உடுத்தலால் நீராடார்  Public bathing required one cover at least

xxx

பொதுவில் குளிப்பவர்களஂ ஒறஂறைதஂ துணியாவது அணிதலஂஅவசியமஂ

 ஒன்றுடுத் துண்ணார்

Eating at home or in public one may need a towel to wipe sweat and cleaning
the spill on the body as eating only on floors and not dining table

தரையில் அமர்ந்து உணஂணும் பொழுது மேலெ சிந்தியதை துடைக்க, வியர்வை துடைகஂக மேலஂ
துணி தேவை.

xxx

உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்

It is simple Nothing our dirt and waste shall enter the public water and
elders may have the problem of age and might have even uncontrollable
habits due to age so elders especially

xxxx

ஆடையிலஂ உளஂள கழிவுகளஂ பொது நீரிலஂ கலகஂகாமலஂ இருகஂக

ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே

முந்தையோர் கண்ட முறை.Covering the body entirely is respect for the assembly
as women will also be there; and the King and learned  shall not be
disrespected entering as if for a dual.

(விழுத்தக்கார் - ஒழுக்கமுடைய பெரியோர்)

பொருள்     உடை உடுக்காமல்  குளிக்க மாட்டார்கள்; ஒரு துணியை உடுத்தி உண்ண
மாட்டார்கள், அதாவது குறைந்தது இரண்டு உடையாவது அணிந்துதான் உண்பார்கள்;
உடுத்த ஆடையை நீரில் பிழிய மாட்டார்கள்; பெருமை உள்ளவர்கள், பெரியவர்கள்  ஒற்றை
ஆடை உடுத்து என்றும்  எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள் என்பதே முன்னோர்கள்
கண்ட முறை. KR IRS 22 3 24



On Thu, 21 Mar 2024 at 20:46, Chittanandam V R <chittananda...@gmail.com>
wrote:

>
> ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களைக் கூறும் நூல்.
> பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 100 வெண்பா பாடல்கள் கொண்டது.இதன்
> ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் என்பவர். 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது
> இந்நூல்.
> ஆசாரக் கோவை - உடை உடுத்தல்
>
> *தமிழ்நாயகம் *
>
> நமது அகமும் புறமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.  அகத்தை சுத்தம் செய்ய வேண்டும்
> என்றால், முதலில் புறத்தை சுத்தம் செய்ய வேண்டும். புறம் அகத்தைப் பாதிக்கும்.
> எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத்தூய்மை பற்றி பேசுகின்றன. இதைப்
> படித்துவிட்டு, இதோடு நின்றுவிடக் கூடாது. அகத் தூய்மை பற்றி சிந்திக்க
> வேண்டும்.
>
> உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு.
> கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது நம்
> பண்பாடு, கலாசாரம்.
>
> Bed coffee அவர்கள் கலாசாரம். எழுந்து பல்கூட விளக்காமல் காப்பி குடிப்பது
>
> கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பாரம்பரியம். நல்ல துணியை கிழித்து,
> அழுக்காக்கி, துவைக்காமல் நாள் கணக்கில், மாதக் கணக்கில் உடுப்பது அவர்கள்
> பாரம்பரியம். ஜீன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. அங்கங்கே கிழிந்து இருக்கும்,
> இதில் துப்பாக்கியால் சுட்டு ஓட்டை விழுந்த ஜீன்ஸ் என்றால் மதிப்பு கூட.
>
> எது சரி, எது தவறு என்பதல்ல நோக்கம். நாம் எதை விட்டுவிட்டு எதை நோக்கிப்
> போய் கொண்டிருக்கிறோம்? நம் பண்பாட்டினை அவர்களுக்கு சொல்லித் தருவதை
> விட்டுவிட்டு, அவர்கள் செய்வதை பெருமையாக நாம் செய்து கொண்டு இருக்கிறோம்.
>
> எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக்கோவை சொல்கிறது.
>
> "ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது
> அணிந்துதான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள்.
> தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய
> மாட்டார்கள், பெரியவர்கள்"
>
> பாடல்
>
> *உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார் *
>
> *உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்*
>
> *ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே*
>
> *முந்தையோர் கண்ட முறை.*
>
> (விழுத்தக்கார் - ஒழுக்கமுடைய பெரியோர்)
>
> பொருள்
>
>   உடை உடுக்காமல்  குளிக்க மாட்டார்கள்; ஒரு துணியை உடுத்தி உண்ண
> மாட்டார்கள், அதாவது குறைந்தது இரண்டு உடையாவது அணிந்துதான் உண்பார்கள்;
>  உடுத்த ஆடையை நீரில் பிழிய மாட்டார்கள்; பெருமை உள்ளவர்கள், பெரியவர்கள்
> ஒற்றை ஆடை உடுத்து என்றும்  எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள்
> என்பதே முன்னோர்கள் கண்ட முறை.
>
> சில ஆசாரங்களுக்குக் காரணம் தெரியவில்லை. அதற்காக அதை விட்டுவிடுவதா அல்லது
> அவற்றைப் பின்பற்றிக் கொண்டே அதற்கான காரணத்தை தேடுவதா?
>
> யோசிப்போம்.
>
> *தமிழ்நாயகம் *
>
> ************************************
>
> *சித்தானந்தம் *
>
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoowAXgCdh6y4yVAd7WqGrTqgRnd0VWaa%3DGiBvrF_gDGLA%40mail.gmail.com.

Reply via email to