா to ஆர்ச் சாலையில் காரை ஓரமாக
நிறுத்தி விட்டு, எதிர் சாரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியை
முடித்துவிட்டுத், திரும்ப சாலையைக் கடக்கிறேன். அப்போது எல்லாம் சாலையில்
இவ்வளவு வண்டிகள் கிடையாது.

எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை. இரண்டு பைக் மட்டும்
நினைவிருக்கிறது. சாலையில் ரேஸ். என் மீது ஒரு வண்டி மோதி, வேறொரு வண்டி
இரண்டு கால்களிலும் ஏறியது மட்டும் நினைவிருக்கிறது.

நான் சென்ற நிறுவனத்திலிருந்து நண்பர்கள் ஓடி வந்து தூக்க முயல்கிறிர்கள்.
இரண்டு காலும் முறிந்து விட்டது தெரிகிறது. தூக்கி காரில் போட்டு பத்து
நிமிடத்திற்க்குள் சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனில் இருந்தேன்.

டாக்டர் சுதாகர் வில்லியம்ஸ். வாந்தி எடுத்தாயா? மயங்கினாயா என்று பலமுறை
கேட்டார். இல்லை என்றதும் உடனடியாக x ray எடுத்து இரண்டு காவிலும் இரண்டிரண்டு
அதாவது tibia, febula இரண்டுமே இரண்டாக முறிந்து விட்டன. முட்டி, கணுக்கால்
எல்லாம் minor fracture என்று கண்டறிந்தனர். என் மனைவியடம் டாக்டர் என்
பேன்ட்டில் இருந்த.வண்டியின் டயர் தடத்தைக் காண்பித்திருக்கிறார்.

இதில் இடதுஜகால் tibia ஏற்கனவே 1992ல் உடைந்து bone grafting எல்லாம் செய்தது.

சுமார் இரண்டு மணிநேரத்திற்க்குள் ஆபரேஷன் தியேட்டரில் சர்ஜரி துவங்கி
விட்டார்கள். இரண்டு கால்களிலும் ஒரு நீண்ட nail செலுத்தி அதை முட்டி மற்றும்
கனுக்காலில் இணைத்தனர்.

டாக்டர் தயாராக இருந்தார். தியேட்டர் தயாராக இருந்தது. எனது உயரத்திற்க்கு
ஏற்ற.nail தயாராக இருந்தது. அடிபட்டாலும். ரத்த காயம் இல்லை. ஆகவே infection
பயம் இல்லை. இதெல்லாம் கஷ்டத்திலும் நல்லது. Gods grace என்று டாக்டர்
கூறினார்.

ICU விலிருந்து ரூமுக்கு வந்து 8 நாளாயிற்று. முட்டிக்குக் கீழே அசைக்கவே
முடியவில்லை. டாக்டர் வந்து காலைத்தூக்கு, மடக்கு என்கிறார். அசைக்கவே
முடியவில்லை. 15ஆம் தேதி காலைத் தூக்கச் சொல்கிறார். அசையவே முடியவில்லை.
அதுவரை தைரியமாக இருந்த நான் முதல்முறையாக நம்பிக்கை இழந்தேன்.

மனம் நொந்து கடவுளே கை விட்டு விட்டாயே! மகா பெரியவா கை விட்டுட்டேளே என்று
புலம்பி மருந்து மயக்கத்தில் கண் மயங்கினேன்.

சிறிது நேரத்தில் ஆறு வயதில் தரிசித்த தேனம்பாக்கம். மகா பெரியவா நடந்து
வருகிறார். நான் அவர் முன்பு கண்கலங்கி நிற்கிறேன். தமது தண்டத்தின்
அடிப்பகுதியை என்னை நோக்கிக் காட்டுகிறார். இவனுக்கு பிரசாதம் கொடு என்று
சொல்லி கைநிறைய பிரசாதம் அள்ளித் தட்டில் வைத்து கைங்கர்யபரரிடம் தந்து
எனக்குத் தரச் சொல்கிறார். அத்தனையும் செப்புக்காசுகள். பக்கத்தில் தம்பி
நிறீகிறான். அவனுக்கும் கொடு என்று தருகிறார்.

சில.பத்திரிக்கைகளைத் தரச் சொல்கிறார். அதில் சில உதவிகள்
கேட்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பண்ணு என்று உத்தரவிட்டார்.

நகர்ந்து சென்று விட்டார். தூக்கி வாரிப் போட்டது போல எழுந்தேன். என் மனைவி
பதறிப் போய் வந்தார். இது மொத்தமுமே டாக்டர் வந்து போன பத்து
நிமிடத்திற்க்குள் நடந்து விட்டது.

காலில் உணர்ச்சி தெரிந்தது. டாக்டரைக் கூப்பிடச் சொன்னேன். காலைத்
தூக்குகிறேன்.என்று சொல்லித் தூக்கினேன். எழுந்து நிற்கிறேன் என்றேன். வாக்கர்
கொண்டு வந்தார்கள். உடலைத் திருப்பிக் காலை ஓரு ஸ்டூலில் வைத்துப் பின்
மெதுவாக வாக்கரைப் பிடித்துக்கொண்டு இறங்கினேன். கால் தரையில் படுகையில் ஒரு
ஷாக் அடித்தது.

எட்டுநாள் படுத்துக் கிடந்தது தலை சுற்றியது. சிறிது சமாளித்து நடக்கத்
துவங்கி, walker பிடித்து ஒரு பெரிய ரவுண்டு வந்தேன். டாக்டர் போதும் என்று
தடுத்து விட்டார்.

தொடர்ந்து ஒருவாரம் வாக்கர் வைத்து நடைப் பயிற்சி. பின் வாக்கரோடு நானே எனது
தேவைகளை கவனிக்கத
துவங்கினேன்.

24ஆம் தேதி கச்சிதமாக எலும்புகள் பொருந்திவிட்டன. இனி அங்கு calcium deposit
நடந்து அவைகளை இணைய ஆரம்பிக்கும் என்றனர்.

சரியாக நூறு நாட்களில் வாக்கர் விட்டு கிரெச் வைத்து நடக்கத் துவங்கினேன்.
நூற்று இருபதாவது நாள் ஏற்கனவே உடைந்த காரணத்தால் இடது கை க்ரெச் மட்டும்
வைத்துக்கொண்டு வேலைக்குப் போக ஆரம்பித்து மெதுவாகப் பழையபடி ஆனேன்.

எனக்காகப் பிரார்த்தனை செலுத்த திருவள்ளூர் சென்ற என் தம்பி ஒரு விபத்தில்
சிறு காயத்தோடு தப்பி விட்டார். அவருக்கும் பிரசாதம் கொடுத்த காரணம் புரிந்தது.

இப்போதும் கால் வலி கொஞ்சம் உண்டு. சிரமங்கள் உண்டு. ஆனால் அதைத்
தாங்கிக்கொண்டு என்னால் வேலை நிமித்தமாக ஊர் சுற்ற முடிகிறது. திருநெல்வேலி,
திருவானைக்கா, சிதம்பரம்,. ஶ்ரீரங்கம் போன்ற பெரிய கோவில்களிலும் முழுவதும்
நடந்து தரிசிக்க முடிகிறது. திருப்பதி வரிசையில் நாலு மணி நேரம் நிற்க
முடியும். நாலு மணிநேரம் பலமுறை உட்கார்ந்து எழுந்து ஸ்ரார்த்தம் செய்ய
முடியும்.

முப்பத்தொன்பது வயதில் இரண்டு காலும் உடைந்து நடுரோட்டில் கிடந்த நாயேனைக்,
கனவோ நனவோ.எனக் கண்ணார் கழல்காட்டி ஆட்கொண்ட அண்ணல். இன்னும் கொஞ்சம் நாள்.
அறுபது வயது வந்து விடும். வாழ்வின் முக்கியப் பகுதியைக் கடந்து விட்டேன்.

விபத்து என் கர்மவினை. அதை நான் அனுபவித்தே தீர வேண்டும். அதைக் கடக்கக்
குருவின் பலரடிகளெனும் ஓடம் இருந்தது.

எனது முதல் இருபத்து நான்கு வயது வரை ஐயனைக் கண்ணாரவும், அருள்மொழி கேட்டும்
தரிசனம். அடுத்த மூன்றாண்டுகள் மௌனகுரு தரிசனம். இனி அவரைக் காண இயலாதோ
என்றெண்ணிக் கலங்க வேண்டாம் என நாயேனையும் கனவில் ஆட்கொண்ட வள்ளல் மலரடி துணை.

II     Sankar Narayanan
1d ·
17 years completed today..

2006 March 7. I parked my car on the side of Chennai Annanagar Roundabout
to Arch Road, finished work at a company on the opposite side and crossed
the road to return. At that time, there were not so many cars on the road.

I don't know where they came from. I remember only two bikes. Race on the
road. I only remember being hit by a cart and another cart running over
both of my legs.

Friends from the company I visited are running and trying to pick me up.
Both legs seem to be broken. I picked him up and put him in the car and was
at Sundaram Medical Foundation within ten minutes.

Dr Sudhakar Williams. Did you vomit? He asked her several times if she had
fainted. When they said no, an x-ray was immediately taken and two of the
bones, i.e. tibia and febula, were broken in two. Knee and ankle were
diagnosed as minor fracture. The doctor showed my wife the tire track on my
pants.

The left tibia was already broken in 1992 and bone grafting was done.

They started the surgery in the operation theater within about two hours. A
long nail was driven into both legs and joined at the knee and ankle.

The doctor was ready. The theater was ready. Perfect for my height.nail was
ready. Even if beaten. No bleeding. So there is no fear of infection. All
this is good even in hardship. Gods grace said the doctor.

It has been 8 days since he came to the room from ICU. Couldn't move below
the knee. The doctor comes and says to raise the leg and wrap it. Couldn't
move. He tells me to wake up in the morning on the 15th. Couldn't move. For
the first time I, who had been brave till then, lost hope.

Heart broken and God gave up! I moaned, "Maha Periyava, please leave me
alone."

Tenambakkam, who visited at the age of six in a short time. Maha Periyava
is walking. I stand staring before him. He shows me the bottom of his cock.
He says give prasad to him, put a handful of prasad on a plate and give it
to Kaingaryapara and tell him to give it to me. All copper coins. His
brother sits next to him. He also says give it to him.

He asks to give some magazines. It asked for some help. He ordered to
continue doing this.

He moved away. I woke up as if I had been thrown. My wife came panicking.
All this happened within ten minutes of the doctor's arrival.

I felt the sensation in my leg. I told him to call the doctor. I said I
will lift my leg. I said standing up. They brought a walker. I turned my
body and put my leg on a stool and then slowly got down holding the walker.
A shock struck the leg on the floor.

Lying for eight days, dizzy. I managed to walk a little bit and started
walking, holding the walker and came a big round. The doctor said enough
was enough.

Walk training with a walker for one week. Then I took care of my own needs
with Walker
I started

On the 24th the bones fit perfectly. They said that from now on there will
be calcium deposit and they will start joining.

In exactly one hundred days, I left the walker and started walking with
crèche. On day 120 I started going to work with only my left crutch because
it was already broken and I slowly became old.

My younger brother, who went to Tiruvallur to pray for me, escaped with
minor injuries in an accident. He also understood the reason for giving
prasad.

Still have some leg pain. There are difficulties. But I can bear it and
travel around town for work. Tirunelveli, Thiruvananthapuram, Chidambaram.
Even big temples like Srirangam can be visited on foot. You can stand in
the Tirupati queue for four hours. You can do srartham by sitting and
getting up several times for four hours.

At the age of thirty-nine, the dog who was lying in the middle of the road
with both legs broken, dreamed or realized. A little more day. Sixty years
will come. I have passed the prime of life.

Accident is my karma. I have to experience it. To cross it, the Guru had to
run several feet.

My first darshan was to look at Aiyan and hear his blessings till I was
twenty-four years old. The next three years will be Maunaguru darshan.
Valal Malaradi is the companion of Nayen who also dreams of not being able
to see him anymore.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopjRndvMJF6YOaY1NUBMPqe%2Bg_JRonFOj4V7yDbB3ZwrA%40mail.gmail.com.

Reply via email to