This is invoking the readers to offer their knowledge about the maintenance of sesha vastram and transferring to others. I have a lot of sesha vastrams of many temples including the leading ones. How to preserve and proceed further? K Rajaram IRS 21 1 24
On Sun, 21 Jan 2024 at 06:25, Chittanandam V R <[email protected]> wrote: > > > *மூன்று நாள் திருச்சி பிரயாணம் – நங்கநல்லூர் J K SIVAN* > > > *திருச்சியில் ஊசி குத்த இடமில்லை. இருக்கும் தெருக்களில் பறக்கின்ற பல > வித துரித வாகனங்கள். தெருவின் இருமருங்கிலும் கடைகள், > பார்க்குமிடமெல்லாம் சிரிக்கும் மந்திரி முகம். அவரைச் சுற்றி பரிவாரமும் > சிரிக்கிறது. மொத்தத்தில் திருச்சி சிரிப்பாய் சிரிக்கிறது என்று சொன்னால் > சரியோ? * > > *இன்னும் மறையாதது பிரயாணத்தின்போது காவேரியை கடக்கும் பாலத்திலிருந்து > தெரியும் மலைக்கோட்டை, அதன்மேல் உச்சி பிள்ளையார் கோவில், திருவானைக்கா பழைய > ஜம்புகேஸ்வரர் ஆலயம். ரயில் பாதை, சில பெயர்கள், பாலக்கரை, மாம்பழ சாலை, > ஆண்டார் வீதி, தெப்பக்குளம், கண்டோன்மெண்ட். அம்மா மண்டபம், தென்னூர் > சாலை, சின்னக்கடை வீதி, தில்லைநகர். * > > *அம்மன் கோவில்கள் அநேகம் வழியில் கண்டு வணங்கினேன். காரை நிறுத்தி ஒவ்வொரு > கோவிலுக்குள்ளும் போக ஆசை. ஆனால் கார் என்னுடையதல்ல, நேரமும் இல்லை. **90 > வயது நண்பருடன் செல்லும்போது அவரது உடல் சௌகர்யத்தையும் கருத்தில் > கொண்டுதான் பிரயாணம் பண்ண வேண்டும் அல்லவா?* > > *அற்புதமான வக்கீல் ராதாகிருஷ்ணன். அறுபது எழுபது வருஷ அனுபவங்களை எல்லாம் > சொல்லிக்கொண்டே வந்தார். எனக்கு பேர் மட்டும் தெரிந்த எத்தனையோ பல > பிரபலங்களுடன் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் கேட்க ஆச்சர்யமாக இருந்தன.* > > *வயலூருக்கு செல்ல போட்ட பிளான் நிறைவேறவில்லை. ஆண்டார்வீதியில் மதுரா > லாட்ஜ் ரொம்ப பழைய பிரபலமான ஒரு சாப்பாடு ஹோட்டல். சுசி ருசி என்ற > வார்த்தையை இன்னும் செயலில் காட்டிவரும் அமைதியான ஹோட்டல். பரம்பரையாக > நடத்தப்பட்டு வருகிறது. ரெண்டு தலைமுறையாக ராதாகிருஷ்ணனுக்கு பரிச்சயமான > ஹோட்டல் என்பதால் அங்கே அழைத்துச்சென்றார். * > > * ஒரே சமயத்தில் 60-75 பேர் சாப்பிடலாம் போல ரெண்டு பெரிய ஹால். > ஒவ்வொருவருக்கும் தனி குட்டி டேபிள். உட்கார ரவுண்டு ஸ்டூல். மேசையை அடைத்த > பெரிய வாழை இலை, ஏடு. சூடான பக்குவமான கமகம என மணக்கும் பச்சரிசி சாதம். > சாம்பார், ரசம், கீரை மசியல், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, கூட்டு கறி, > பச்சடி, பாயசம், தயிர்,மோர், அப்பளம்….. வயிற்றில் இடம் இல்லை சாப்பிட. > கண்ணெதிரே ”உணவை வீணாக்காதீர், எவர் பசியையாவது போக்குமே ” "வேண்டியதை கேட்டு > வாங்கி நிறைய சாப்பிடுங்கள். TAKE ALL THAT YOU CAN EAT. BUT EAT ALL THAT > YOU TAKE, SAVE FOOD, SAVE LIFE” போன்ற வாசகங்கள் மற்ற ஹோட்டல்களில் நான் > பார்க்காத வாசகங்கள்.* > > *ஸ்ரீரங்கத்தில் அதே போல் ‘மடப்பள்ளி’ என்ற ஹோட்டலில் சாப்பாடு அமாவாசை > என்று வாழைக்காய் கறியோடு, வெங்காயம் இல்லாத சமையலாக கிடைத்தது சந்தோஷமாக > இருந்தது.* > > *ஸ்ரீ ரங்கநாதன் ஆலயத்தில் கிடைத்த ‘சேஷ வஸ்திரம்’ எனக்கு ஸ்ரீ > ராதாகிருஷ்ணன் பரிசாகக் கொடுத்தது ரங்கநாதன் அருளால் கிடைத்த என் பாக்யம் > என்று சொல்வேன். சேஷ வஸ்திரம் என்பது சுவாமி மேல் அணிவித்த வஸ்திரங்கள். > எல்லோருக்கும் கிடைக்காது. பிறந்தநாள், முக்கியமான நாட்களில் பகவானை வேண்டி > அவன் அருள் ப்ரசாதமாக அதை அணிந்து கொள்வேன்.* > > *திருச்சியிலிருந்து திரும்பி வரும்போது சமயபுரம் அம்பாள் கோவில் கோபுர > தரிசனம் கிடைத்தது.திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று > விட்டு சென்னை திரும்பினோம்.* > > *- J.K.Sivan, Nanganallur* > > > ********************************************** > > *சித்தானந்தம் * > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoong3dV%3D0PGtXCr1bx-YLSM5zVOB1ALUeb2zyh8Z4F%3Dsw%40mail.gmail.com.
