*அவரோ நீர்?.." எனக் கேட்டேனோ மணற்பாக்கத்தாரைப் போலே?*
*... பத்மா கோபால்* "ஸ்வாமி!.. க்ஷமிக்கணும்... அந்த எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்றவாளுக்கு நடுவே வாழற தகுதியும் அடியேனுக்கு இருக்கா?.. குணபூர்த்தி இருக்கற அவா எல்லாரும், அடியேனைப் போல ஒரு தகுதியும் இல்லாதவாள சேர்த்துப்பாளா?.. தேவரீர் உலாவும் பெருமாள்!.. அதனால அடியேனோட குணக் கேடுகள எல்லாம் பெரிசு படுத்த மாட்டேள்!.. தேவரீர் திருவடி சம்பந்தத்துனால அடியேன் நிச்சயம் பாவனமாயிடுவேன்!.. அதனால தான் தேவரீர் கிட்ட கைங்கர்யத்தப் ப்ரார்த்திச்சுண்டு வந்து நிக்கறேன்... அத்தோட இல்லாம, தேவரீர் திருவடிக் கீழ வாழ்வுக்கு ஏது குறை?.." அந்தப் பெண்மணி பேசிய விதத்திலிருந்தே, அவளது பாண்டித்யத்தையும் பண்பையும் பெரிய ஜீயரால் ஊகிக்க முடிந்தது.. அதனால், அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக, "சொல்லும்மா!.. ஒனக்குத் தகுதி இல்லைனு நீ ஏன் நெனைக்கற?.. அந்தப் பார்த்தசாரதியோட க்ருபை ஒனக்கு இல்லேன்னு யார் சொன்னா?.." என்று வினவினார்.. வார்த்தைகள் தழுதழுத்தன வந்தவளுக்கு.... ...ஸ்வாமி!..அவனோட ப்ரேமைக்கு அடியேன் மட்டும் பாத்திரமாயிருந்தா ஸ்வப்னத்துலயாவது அடியேனக் கடாக்ஷித்திருப்பானே!.. நான் என்ன, "அவரோ நீர்?.." எனக் கேட்டேனோ மணற்பாக்கத்தாரைப் போலே?.." என்று நிறுத்தினாள்... ...தற்சமயம், அவள் ஞானத்தைச் சிறிதே அனுபவிக்கும் ஆவல் கொண்டார் மாமுனிகள்... தனது மழலையின் பேச்சை இரசிக்கின்ற ஒரு தாய் போல சட்டென்று மாறிப் போனவர், "சொல்லம்மா... ஒன் வாயால அந்த வ்ருத்தாந்தத்தை நானும் அனுபவிக்கறேன்... நீ சொன்ன வாக்யத்துக்கு என்ன அர்த்தம்?..." .....என்று மென்மையாக வினவினார்.. வந்திருந்த மாதரசி, மணற்பாக்கத்தாரின் வைபவத்தை விரிவாகக் கூறலானாள்... ஶ்ரீபிள்ளை லோகாசாரியர் அருளிய பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்கள்ல "ஶ்ரீவசணபூஷணம்"கற க்ரந்தம் ரொம்ப பிரஸித்தம்!.. அதோட ஆழ்பொருள் யாருக்குமே அவ்ளோ லேசுல பிடிபடாது.. ஒருசமயம், கச்சி தேவராஜப் பெருமாள் தமக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட ஒரு அடியவரான "மணற்பாக்கத்து நம்பி"ங்கறவருக்கு ஸ்வப்னத்துல வந்து, சில விசேஷ அர்த்தங்கள உபதேசம் பண்ணிட்டு, மேலும் விசேஷமான சில அர்த்தங்களையும் காட்டிக் கொடுக்க விரும்பி, "இன்னமும் முக்கியமா சில அர்த்தங்கள் வேணும்னா, நீர் போய் இரண்டாற்றுக்கு நடுவே (ஶ்ரீரங்கம்) இரும்! நாம் அங்கே வந்து மேலும் சொல்கிறோம்.."னு சாதித்தார்.. அதே மாதிரி மணற்பாக்கத்து நம்பியும் அங்கே வந்து ஏகாந்தமான ஒரு கோயில்ல இருந்துண்டு, பேரருளாளன் ஸ்வப்னத்தில் அருளிய அர்த்தங்களை எல்லாம் பல நாட்கள் அனுஸந்தானம் பண்ணிண்டு இருக்கச்சே, ஒருநாள் பிள்ளை லோகாசாரியரே, தம்மோட சிஷ்யர் குழாத்தோட அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்.. அந்த இடம் ஏகாந்தமா இருக்கவும், தம்மோட சிஷ்ய கோடிகள அங்க அமர வைத்து, சில விசேஷ அர்த்தங்கள எல்லாம் உபதேசம் பண்ண ஆரம்பிச்சார்.. அதைக் கேட்டுண்டு இருந்த மணற்பாக்கத்து நம்பி, தமக்கு ஸ்வப்னத்துல பேரருளாளன் அருளின அர்த்தங்களும், இந்த அர்த்தங்களும் ஒரே மாதிரியா இருந்ததைக் கண்டு, ரொம்ப ஆச்சர்யப்பட்டு, "இவர்தான் ஸ்வப்னத்துல நமக்கு சாதித்த அந்தப் பேரருளாளனோ!.." என்று வியந்து, தாம் ஒதுங்கி இருந்த இடத்துலேந்து வெளியே வந்து, ஶ்ரீபிள்ளை லோகாசாரியரைப் பார்த்து, "தாம்தான் அந்த தேவராஜனோ?.." என்ற பொருள்பட, "அவரோ நீர்?.." என்று வினவினார்.. பிள்ளை லோகாசாரியரும், "ஆம்! ஆவதேது?...(ஆம், என்ன விஷயம்?..) என்று கேட்டருள, மணற்பாக்கத்து நம்பி, கண்ணீரோடே ஓடோடி வந்து லோகாசார்யரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, தமக்குப் பேரருளாளன் ஸ்வப்னத்தில் சாதித்தை எல்லாம் கூறவும், ஶ்ரீபிள்ளைலோகாசார், நம்பியைத் தமது சிஷ்யனாக அபிமானித்து, அவருக்கு மேலும் பல ரஹஸ்ய அர்த்தங்களை விசேஷமாக போதித்தார்... அந்த அர்த்தங்களை எல்லாம் பின்னாளில் பேரருளாளன் நியமனத்துல "ஶ்ரீவசனபூஷணம்"கற க்ரந்தமாக்கி, இன்னிக்கு நாமெல்லாரும் அனுபவிக்கும்படி தந்துருக்கா.. அப்படி ஸ்வப்னத்துலேயும், நேரேயும் வந்து பெருமான் அனுக்ரஹிக்கற அளவுக்கு அடியேனுக்குத் தகுதியும் இருக்கா ஸ்வாமி?.." ....என்று கண்களில் நீர் மல்க விண்ணப்பித்து நின்றாள் திருவல்லிக்கேணி மாதரசி.... ஶ்ரீவசணபூஷணம் படித்து அனுபவிக்க கீழ் உள்ள சுட்டியைப் பயன் படுத்திக் கொள்ளவும் <http://goog_1359974512> https://namperumal.wordpress.com/2014/12/21/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/ (வளரும்..) <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> https://www.youtube.com/watch?v=Gc4AOckE8nQ *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* [image: zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpjjrZeuENMCu%2BAY9712npFzNORG_0budXZX_zQt77Opg%40mail.gmail.com.
