ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918)
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு
அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would maintain their own true good will turn away.
அழகு முதலியவற்றால் செருக்குக் கொண்டு தம் புன்மையான நிலையான நலத்தை
விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர்
பொருந்தார்.
Those who would spread (the fame of) their own goodness will not desire the
shoulders of those, who rejoice in their accomplishments and bestow their
despicable favours (on all who pay).
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். - 549)
விளக்கம் ஓவியம்
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய
குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
உத்தர ராமாயணத்தின் படி, ராமரின் பட்டாபிஷேகத்திற்கு (முடிசூட்டு விழா)
பிறகு, அயோத்தியில்
சிலர் இன்னும் சீதையின் தூய்மையை சந்தேகிக்கிறார்கள் மற்றும் அவளுடைய
குழந்தையின் தந்தை யாராக இருக்க முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பதைக் கேட்ட ராமர், சீதையை அங்கிருந்து
போக விடுவது தனது ராஜ்யத்தின் நலன் என்று முடிவு செய்தார், அதனால் அவருடைய
நேர்மை மற்றும் அரசராக தனது கடமையைக் கடைப்பிடிப்பதை யாரும்
சந்தேகிக்கக்கூடாது. ஆனால், சீதையை எதிர்கொண்டு அவள் அரண்மனையை விட்டு வெளியேற
வேண்டும் என்று சொல்ல அவனுக்கு தைரியம் இல்லை. எனவே, தயங்கிய லக்ஷ்மணனிடம்
காடு வரை தன்னுடன் வருமாறும், பின்னர் அவளை அங்கேயே கைவிடுமாறும் கேட்டுக்
கொண்டார்.
மிகுந்த துக்கத்தில் இருந்த சீதை ஒரு காய் மரத்தடியில் அமர்ந்தாள்.
அப்போதுதான் சூர்ப்பனகா வெறுப்பு நிறைந்து, தன்னைப் பார்த்துச் சிரித்துக்
கொண்டிருந்ததைக் கண்டாள். சீதையை நிராகரித்தது போல், சீதையையும் நிராகரித்ததாக
அவள் கூறினாள். இப்போது, சீதையின் அந்தஸ்து பறிக்கப்பட்டது, அவள் (சூர்ப்பனகா)
அழகு பறிக்கப்பட்டதைப் போல.
சூர்பனகையை நிராகரித்தது போலவே, லக்ஷ்மணன் மூலம், சீதையும் லக்ஷ்மணன்
மூலமாக நிராகரிக்கப் பட்டாள். இன்றைய மன நிலையில், அன்றைய சட்ட திட்டங்களை
ஆராய முடியாது. ஆணின் ஒழுக்கம், பிறன்மனை நோக்கம், வரைவின் மகளிர்
பற்றியெல்லாம் எழுதிய 2000 வருடங்களுக்கு முன்றைய வெளிப்பாடு பெண்ணின்
ஒழுக்கம் பற்றி கடுமையாக எழுதவில்லை . ஏனெனில், அத்தகைய பெண்கள்
வரைமகளிருக்கு ஒப்பானவர்களாகத்தான் கருதப்பட்டார்கள். எனவே மாற்றான் தோட்டத்து
மல்லிகை மணக்கலாம்; ஆனால் மண் வேறுதான்; மல்லிகை தன் தோட்டத்தில்தான்
வளரவேண்டும் . இது அன்றைய விதி. வரைவின் மகளிருக்கு ஒப்பான சூர்பனகையும், மாற்றான்
தோட்டத்த்தில் இருந்த மல்லிகையும் தண்டனைக்கு அன்று உரியவர்கள்; இன்றைய பார்வை
தவறானது. மன்னனின் ஒழுக்கம் சிறந்தது. இரண்டுமே, இலக்குவன் தான்
செயல்படுத்தினான். K RAJARAM IRS 19 11 23
---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sun, 19 Nov 2023 at 05:51
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Soorppanaga (45)
To:
கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (45)
*தமிழ்நாயகம்*
மெய் வெயர்க்கும்
இலக்குவனால் மூக்கும், காதும், முலைக் கண்களும் அறுபட்ட சூர்ப்பணகை வலியில் ,
அவமானத்தில் துடிக்கிறாள்.
நேரில் பார்த்தது போல கம்பன் அவள் துயரத்தை பாட்டில் வடிக்கிறான்.
"துணியை எடுத்து இரத்தம் வழியும் தன் மூக்கில் ஒற்றி எடுப்பாள். கொல்லன் உலை
தீ போல பெருமூச்சு விடுவாள். ஐயோ, என்ன செய்வது என்று தெரியவில்லையே என்று
கைகளால் தரையில் ஓங்கி அடிப்பாள். தன்னுடைய அறுபட்ட மார்பகங்களை கையால் ஏந்தி
பார்த்து பதறுவாள். பயத்தில் உடல் எல்லாம் வியர்ப்பாள். என்ன செய்வது என்று
தெரியாமல் அங்கும் இங்கும் ஓடுவாள். பின், இரத்தம் வழிய தரையில் சோர்ந்து
விழுவாள்"
என்கிறான் கம்பன்.
பாவங்களில் பெரிய பாவம் எது என்று பட்டியல் போட்ட பரிமேலழகர், பசுவின் மடியை
அறுப்பது பெரிய பாவம் என்று குறிப்பிடுகிறார். பசுவின் மடியை அறுப்பது பெரும்
பாவம் என்றால்....ஒரு பெண்ணின் மார்பை அறுப்பது?
பாடல்
*ஒற்றும் மூக்கினை; உலை உறு தீ என உயிர்க்கும்;எற்றும் கையினை,
நிலத்தினில்; இணைத் தடங் கொங்கைபற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்; தன்
பரு வலிக் காலால்சுற்றும்; ஓடும்; போய், சோரி நீர் சொரிதரச் சோரும்.*
பொருள்
மூக்கில் வழியும் இரத்தத்தை ஒத்தி எடுப்பாள். இரத்தம் நிற்காதா என்று;
கொல்லன் உலைக் களத்தில் தீ போல மூச்சு விடுவாள்; கைகளை போட்டு
நிலத்தில் அடிப்பாள். ஏன்? மார்பில் அடித்துக் கொள்ள முடியாதே!;
இணையான பெரிய மார்பகங்களை கையில் ஏந்திப் பார்ப்பாள்;
உடல் வியர்ப்பாள்; தன்னுடைய பருத்த வலிய கால்களால் சுற்றிச்
சுற்றி ஓடுவாள்; பின் ஓரிடத்தில் நின்று இரத்தம் அருவி நீர் போல
சொரிந்து விழ சோர்ந்து விழுவாள்.
(வெயர்க்கும் = வியர்க்கும்; சோரி = குருதி)
அவலத்தின் உச்சம்.
இதுவா அவதார நோக்கம் ?
தவறு செய்தவன் இராவணன் என்றே வைத்துக் கொண்டாலும், தண்டனை அவன் தங்கைக்கா?
உலகியல் கண்ணோட்டத்தில், அன்று இருந்த அறம் சார்ந்த சட்ட திட்டங்கள்படி,
இராவணன் இதுவரை தவறு ஒன்றும் செய்யவில்லை. மாற்றான் மனைவியை கவர்ந்து
செல்லவில்லையே இன்னும். அவனே தவறு செய்யாதபோது, அவன் தங்கைக்கு எதற்கு தண்டனை?
சூர்ப்பணகை தவறு செய்யவில்லை...செய்ய நினைத்தாள். அதற்கு இவ்வளவு பெரிய
தண்டனையா ?
இலக்குவன் குடும்பத்தில் யாருமே தவறு செய்யவில்லையா?
அரச நீதியை, மரபை மாற்றி குழி தோண்டி புதைக்கவில்லையா ? அப்படிச் செய்தார்களா
இல்லையா என்று நாம் சந்தேகம் கொள்ள வேண்டாம். இலக்குவனே , தன் வாயாலேயே சொல்லி
இருக்கிறான்.
அவர்களுக்கு இலக்குவன் தந்த தண்டனை என்ன? அவர்களுக்கும் இதே தண்டனை
தந்திருந்தால் , ஏதோ ஒரு ஞாயம் இருக்கிறது என்று சொல்லலாம்.
நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம்...அறுபட்ட முலையை கையில் ஏந்தி, அதில்
இருந்து இரத்தம் வழிவதை பார்க்கும் ஒரு பெண்ணின் அவல நிலையை...
நெஞ்சம் பதறவில்லை?
*தமிழ்நாயகம்*
********************************************
*சித்தானந்தம் *
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopC_%3Ddo-hKLmMeeOsSr52s9CxaRXZnc1zr61D2HXSGkaA%40mail.gmail.com.