*நீயே ஆதிதேவன்*

794. வெஞ்சினத்த வேழவெண்ம

ருப்பொசித்து உருத்தமா,

கஞ்சனைக்க டிந்துமண்ண

ளந்துகொண்ட காலனே,

வஞ்சனத்து வந்தபேய்ச்சி

யாவிபாலுள் வாங்கினாய்,

அஞ்சனத்த வண்ணனாய

ஆதிதேவ னல்லையே? 43

*நின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!*

795. பாலினீர்மை செம்பொனீர்மை

பாசியின்ப சும்புறம்,

போலுநீர்மை பொற்புடைத்த

டத்துவண்டு விண்டுலாம்,

நீலநீர்மை யென் றிவைநி

றைந்தகாலம் நான்குமாய்,

மாலினீர்மை வையகம்ம

றைத்ததென்ன நீர்மையே? 44

*புனிதனே!நீ எங்கிருக்கிறாய்**?*

796. மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்

மண்ணுளேம யங்கிநின்று,

எண்ணுமெண்ண கப்படாய்கொல்

என்னமாயை, நின்தமர்

கண்ணுளாய்கொல் சேயைகொல்அ-

னந்தனன்மேல்கி டந்தவெம்

புண்ணியா,பு னந்துழாய

லங்கலம்பு னிதனே! 45

*என் இறப்பொடு பிறப்பறுக்கும் வழி என்ன**?*

797. தோடுபெற்ற தண்டுழாய

லங்கலாடு சென்னியாய்,

கோடுபற்றி ஆழியேந்தி

அஞ்சிறைப்புள் ளூர்தியால்,

நாடுபெற்ற நன்மைநண்ண

மில்லையேனும் நாயினேன்,

வீடுபெற்றி றப்பொடும்பி

றப்பறுக்கு மாசொலே. 46

*உன்னைக் கண்டு வணங்கும் விதத்தைச் சொல்*

798. காரொடொத்த மேனிநங்கள்

கண்ண!விண்ணின் நாதனே,

நீரிடத்த ராவணைக்கி

டத்தியென்பர் அன்றியும்,

ஓரிடத்தை யல்லையெல்லை

யில்லையென்ப ராதலால்,

சேர்விடத்தை நாயினேன்

தெரிந்திறைஞ்சு மாசொலே. 47

*எல்லோரையும் படைத்தளித்தவன்*

799. குன்றில்நின்று வானிருந்து

நீள்கடல்கி டந்து,மண்

ஒன்றுசென்ற தொன்றையுண்ட

தொன்றிடந்து பன்றியாய்,

நன்றுசென்ற நாளவற்றுள்

நல்லுயிர்ப டைத்தவர்க்கு,

அன்றுதேவ மைத்தளித்த

ஆதிதேவ னல்லையே? 48

*நாதனின் ஊர் அரங்கம்*

800. கொண்டைகொண்ட கோதைமீது

தேனுலாவு கூனிகூன்,

உண்டைகொண்ட ரங்கவோட்டி

யுள்மகிழ்ந்த நாதனூர்,

தண்டையுண்டு நாரைபேர

வாளைபாய நீலமே,

அண்டைகொண்டு கெண்டைமேயு

மந்தணீர ரங்கமே. 49

*வில் வீரரின் ஊர் அரங்கம்*

801. வெண்டிரைக்க ருங்கடல்சி

வந்துவேவ முன்னொர்நாள்,

திண்டிறல்சி லைக்கைவாளி

விட்டவீரர் சேருமூர்,

எண்டிசைக்க ணங்களுமி

றைஞ்சியாடு தீர்த்தநீர்,

வண்டிரைத்த சோலைவேலி

மன்னுசீர ரங்கமே. 50

*பிரமன் பணிந்த கோயில் அரங்கம்*

802. சரங்களைத்து ரந்துவில்வ

ளைத்துஇலங்கை மன்னவன்,

சிரங்கள்பத்த றுத்துதிர்த்த

செல்வர்மன்னு பொன்னிடம்,

பரந்துபொன்நி ரந்துநுந்தி

வந்தலைக்கும் வார்புனல்,

அரங்கமென்பர் நான்முகத்

தயன்பணிந்த கோயிலே. 51

*பற்றற்றவர்கள் சூழ்ந்து வாழும் ஊர் அரங்கம்*

803. பொற்றையுற்ற முற்றல்யானை

போரெதிர்ந்து வந்ததை,

பற்றியுற்று மற்றதன்

மருப்பொசித்த பாகனூர்,

சிற்றெயிற்று முற்றல்மூங்கில்

மூன்றுதண்ட ரொன்றினர்,

அற்றபற்றர் சுற்றிவாழு

மந்தணீர ரங்கமே. 52

*வாணனைக் கொன்றவன் ஊர் அரங்கம்*

804. மோடியோடி லச்சையாய

சாபமெய்தி முக்கணான்,

கூடுசேனை மக்களோடு

கொண்டுமண்டி வெஞ்சமத்

தோட,வாண னாயிரம்

கரங்கழித்த வாதிமால்,

பீடுகோயில் கூடுநீர

ரங்கமென்ற பேரதே. 53

*இலங்கையை அழித்தவன் தங்கும் ஊர் அரங்கம்*

805. இலைத்தலைச்ச சந்துரந்தி

லங்கைகட்ட ழித்தவன்,

மலைத்தலைப்பி றந்திழிந்து

வந்துநுந்து சந்தனம்,

குலைத்தலைத்தி றுத்தெறிந்த

குங்குமக்கு ழம்பினோடு,

அலைத்தொழுகு காவிரிய

ரங்கமேய வண்ணலே. 54

*உன் பாதங்களை என் மனத்தில் தங்கவைத்தாயே!*

806. மன்னுமாம லர்க்கிழத்தி

வையமங்கை மைந்தனாய்,

பின்னுமாயர் பின்னைதோள்ம

ணம்புணர்ந்த தன்றியும்,

உன்னபாத மென்னசிந்தை

மன்னவைத்து நல்கினாய்,

பொன்னிசூ ழரங்கமேய

புண்டரீக னல்லையே? 55

794. You, the best of everything,
broke the white tusks of an enraged elephant.
You destroyed Kamsan when he was angry with you.
You are the Māyan who measured the world
and drank the milk of the deceiving devil Putanā and killed her,
you, the ancient god colored as dark as kohl.

795. You are the sweetness in milk,
the brightness of precious gold,
and the freshness of green moss.
You have the dark color of bees
that drink honey and fly around ponds.
You are the four seasons.
Why does the world not understand the grace of Thirumāl?

796. Are you on the earth or are you in the sky,
or are you mixed into the earth?
We do not know who you are—what is this magic?
Are you with other gods in heaven?
Are you near? Are you far?
O virtuous one resting on the snake Adishesha,
who wear a fresh thulasi garland, you are pure.

797. Your hair is adorned with a fresh thulasi garland
with beautiful petals.
You carry a conch and a discus
and you ride on lovely-winged Garuḍa.
I have not received your goodness like the other devotees.
I am like a dog. Give me your grace
so I will reach moksha and not be born again.

798. O Kaṇṇa, you, the king of the sky,
have the color of a dark cloud.
People say that you are omnipresent and boundless.
You who rest on a snake bed on the ocean,
I am like a dog—I want to know where you are.
I beg you, please tell me.

799. You stay on the hill of Thiruvenkaṭam,
and in the sky with the gods,
and you rest on the wide ocean on Adishesha.
You swallowed the earth,
you took the land from Mahābali and measured it,
and you assumed the form of a boar, split open the earth
and brought forth the earth goddess who was hidden.
You, the ancient god, created all lives
and you gave godliness to the gods.

800. The Thirupadi of the god who threw a ball happily
at the hump on the back of Manthara, the servant of Kaikeyi
with hair adorned with flowers swarming with bees,
is Srirangam surrounded by water
where keṇḍai fish swim about, valai fish jump
and cranes swallow crabs.

801. The Thiruppadi of the lord
who in ancient times, taking the form of heroic Rāma,
shot arrows from his bow with his strong hands
and made the dark ocean in Lanka with its white waves grow red
is famous Srirangam
surrounded by groves swarming with bees
where the divine water of the Kaviri flows
in all the eight directions.

802. The Thiruppadi of the lord who bent his bow, shot his arrows
and cut down the ten heads of Ravaṇa the king of Lanka
is Srirangam where the waves of the Kaviri river roll everywhere
bringing gold to the shores
and where Nanmuhan worshipped him.

803. The Thiruppadi of the lord
who fought the elephant Kuvalayabeeḍam
who came to attack him angrily and broke its tusks
is Srirangam surrounded by clear water
where the Vediyars are without desire
and walk holding bamboo sticks that have small pearls.

804. The Thiruppadi of the ancient god Thirumāl
who cut off the thousand arms of Bānasuran
and chased him away from the terrible battlefield
as the three-eyed Shiva and his escorts
who had come to help the Asuran also retreated with their army
is the famous Srirangam surrounded by water.

805. The god who shot sharp arrows and destroyed Lanka,
stays in Srirangam where the Kaviri river
that was born in the summits of mountains
and descends from the hills carries in its rolling waves
fragrant sandal and kungumam paste
as they break and dash on the banks.

806. You are the husband of the everlasting earth goddess
who is as beautiful as a flower,
and you also married the cowherd girl Nappinnai.
You gave me your grace so that I keep your feet in my mind.
You are Puṇḍarigan and you stay in Srirangam
surrounded by the Ponni river.

K Rajaram  IRS    8324

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqCNQ2oCbxnK7%3DJwKHJFCbNNdFKmF_0Sqg3vnJSj-TQQw%40mail.gmail.com.

Reply via email to