*கடவுளைப் பார்க்க முடியுமா? எப்போது நம் கண்கள் அவரைக் காணும்? இன்று
நம்மால் **அவரைப் பார்க்க முடியவில்லையே? என்று அவர் நமக்குத் தெரிவார்?
இந்தக் கேள்வியை **நம்மாழ்வாரிடம் கேட்டால் அவர் எப்படி விடையளிப்பார்?
இப்படி:*

*அன்றே, நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்,*
*இன்றே, நாம் காணாது இருப்பதுவும் - என்றேனும் *
*கட்கண்ணால் காணாத அவ்வுருவை,நெஞ்சு என்னும் *
*உட்கண்ணால் காணும் உணர்ந்து.*

*கட்கண் என்றால் புறக்கண்.*
ஆழ்வார் பாசுரத்தில் ஒரு பிழையுள்ளதாக நான்  கருதுகிறேன் . கார்வண்ணனை உள்ளே
காண்பதென்றால், வெளியே உள்ள சர்குண ப்ரஹ்மத்தை அல்லவா காண  சொல்கிறார்? உள்ளே
இருப்பது நிர்குண ப்ரம்மம் . ஆத்மன் . ஜீவாத்ம . பரமாத்மாவின் வெளிப்பட்ட
பகுதி . காண முடியாத பரப்ரஹ்மனின் புற வழிபாடே   சிலா ரூபம்
,கார்வண்ணன்.வெளியே பார்க்காதே உட்பக்கம் நோக்கு என கூறும் ஆழ்வார் கார்
வண்ணனைப்  பார் உள்ளே எனக் கூறுதல், சரியா?  உள்ளே இருப்பவனைப் பார்த்தால்
அதன் பின் ஏதேனும் உளதோ?   பகவத் கீதை அதை  வேறு விதமாக கூறுகிறது.
மனத்தினால் மனத்துள்ளே ஆத்மாவை காணுதல்.

Chapter 6: Sankhya-yoga
TEXT 5
uddhared atmanatmanam
natmanam avasadayet
atmaiva hy atmano bandhur
atmaiva ripur atmanah
<https://asitis.com/#3857>
SYNONYMS
<https://asitis.com/#3858>
uddharet—one must deliver; atmana—by the mind; atmanam—the conditioned
soul; na—never; atmanam—the conditioned soul; avasadayet—put into
degradation; atma—mind; eva—certainly; hi—indeed; atmanah—of the
conditioned soul; bandhuh—friend; atma—mind; eva—certainly; ripuh—enemy;
atmanah—of the conditioned soul.
<https://asitis.com/#3859>
TRANSLATION
<https://asitis.com/#3860>
A man must elevate himself by his own mind, not degrade himself. The mind
is the friend of the conditioned soul, and his enemy as well.   KR IRS 25423

On Tue, 25 Apr 2023 at 06:10, Rangarajan T.N.C. <[email protected]>
wrote:

>
>
>
>
> *கடவுளுக்கு உருவம் உண்டா?*
>
> *கடவுளைப் பார்க்க முடியுமா? எப்போது நம் கண்கள் அவரைக் காணும்? இன்று
> நம்மால் **அவரைப் பார்க்க முடியவில்லையே? என்று அவர் நமக்குத் தெரிவார்?
> இந்தக் கேள்வியை **நம்மாழ்வாரிடம் கேட்டால் அவர் எப்படி விடையளிப்பார்?
> இப்படி:*
>
> *அன்றே, நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்,*
> *இன்றே, நாம் காணாது இருப்பதுவும் - என்றேனும் *
> *கட்கண்ணால் காணாத அவ்வுருவை,நெஞ்சு என்னும் *
> *உட்கண்ணால் காணும் உணர்ந்து.*
>
> *கட்கண் என்றால் புறக்கண்.*
>
> *சக்கரக் கையனின் மேகக் கறுப்பான உருவத்தை அன்றைக்கு நம் கண் பார்க்கும்.
> என்றைக்கு? **இன்று நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதும், என்றும்
> புறக்கண்ணால் பார்க்க முடியாத **அந்த உருவத்தை உணர்வுபூர்வமாக உனக்கு உள்ளே
> இருக்கும் அகக்கண்ணால் பார்க்க **முடியும்.*
>
> *ஆலயத்துக்குச் சென்று பகவானை வழிபடும்போது சற்று நேரம் கண்ணை
> மூடிக்கொள்கிறோமே **அது இதற்குத்தான் என்று தோன்றுகிறது. புறக்கண்ணால்
> விக்கிரகமாகவோ சிலையாகவோ **பார்த்த வடிவமல்ல அந்த வடிவம். உணர்வுபூர்வமாக
> உள்ளத்துள் தெரியும் ஓர் உருவம்.*
>
> *"உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் (நினைத்துக்கொள்)!" என்று மற்றொரு
> பாசுரத்தில் **சொல்லியிருக்கிறார்.*
>
> *அதுதான் அவன் உண்மையான உருவம். இவ்வாறு உள்ளத்தில் உணர முடிகிறவர்களுக்கு 
> **நாளடைவில்
> உருவ வழிபாடு தேவையற்றுப் போகும். பாட்டை மறுபடி பாருங்கள்.*
>
> *- சுஜாதா *
>
> *அன்புடன்,*
>
>
> *சித்தானந்தம்  *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorZ-C9-t1GdinT%2BXOAskGTYnV_PBKE%2BAipQ7MYXka4fFw%40mail.gmail.com.

Reply via email to