Glad you liked it! Actually he was the person who was in the assembly of
Madras. Once he said half  the members are fools; and the speaker wanted
him to apologise; so next day in the opening speech, he simply said ;half
of the assembly members are not fools" So stressed the same thing and
considered it as an apology. KR IRS 7 1 24

On Sun, 7 Jan 2024 at 11:51, Rama <[email protected]> wrote:

> Very interesting read Sh Sridharan Ji.
> Ys I have read about  Srinivasa Shastri . Thanks for sharing.
>
>
> On Sun, 7 Jan 2024 at 11:15, Rajaram Krishnamurthy <[email protected]>
> wrote:
>
>>
>>
>> ---------- Forwarded message ---------
>> From: Srinivasan Sridharan <[email protected]>
>> Date: Sat, 6 Jan 2024 at 23:01
>> Subject: Fwd: SILVER TONGUE
>> To: Rajaram Krishnamurthy <[email protected]>, Devarajan Subramaniam
>> <[email protected]>
>>
>>
>> The silver tonghued orator is really great and the Hall of fame named
>> after him in Mylapore near luz round tana I visity often KR IRS 7124
>>
>> *Date:* January 6, 2024 at 5:47:12 AM PST
>> *From:* sridharan <[email protected]>
>> *Subject:* *SILVER TONGUE*
>>
>> 
>> கடைசி வரை காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்றே சர்ச்சில் கிண்டலடித்தார்.
>>
>> அந்த சர்ச்சிலுக்கு 1890-களில் சென்னையிலிருந்து கடிதம் எழுதி YOU SPEAK BAD
>> ENGLISH என்று குற்றம் சாட்டினார் ஒருவர்.
>>
>> ‘WHO ARE YOU? WHERE ARE YOU? என்று சர்ச்சில் விசாரிக்க, நான்
>> தமிழ்நாட்டில் சென்னை திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர்!’ என்றார்.
>>
>> உடனே அவரை இங்கிலாந்து வரச்சொன்னார் சர்ச்சில். இவர் போனார்.
>>
>> ஒரு மேடையில் இலக்கணப் பிழையுடன் சர்ச்சில் பேசியதை இவர் விளக்கிச் சொல்ல
>> மிரண்டு போய்விட்டார் சர்ச்சில். என் தாய்மொழியை அயல்நாட்டான் கற்றுக் கொண்டு
>> என் பேச்சிலேயே தவறு கண்டுபிடிக்கிறாயா? நீ யார் -உன் பூர்வீகம் எது?’ என்று
>> திரும்பக் கேட்டார்.
>>
>> ‘கும்பகோணம் அருகே வலங்கைமான் கிராமத்தில் கோயிலில் பூஜை செய்யும்
>> சாஸ்திரியின் மகன். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு, சென்னை பச்சையப்பன்
>> கல்லூரியில் பட்டப்படிப்பு, சேலத்தில் முனிசிபல் கல்லூரியில் பேராசிரியராக
>> கொஞ்ச நாள். இப்போது திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டர். என்
>> பெயர் சீனிவாச சாஸ்திரி!’ என்றார்.
>>
>> ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார் சர்ச்சில்.
>>
>> ரென் அண்டு மார்ட்டின் ஆங்கில இலக்கணப் புத்தகம் போல ஜே.சி.நெஸ்பீல்டு
>> ஆங்கில இலக்கண நூல் தயாரித்திருக்கிறோம். ஒரு முறை சரிபார்த்துச் சொல்லுங்கள்
>> என்று கொடுத்தனர். இரவெல்லாம் படித்து 4, 5 அத்தியாயங்கள் தரக்குறைவாக உள்ளன’
>> என்று மாற்றி எழுதிக் கொடுத்தாராம்.
>>
>> ஆங்கில மொழிப் புலமையில் -ஆங்கிலப் பேச்சாற்றலில் இந்த நூற்றாண்டில் உலகில்
>> சிறந்த பேச்சாளர்கள் 5 பேரில் நீங்களும் ஒருவர் என்று மரியாதை செய்து -தாமஸ்
>> ஸ்மார்ட் என்பவர் பிரிட்டீஷ் அரசின் சில்வர்டங் அரேட்டர் -வெள்ளி நாக்குப்
>> பேச்சாளர் என்று பட்டம் கொடுத்து அனுப்பினார்.
>>
>> இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பல பதவிகள் வகித்தவர்.
>> தென்னாப்பிரிக்காவில் பிரிட்டீஷ் அரசின் இந்தியப் பிரதிநிதியாக கொஞ்ச நாள்
>> இருந்தார்.
>>
>> கோபாலகிருஷ்ண கோகலேவின் அரசியல் பார்வையில் ஈர்க்கப்பட்டு அவரது சீடர் என்று
>> சொல்லிக்கொண்டார். மகாத்மா காந்தியை விட 10 நாள் முன்னதாகப் பிறந்தார்.
>> காந்திஜி அக்டோபர் 2-ல் பிறந்தார். இவர் செப்டம்பர் 22-ல் பிறந்தார். அதனால்
>> அண்ணா என்றே சாஸ்திரியை காந்தி அழைப்பார்.
>>
>> ‘பார் -அட் லா’ படித்த உனது ஆங்கிலம் தரமாக இல்லை என்று சாஸ்திரி சொல்ல, தன்
>> வரலாற்று நூலான சத்தியசோதனை- ஆங்கிலப் புத்தகத்தைத் திருத்தித் தரக் கேட்டுக்
>> கொண்டார் காந்தி.
>>
>> அதேபோல அரசியல் செய்திகளைச் சொல்ல ‘ஹரிஜன்’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார்
>> காந்தி. மாதாமாதம் அந்த புரூஃபை சாஸ்திரிக்கு 2- வாரம் முன்னரே அனுப்பி
>> திருத்தி அவர் அனுப்பிய பின்னரே அச்சுக்குக் கொடுத்தார் காந்தி.
>>
>> ஒரு தரம் காந்தியைப் பார்க்க வேண்டும் என்று சாஸ்திரி கேட்க, குஜராத்தில்
>> ஆனந்த் நகரில் நடக்கவிருந்த ஒரு மாநாட்டுக்கு வரச்சொன்னார் காந்தி. சாஸ்திரி
>> போனார்.
>>
>> கட்டுக்கடங்காத கூட்டம். ஐயாயிரமோ, பத்தாயிரமோ அத்தனையும் ஏழை விவசாயிகள்.
>> பாட்டாளிகள். அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த மரியாதையைப் பார்த்து
>> சொல்லாமல் கொள்ளாமல் சென்னை திரும்பி விட்டார் சாஸ்திரி.
>>
>> ‘இனிமேல் ஹரிஜன் புரூஃப் எனக்கு அனுப்ப வேண்டாம். நீங்களே திருத்திக்
>> கொள்ளுங்கள்!’ என்று காந்திக்கு கடிதம் எழுதினார்.
>>
>> ‘அண்ணா! நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?’ என்று காந்தி கேட்டார். இல்லை.
>> என்னிடம் கேவலம் இங்கிலீஷ் மட்டும்தான் உள்ளது. உங்களிடம் ஆன்மா உள்ளது. ஆன்மா
>> சொல்வதுதான் வேதம். நீங்கள் சொல்வது சத்தியம். தொடருங்கள்!’ என்றார்.
>>
>> ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரதமரே மெச்சும் அளவுக்கு சாஸ்திரியின்
>> ஆங்கிலப் புலமை இருந்துள்ளது. கற்றறிந்த பெரியோர் முன்பு தன் ஆற்றலைத்
>> துணிந்து வெளிப்படுத்தும் ஒருவனே கற்றவர்களிலெல்லாம் சிறந்தவன் என்கிறார்
>> வள்ளுவர்:
>>
>> ‘கற்றாருள் கற்றார் எனப்படுபவர் -கற்றார் முன்
>>
>> கற்ற செலச் சொல்லுவார்’
>>
>>
>
> --
> *Ramaswamy*
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop4FtXcyhbMz4gC_z6xOQ1pYFDvVJpKKFuxPP9rhtpGrQ%40mail.gmail.com.

Reply via email to