Every management and the mismanagement can be encashed by a writer and
Sujatha is an example. Even in many FB and media such labels were strewn
all around, when this article came; but did they get any money? Because,
there is no special status assigned like Sujatha. I searched many writers
right from my 8th year of started reading magazines, and there were
dialogues in between the story, embedding any current topic of that time;
but never ever one aspect projected fo a page as in KANAIYAZHI LAST PAGE
(sujatha tried to write that last page also) getting him the money. If the
same thing were to be written by me for example, would have been felt as if
I am mocking at gullibles or the offended would make me aback copy only
avoiding ruptures etc etc. At that time of Sujatha, as MGR 2 finger swiping
the nose or throwing the cigarette up of Rajni became attractive to less
read, so too drawing steps, plane take oof within the letters became
attractive; and Savi and Kumudam were down against Vikatan kalki etc; so
these kinds of apertures became marketing strategy. This getting cheated
also became an article. WHY HE WAS CHEATED? BECAUSE HE WANTED TO ACT SMART
OUT OF GREED AND ABSENCE OF THINKING TO GET ALL FOR AA SMALL; THERE IS AN
ADAGE: KAI NIRAYA....... So getting cheated is non application of mind. I
have also been an online buyer for >2 decades. Till date never was cheated.
Products might have been less qualified than I thought , but products were
usable, applied and worked long and all went to Charity at one point of
time. K Rajaram  IRS 19524

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <chittananda...@gmail.com>
Date: Sun, 19 May 2024 at 09:28
Subject: Fwd: Online Purchase
To:



*எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சில
சந்தர்ப்பங்கள் வரும். அப்போது நெற்றியில் 'என்னை ஏமாற்று' என்று ஒரு லேபிளை
ஒட்டிக்கொண்டு ஏமாற தயாராக இருப்போம். அந்த நேரத்தில் ஏமாந்த பிறகு யோசித்துப்
பார்த்தால் எப்படி இவ்வளவு சில்லியாக ஏமாந்தோம் எனத் தோன்றும் என்று எழுதி
இருப்பார். சென்ற வாரம் அப்படி ஒரு லேபிளை என் நெற்றியில் ஒட்டிக்கொண்டு
அலைந்தேன் போலும்.*

*Instagram ல் மேய்ந்து கொண்டு இருந்தபோது 'myshopifyme.com
<http://myshopifyme.com>' என்கிற வலைதளத்தின் கண்ணைக் கவரும் விளம்பரம்
ஒன்றில் மனம் சென்றது! 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' தான் என் பாலிசி.
ஆகையால் அந்த வெப்லிங்கை கன காரியமாக வீடு கட்டிக்கொண்டு இருக்கும் என்
தங்கைக்கும், என்னைப் போலவே ரசனை உள்ள என் மகளுக்கும் ஷேர் செய்தேன். *

*அதில் வந்து இருந்த item எல்லாம் home decoration தொடர்பான அழகிய சிறிய
சிலைகள் விளக்குகள் etc.. எல்லாமே ₹99/- for a particular period of time
(sale ends in 1.42hrs வகையறா!) கடகடவென ஐந்து பொருட்களை மகள் செலக்ட் செய்ய
ஒவ்வொன்றாக நான் 'add to cart' சேர்க்க, நான்கு item சேர்ந்த உடன் இந்த
மதிப்பிற்கு வாங்கியதால் எங்களின் கிப்ட் என்று மூன்று பொருட்களை காட்டி ஒன்றை
select செய்யச்சொன்னது வலைத்தளம், படு குஷியாய் இரண்டு மான்கள் சேர்ந்த
மாதிரியான சிலை ஒன்றை தேர்ந்தெடுத்து அதன்பிறகும் நாங்கள் ஏற்கனவே
தேர்ந்தெடுத்து வைத்திருந்த இன்னொரு பொருளையும் சேர்த்து **சந்தோஷமாய் ஆர்டர்
செய்தேன். *

*99/- ரூபாய் பொருளுக்கு 87.50+GST என்று‌ முறையாக பில் காண்பித்தது. Credit
card, Debit card , UPI transfer என்று சகல வசதிகளும் இருந்தது. ஆனால் COD
எனப்படும் cash on delivery option மட்டும் இல்லை. நிறைய சிறிய
வெப்சைட்டுகளில் அது இருக்காது என்று எண்ணி Gpay யில் பணம் செலுத்தினேன். உடனே
முறையாக என் G-mail லுக்கு ஒரு மெயிலும் வந்தது உங்களது ஆர்டர் successfully
placed - you will receive notification when the consignment is ready for
shipping என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எத்தனை நாள் ஆகும்
approximate date எதுவும் இல்லை, அதனை விசாரித்து 'help desk ' என்றிருந்த
மெயிலிங் ஐடி க்கு மெயில் அனுப்பினேன். *

*மறுநாள் காலை அந்த மெயிலை மீண்டும் திறந்து பார்த்தால் click here to see the
items you purchased என்ற லிங்க் ஒழுங்காக வேலை செய்தது, அதற்கு அருகில்
இருந்த visit store என்ற லிங்கை க்ளிக் செய்தால் அப்படி ஒரு வெப்சைட்டே இல்லை
என்று வந்தது! அந்த ஞானம் வந்த பிறகு  Google search ல் போய் 'myshopifyme'
என்று அடிப்பதற்குள் நூற்றுக்கணக்கான பேர் இதை தேடிய தடயம் தெரிந்தது! *

*Quora வலைதளத்தில் ஒருவர் தான் ஏமாந்த கதையை எழுத அவருக்குப் பின் 276
கதைகளைக் கண்டேன். *
*இந்த போலி ஏமாற்றுக்காரர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பது புரிந்தது. 276
பேரும் 500-1000 வரைதான் ஏமாந்து இருந்தார்கள், so, யாருக்கும் இதற்காக‌ சைபர்
க்ரைம் போலீசாரிடம் செல்லவோ ஒரு கம்ப்ளைண்ட் பண்ணவோ ஒரு தயக்கம், நேரமின்மை,
போலீஸ் ஸ்டேஷன் செல்ல ஒரு தயக்கம், இதெல்லாம் ஒரு தொகையா என்று கேட்டு
விடுவார்களோ என்ற எண்ணம். *

*ஆனால் பேமெண்ட் bank வழியாகத்தான் நடக்கிறது என்கிறபோது complaint வந்தால்
போலீஸ் முயன்றால் அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய முடியும் என்றே
தோன்றுகிறது. *

*அடிப்படையில் இந்த இழப்பில் நான் கற்றுக்கொண்ட பாடம், 1.தரமான/அழகான ஒரு
பொருளுக்கு நம்பமுடியாத offer என்று‌ வந்தால் அதனை நம்பக்கூடாது.*

*2. COD option இல்லை என்றால் அந்த வலைதளத்தைப் பற்றி Google search செய்து
நல்லபடியான reviews வந்திருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.*

*3. Facebook, Instagram போன்ற social media platforms நாம் என்ன செய்கிறோம்
என்பதை கவனிப்பதில் காட்டும் ஆர்வத்தை இதுபோன்று அவர்களது  platformல்
விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் authenticity யை check செய்வதில்லை. அரசு
தலையிட்டு செய்யச் சொல்லலாம்.*

*இது 'சிறு துளி பெரு வெள்ளம்' type fraud. நம்‌ நாட்டு மக்கள் தொகைக்கு
தினசரி எத்தனை பேர் 500-1000 இவர்களிடம் பறி கொடுப்பார்கள், அதன் மொத்த
மதிப்பு என்ன என்று நினைத்தால் தலை சுற்றுகிறது. Quora வலைதளத்தில் பார்த்த
வரையில் 2019 முதல் ஏமாந்த கதைகள் இருக்கின்றன. அப்போது வெவ்வேறு பொருட்களை
கடை விரித்து குறைந்தபட்சம் கடந்த நான்கு வருடங்களாக கல்லா கட்டி வருகிறார்கள்
என்று தெரிகிறது.*

*இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு மாதிரிதான். இதைப்போன்று எத்தனை பேர்
இருக்கிறார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.*

*நன்கு தெரிந்த Amazon, Flipkart போன்ற வலைத்தளங்களில் வாங்குவது
பாதுகாப்பானது, நம் பணத்திற்கு நாம்தான் பாதுகாப்பு. *

*ஏமாந்தது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் 'யாம் பெற்ற ஞானம் பெறுக இவ்வையகம்'
என்று நினைத்து இந்த நீண்ட பதிவை பதிவிட்டிருக்கிறேன். படித்து பயன்
பெறுங்கள்.*

*Sarathy- Pondicherry*


*நன்றி: Parthasarathy*


*********************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorNBz-rJqb%2BbZgeNMVx9dcHxRpfCWUu2x3MEsX%2Bx5BJ%2Bg%40mail.gmail.com.

Reply via email to