What is the power of Arrow of Rama .Kamban flots the words like a sway and even Tamil grammar words , used as simile. Sorry it cannot be done in English. KR IRS 29 6 23 'மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்று-இரண்டு எனினும், நேரே குலை உறக் குளித்த வாளி, குதிரையைக் களிற்றை ஆளைத் தலை உறப் பட்டது அல்லால், உடல்களில் தங்கிற்று உண்டோ ? 18 'போய பின், அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால், ஓயும் என்று உரைக்கலாமோ, ஊழி சென்றாலும்? ஊழித் தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்; சொல்லும், வாயையும் தீய்க்கும்; முன்னின், மனத்தையும் தீய்க்கும் மன்னோ.19 'மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால், பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால், ஆருமே அவற்றின் ஆற்றல்; ஆற்று மேல், அனந்தகோடி, மேருவும், விண்ணும், மண்ணும், கடல்களும் வேண்டும் அன்றே? 20 'வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் தெரிகிலர், அமரரேயும்; ஆர் அவன் செய்கை தேர்வார்?" பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக" என்று கருதவே, உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே.21 'நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச் சொல் என, செய்யுள் கொண்ட தொடை என, தொடையை நீக்கி எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ. KR IRS 29 6 23 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopcQzhKnGYnUaVQbDFR2wh40hKxd%3Dc4O1VnNq0qw9eq8Q%40mail.gmail.com.
