As tamil Grantham can be made a korvai and sanskrit also which needs pada bedham. Hamsa sandesam, Mega sandesam by Kalidasan are so finer with enjoyable simile and phrases of interpretations. The last verse I remember is
एतत् कृत्वा प्रियमनुचित प्रार्थनावर्तिनो मे सौहार्दाद् वा विधुर इति वा मय्यनुक्रोश-बुद्ध्या। इष्टान् देशान् विचर जलद! प्रावृषा सम्भृतश्रीः मा भूदेवं क्षणमपि च ते विद्युता विप्रयोगः॥ Etat krthva priyam anichitha prarthana varthino me Souhardhadha va vidura iti va mayyanukrosha brudathyaya: Ishtaan desan vichara jaladha: pravrusa sambrutha sree Ma brudevam shanamapi cha te vidyuthaa viprayoga: O Jalada (Cloud), having fulfilled my unreasonable prayer as a friendly request or out of empathy for one in distress, do wander where you will across the realms of your choice, with (your) glory filled to brim by the new rain. May you never suffer even a moment’s separation from your beloved lightning! Later let me bring it out K R IRS 14 4 24 On Sun, 14 Apr 2024 at 19:26, Chittanandam V R <[email protected]> wrote: > > > > > *திருப்பதிக்குச் செல்லும் மேகங்கள் (திருவிருத்தம்)* > > *சுஜாதா * > > ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக்கொள்ள வேண்டும். அது சில > சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் > பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே. > அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31-ம் > பாசுரத்தைப் > பாருங்கள். > > இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே > லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக > டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய > மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்ட மேகங்களே. > > தலைகால் புரியவில்லையா? இதில் ஒளிந்துகொண்டிருக்கும் பாடல் என்ன > பார்க்கலாம். முதலில் பதம் பிரித்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும். > > இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் > அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்? அம்பொன் மாமணிகள் > திசைமின் மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமயம் > மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே. > > (வன்தாள் சிமயம் - வலிமையான அடிவாரமுள்ள சிகரம்) > > இப்படிப் பிரித்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாகிறது. இந்தப் பாடலில், தலைவி > திருவேங்கடமலைக்குச் செல்லும் மேகங்களைத் தூது போகச் சொல்கிறாள். அவை, > "போ, போ. அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை" என்று மறுத்துவிட, "என் தலையையாவது > மிதித்துவிட்டுச் செல்லுங்கள்" என்கிறாள். > > இப்படி ஓர் அழகான ரத்தினத்தைப் பதம் பிரித்துத் தோண்டியெடுக்க வேண்டும். > > தமிழை ஒரு agglutinative language என்பார்கள். வார்த்தைகளை ஒட்டவைத்துக்கொண் > டே > போகலாம். 'இசைமின்கடூது' என்பதை இசைமின்கள் தூது என்றும், 'மணிக > டிசைமின்மிளிரு' - மணிகள் திசை மின் மிளிரும் என்றும் வெளியே கொண்டுவந்தால் > > கிடைப்பது ஓர் அற்புதமான அகத்துறைப்பாடல். எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் > பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன > என்று தலைவி நினைத்து, வேங்கடமலைச் சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் > மேகங்களிடம், "என்னைப் பற்றிப் பெருமாளிடம் சொல்லுங்கள்" என்று கேட்டதில், > தூது சொல்ல அவை இசைய(சம்மதிக்க)வில்லை. அதனால், "என் தலைமேல் உங்கள் > பாதத்தை வைத்துவிட்டாவது செல்லுங்கள்" என்று கேட்கிறாள். > > இந்த நாட்களில் திருப்பதிக்குச் செல்லும் மேகங்களை லட்டு வாங்கிவர மட்டுமே > சொல்வோம்! > > - சுஜாதா > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopNJqzkLVkQmYAj9GZ2j%3DmU2Mxs08NFE2oyE8U%3DDfak1A%40mail.gmail.com.
