நடவாவிக் கிணறு,,,,,,,,,,,,,,
அய்யங்கார் குளம் என்றழைக்கப்படும் தாத்தாச்சாரியார் வெட்டிய குளமும்,
சஞ்சீவிராயர் கோவில் எனும் வடக்கு நோக்கிய அனுமன் கோவிலும் அமைந்துள்ள
இடத்தின் வட பகுதியில் சற்று தொலைவில் அமைந்துள்ள நீர் நிலை !

சாதாரணமாக நீர் நிலை என்றால்,,,,,?
சுற்றிலும் கரைகள் இருக்கும் !
கரையினைச் சுற்ரி தண்ணீர் தேங்கி நிற்கும்,,,

இது அதன் அளவினைப் பொறுத்து
குளம்
ஏரி
ஊருணி
பொய்கை
மடு
கேணி
மோட்டை
அள்ளல்
கிணறு
துரவு
தடாகம்
வாவி
ஓடை
அளக்கர்
அசம்பு
அள்ளல்
அகழி
அயம்
ஆழிக்கிணறு
இலஞ்சி
கயம்
கழி
சுனை
மடு
குட்டை
கூவல்
தருவை ,,,,,, என நீளும்,,,

இது மட்டும் தானா ?
தமிழ்* நிகண்டு* காட்டும் சொற்கள் இன்னொரு பக்கம் அணி வகுக்கிறது,,,,
*இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம்,
உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை,
படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம்,
பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம்.*

இத்தனையும்,,, தாண்டி நடவாவிக்கிணறு என்றால்,,,,?
என்னவென்று விளக்கம் சொல்ல,,,,?

‘’செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று,’’ என்று கரிகால மன்னனைப் பாடிய
உருத்திரங்கண்ணனார் தன் *பட்டினப்பாலையில்*,,,, வாவி  என்றொரு சொல்லினைச்
சொல்கிறார்,,,

இதையெல்லாம்,,,விடுத்து,,,
நடவாவிக் கிணறு என்றால்,,,,,?

நீரற்று வறண்ட காலத்திலும்,,,
நடை பயணம் செய்கின்ற மக்களுக்காக,,,,,
தன் குடிநீர் தேவையினைத் தீர்க்க,,,
தாகசாந்தி செய்ய,,,
தண்ணீர் பந்தலைப் போல,,,,,
அன்று இப்பகுதியினை அரசாண்ட மன்னனின், நிலப்பிரபுவின் தாராள குணம்,,, இந்த
நடவாவிக் கிணறாக உருப்பெற்றது என்றே நினைக்கிறேன்.

சாதாரணமாக,,,,
கிணறு என்றால்,,, சட்டென்று கண்னில் படும்,,, !
ஆனால்,,,
இதுவோ,,,?

சுற்றிலும்,,,
ஆள் அரவமற்றுக் கிடக்கிற பகுதியில்,,,,

இந்த நீர் நிலையின் தொடக்கத்தில்,,
இருபுறமும்,,,யாழிகள் அணிவகுக்க,,,
யாழித்தூண்களின் மேல் இருபுறமும், யானைகள் நீர்ச் சொரிய நடுவே திருமகள் !

வெற்றியின் அடையாளமாக,,,
மங்கலத்தின் அடையாளமாக,,,
கஜலட்சுமி வீற்றிருக்க,,,
அவளை வியந்தபடியே,,,,
வணங்கியபடியே அந்த தோரண வாயிலைக் கடந்தால்,,, ஒரு பத்தடி நீளத்தில்
சமதளப்பரப்பு,,,

சட்டென்று மண் நோக்கிய,,,
பாதாளம் நோக்கியபடிச் செல்லும் படிக்கட்டுகள்,,,,

அந்தப் படிக்கட்டுகளின் இருபுறம் கனத்த கற்சுவர்கள்,,,
கற்சுவர்களைப் பிடித்தபடியே படிக்கட்டுகளில் இறங்க,,,,

சட்டென்று  சுற்றிலும்  எட்டடி அகல நடைபாதையுடன் பன்னிரு கால் மண்டபம்,,, !

பன்னிருகால் மண்டபத்தின் தூண்களில் வைணவச் சிற்பங்கள் !
அதன் நடுவே தெள்ளிய தண்ணீர்,,, !

ஒரு தண்ணீர் கிணற்றுக்கா ? இத்தனைப் பாதுகாப்பு,,,, ?
என்ற எண்ணம் எழமாலில்லை,,,
ஆனால்,,,
நான் சென்றிருந்த நேரம் கோடைக்காலம்,,, என்பதால்,, இப்படித்தான்
காட்சியளித்தது !

இதுவே மழைக்காலம் என்றால்,,,,?
தரைப்பரப்பு வரை தண்ணீர் அலையடித்துக் கொண்டிருக்கும்....

திருக்கச்சி எனும்
நகரங்களில் சிறந்த காஞ்சி மாநகரில்,,
இத்தகைய நடவாவிக் கிணறு  நான்கு உண்டு என்கிறது,, நூலொன்றும்,சான்றோர்களும்....

இக்கிணற்றினைப் பெருமைப்படுத்தும் விதமாக,,,
சித்திரை முழு நிலா நாளன்று காஞ்சி தேவராசப் பெருமாள் இந்த நடவாவிக்
கிணற்றுக்கு எழுந்தருளுகிறார்...

அவர் வரும் வேளையில்,,,
நடவாவிக் கிணற்றின் உள்ளிருக்கும் பன்னிருகால் மண்டபத்தில் அமர்ந்து
திருமஞ்சனம் சார்த்திக் கொள்கிறார்..

அந்நேரத்தில்,,,
அந்த உற்சவத்திற்காக,,,,
நீர் நிரம்பி இருக்கும்  அந்த கிணற்றிலுள்ள நீர் இறைக்கப்பட்டு பன்னிருகால்
மண்டபம் சுத்தம் செய்விக்கப்படுகிறது,,,


இன்று மின்மோட்டார் மூலமாக தண்ணீர் இறைக்கப்பட்டாலும்,,,
அன்று நீர் இறைப்பதற்கான கமலைத் தூண்கள்,,
அதிலும்,,கல்லினால் அமைக்கபட்ட கமலைத் தூண்கள் இப்பொழுதும்,,, ஒரு நீண்ட நெடிய
பண்பாட்டிற்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது,,, !


வாய்ப்பிருப்போர்,,,
ஒருமுறை இந்த நடவாவிக் கிணற்றினையும் கண்டு வாருங்கள்.
பார்த்தும்! கேட்டும்!.....

முனைவர் ஸ்ரீமதி ஸ்ரீவித்யா.சு
M.A;B.Ed;M.Phil;P.h.D;
இந்து மேல்நிலைப்பள்ளி ,இந்திரா நகர் ,அடையாறு ,சென்னை 20.
தமிழ்த்துறை.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtcXBrv56n2Wz39dwncgs1wr_f-T9XJJQ%2BKqH2N8Enj2A%40mail.gmail.com.
  • [no subject] Venkatachalam Subramanian
    • Re: Narayanaswamy Sekar

Reply via email to