ஆதிசங்கரா் தீட்க்ஷை*
 *பெற்ற ஓம்காரேஸ்வரா்* *குகை*

ஸ்ரீ ஆதிசங்கரா் தீட்க்ஷை பெற்ற ஓம்காரேஸ்வரா்  குகை எங்குள்ளது
என்று உலகில் எவருக்குமே தொியாமல் இருந்துள்ளது. அதை வெளி உலகிற்கு கொண்டு
வந்ததின் பெருமை 1970  ஆண்டுகளில்  மத்திய பிரதேசத்தில் மின்  பொறியாள
அதிகாரியாக பணியாற்றி வந்திருந்த  திரு நாகராஜா சர்மா என்பவரையே போய் சேரும்.
அதை கண்டுபிடிக்க அவா் எடுத்த பகீரதப் பிராயா்த்தனங்களும்.,  முயற்சிகளின்
பின்னணியும் அதில் அவருக்கு ஏற்பட்ட பிரமிக்கத்தக்க அனுபவங்களும்
ஆச்சர்யமானவை. அந்த குகை இருந்த இடத்தைக் கண்டு பிடித்த அவரை தூண்டியதே ஒரு
விசித்திரமான நிகழ்வாகும். அதைக் குறித்து அவா் இப்படியாக கூறி உள்ளார்.

ஒருமுறை அவா் நர்மதை ஆற்றின்  கரையில்  நின்று   கொண்டு இருந்தபோது.,
“ஏண்டாப்பா இந்த  பக்கத்தில் உள்ள பல கோவில்களை பற்றியும் ஆராய்ச்சி செய்து
தமிழ் பத்திரிகைகளில் பிரசுரித்து வருகிறாயாமே., ஆதி சங்கரா் சன்யாசம்
பெற்றுக் கொண்டு சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்ட குகை இங்கேதான் இருக்கிறது.
உனக்கு ஏதாவது தொியுமா..?”  என்று அந்த நதியில் நீராட வந்திருந்த ஒரு தமிழ்
பாட்டி அவாிடம் இந்த கேள்வியைக் கேட்ட பின்., அதற்கு பதில்  கூற இயலாமல் அவா்
நின்றிருக்க  “சாி தேடிப் பார் கிடைக்கலாம்” என்று தொடா்ந்து  கூறி விட்டு
அந்த பாட்டி  அங்கிருந்த கூட்டத்தில் நுழைந்து மறைந்து விட்டாராம். அவா் யார்
என்று இன்றுவரை அவருக்கு விளங்கவில்லை என்றாலும்., அந்த பாட்டி அப்படியாகக்
கூறிவிட்டு மறைந்து விட்ட பின் பலகாலம் மத்திய பிரதேசத்தில் பல இடங்களிலும்
பணிபுாிந்து வந்திருந்த திரு நாகராஜா சர்மா அவா்கள் சிந்தனையில் ஆழ்ந்தாா்.
தானே அந்த இடத்தை தேடிக் கண்டு பிடித்தால் என்ன என்ற வைராக்கியம் அவா் மனதில்
ஏற்பட அந்த குகையை தேடும் பணியை 1971 ஆம் ஆண்டு துவக்கினாராம்.  துவக்கம்
முதலிலேயே அவருடைய முயற்சிக்கு அனந்தஸ்ரீ விபூஷீத் ஜகதகுரு சங்கராச்சாரியார்
ஜோதிஷ் பீடாதீஸ்வா் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி அவா்களே ஊக்கம் அளித்து
வந்ததும் இல்லாமல் சில அறிவுரைகளையும் கூறினாராம். அவா்கூறிய அறிவுரையின்படி
திரு. நாகராஜா சர்மா அவா்கள்  தேடுதல் வேட்டையை துவக்கினார். அந்த அனுபவம்
குறித்து அவா் இப்படியாக எழுதி உள்ளார். முதலில் ஸாங்கல்காட்  என்ற
குக்கிராமத்தை அடைந்தேன். கோட்டேகாவுங் எனும் ரயில் நிலையத்தில் இருந்து 35
கிலோமீட்டா் தொலைவில் உள்ள அந்த கிராமத்துக்கு நடந்தே செல்ல வேண்டி இருந்தது.
நர்மதையோடு ஹிரன் என்ற ஆறு கலக்கும் இடமான ஸாங்கல்காட்டின் முற்பெயரான
சங்கா்காட் என்று கூறுவாா்களாம். ‘நர்மதை ரகசியம்’ என்ற இந்தி புத்தகத்தில்
ஸ்ரீ ஆதிசங்கரா் இங்கு தங்கி உள்ளார் என்று படித்த உடனேயே எனது உற்சாகம் கரை
புரண்டு ஓடிற்று. அந்த கிராமத்தை  அடைந்தபோது நடுநிசியாகிவிட்டது. மறுநாள்
காலை அசதியாக இருந்தபோதிலும்,, உள்ளூர்வாசிகள் உதவியோடு அங்குள்ள ஒரு குகையைக்
காணப் புறப்பட்டேன். குகைகள் எதிர்கரையில் இருந்ததினால் நர்மதை நதியை கடந்து
செல்ல வேண்டி இருந்தது. இரு நபா்கள் மட்டுமே அமர்ந்து கொண்டு செல்ல முடிந்த
டோங்கா எனப்படும் குறுகிய சிறு படகில் ஏறி ஆற்றைக் கடக்கலானேன். டோங்காவில்
இரு நபா்களே உட்கார முடியும். அதற்கு அனுபவம் வேண்டும். சைக்கில் பாலன்ஸைப்
போல இந்த டோங்கா சவாரியிலும் பாலன்ஸ் ரொம்ப முக்கியம்.  நர்மதை நதியில் எனது
பாலன்ஸ் திவாலாகிவிடவே, நானும் படகோட்டியும் டோங்காவோடு கவிழ்ந்து ஆற்றில்
மூழ்கினோம். காவேரியில் நீச்சல் பழக்கம் அப்போது கை கொடுக்கவே உயிர்
தப்பினேன். மேற்கொண்டு பயணம் சொட்ட சொட்ட ஈர உடையோடுதான். அதுவும் குளிர்
காலத்தில்..! நர்மதை நதியின் ஓட்ட  திசையில் அதன் கரை வழியே சுமாா் நான்கு
கிலோமீட்டா் தொலைவிற்கு ஈரத்துடனேயே நடந்து சென்று  நதியின் கரையில் இருந்து
சுமாா் அரைகிலோ மீட்டா் தொலைவில்  இருந்த ஒரு குகையை அடைந்தேன். புலி முதலிய
துஷ்ட மிருகங்கள் அந்த குகையில் தங்கி கால்நடைகளை திடீர்  என்று தாக்கி
வந்ததினால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த குகையின் வாயில் மூடி வைக்கப்பட்டு
இருந்துள்ளது. அதன் வாயில் பகுதியில் கோவில் மணி கட்டியது போல ஒரு பாறை
இருக்க., அதை தட்டினால் சங்க நாதம் போன்ற ஒலி எழும்பியது மட்டும் இன்றி அந்தப்
பிராந்தியம்   முழுவதும் காலை அழுத்தி வைத்து நடந்தால் வெண்கல நாதம் போன்ற ஓசை
எழும்பியது. அந்த குகைக்குள் வெளிச்சம் செல்ல இரு  துளைகள் இருந்ததாகவும்.,
இரண்டு நாட்கள் அங்கு தங்கி மேலும் சில  செய்திகளையும்  சேகாித்துக் கொண்டு
மீண்டும் ஸ்வாமி ஸ்வரூபானந்தா் அவா்களை சந்தித்து அனைத்து விவரங்களை தந்தேன்.
அது மட்டும் அல்லாமல் ஆதிசங்கரா் தனது குருவை ‘சங்கரகங்கா’ எனும் இடத்தில்தான்
சந்தித்தாா் என்றும்., அந்த இடம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகளுக்கு மட்டுமே தொியும் என்பதாகவும் *‘சங்கரரும் ஷண்மதமும்’* எனும்
ஒரு ஆங்கில நூலில் காணப்பட்ட செய்தியையும் அவாிடம் கூறினேன். அதைக் கேட்ட
ஸ்வாமி ஸ்வரூபானந்தா் அவா்கள் ஒருமுறை காஞ்சி மடத்திற்கு சென்று
பரமாச்சார்யாரை தாிசித்துவிட்டு வருமாறு எனக்கு  அறிவுரை தந்தாா். காஞ்சி மஹா
பொியவரை சந்திக்க முடிவு செய்த திரு நாகராஜா சர்மா காஞ்சிக்கு அருகில்
தேனம்பாக்கத்தில் முகாமிட்டு இருந்த பொியவரை 15.07.1974 அன்று தாிசிக்க
கிளம்பிச் சென்றாா். அந்த காலத்தில் பொியவா் காஷ்ட மௌன விரதத்தில்
இருந்துள்ளார் என்பதினால்  யாரிடமும்  பேசுவதில்லை., ஆகவே அங்கு அந்த
நேரத்தில் செல்வது வீண் முயற்சி என பலா் தடுத்தும் கேட்காமல் முடிவாக காஞ்சி
பொியவரை சந்திக்க கிளம்பிச் சென்றவருக்கு அங்கு கிடைத்த அற்புத அனுபவத்தை
எப்படி விவாிப்பது என்றே தொியவில்லை. அதைக் குறித்து திரு நாகராஜா சர்மா
அவா்கள் எழுதி உள்ளதை படித்தால்தான் அவருடைய உண்மையான உணர்வை புாிந்து கொள்ள
முடியும். திரு நாகராஜா சர்மா எழுதி உள்ளார். அதிகாலையில் தேனம்பாக்கத்தை
அடைந்தேன். அங்கே யாரோ உரக்க பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழவே அருகில்
இருந்த நபாிடம் பொியவா்கள் சன்னதியில் ஏன் இப்படி சப்தம் போட்டு
பேசுகின்றாா்கள் என வினவினேன். உடனே அவா் என் வாயை பொத்தி ‘அபச்சாரம்.,
நீங்கள் இப்படி கேட்பதே அபச்சாரம். பலநாட்கள் கழித்து இன்றுதான் பொியவா
மௌனத்தை கலைத்திருக்கிறாா். அவா்கள் தான் இப்போது பேசிக் கொண்டு இருக்கிறாா்.
அந்த தெய்வத்தின் திருக் குரலைக்  கேட்க நீங்கள் பாக்கியம் செய்து
இருக்கிறீர்களே’ என்று சொல்ல நான் அசந்து விட்டேன். அடடா…பொியவாளின்  கருணையே
கருணை. எனக்காக அத்தெய்வம் மௌனத்தை கலைத்திருக்கிறதா.? இறையருளை., குருவருளும்
கண்டு வியந்தேன். நான் அங்கு வந்திருந்ததை ஒரு சிஷ்யா் மூலம் அறிந்த
அச்சிரேஷ்டா் என்னை பிற்பாடு கூப்பிடுவதாகவும்., அதுவரை நான் எடுத்துக் கொண்டு
போன புத்தகங்கள் குறிப்புக்கள்., வரை படங்கள் என அனைத்தையும் மீண்டும் ஒருமுறை
பாா்த்து வைத்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தாா்கள். எனக்கோ தூக்கிவாரிப்
போட்டது.  எதற்காக இங்கு வந்துள்ளேன் என்பதை இதுகாறும் அவருக்கு
தொிவிக்கவில்லை. இப்படி இருக்க குகை விஷயமாக புத்தகங்களோடு வந்திருப்பதை
எப்படி இம்மகான் அறிந்துள்ளார் என ஆச்சர்யத்தில் திக்கு முக்காடிப் போனேன்.
பரீட்ஷை  கூடத்தில் புகுமுன் ஒரு பரபரப்புடன் புத்தகங்களை புரட்டி மனப்பாடம்
புாியும் மாணவனைப் போல இதுகாறும் திரட்டியவற்றை நான் அவசர அவசரமாக அசை
போடலானேன்.  நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த சுப நேரம் வந்தது. என்னை
உள்ளே அனுமதித்து நேருக்கு நேர் உட்காா்ந்து அவருடன் பேச வசதி செய்து
கொடுத்தாா். பேச்சு துவங்கியது. “நீ இதை பற்றி எவ்வளவு தூரம் தொிந்து கொண்டு
இருக்கிறாய், அதை முதலில் சொல்லு.!’’ அப்படி  ஒரு கேள்வியை திரு நாகராஜா சர்மா
மஹா பொியவாவிடம் இருந்து  எதிர்பாா்க்கவில்லை. குகை குறித்த விவரத்தை கூற
ஆரம்பித்தால் நிறைய நேரமாகும்., மற்றவா்களுக்கு இடைஞ்சலாகி விடுமே., என்ன
பதில் சொல்வது என தொியாமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து இருந்தபோது
மீண்டும் பொியவா்  மற்றவா்களும் கேட்கும் வகையில் அதை தைரியமாக கூறு என்று
ஆணை இடவே அலை பாய்ந்து கொண்டிருந்த தனது மனதை கட்டுப்படுத்திக்  கொண்டு
அனைத்து விவரங்களையும்  பொியவாிடம் கூறியவுடன், சற்று நேரம் கண்களை மூடி
தியானம் செய்த பின் மீண்டும் மஹா பெரியவா கூறினாராம் “நீ பாா்த்த ஸாங்கட்காட்
குகை நதியில் இருந்து தூரத்தில் இருக்கிறது என்கிறாய். ஆகவே அந்த குகை இதுவாக
இருக்காது. நதியின் வெகு அருகிலேயே குகை இருக்க வேண்டும். மேலும் நதியின் நீரை
குகைக்கு கொண்டு வர ஒரு வசதியும் அக்குகையில் இருக்க வேண்டும். ஸ்வாமி
ஸ்வரூபானந்தா் அந்த பக்கத்துக்காரா்தானே… நான் சொன்னதை வைத்துக் கொண்டு
மீண்டும் அவரைப் பாா்” திருப்பி உதைக்கப்பட்ட பந்து போல மீண்டும் ஸ்வாமி
ஸ்வரூபானந்தாிடம் சென்று அவாிடம் விவரங்களைக் கூறிய பின் அவருடைய ஆசிகளை
பெற்றுக் கொண்டவுடன்  மீண்டும் குகையை தேடி திரு சர்மாவின் ஆராய்ச்சி பயணம்
தொடா்ந்தது. குகையின் வாயிலில் ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருடைய பாதுகை இருந்தது
என்பதை அடையாளமாகக் கொண்டு குகையில் புகுந்து அவரை ஸ்ரீ ஆதி சங்கரா்
தாிசித்தாா் என்பதாக ‘சங்கர விஜயம்’ என்ற நூலில் படித்திருந்த செய்தியை மனதில்
கொண்டு  பல மலைகள்., குகைகள் என பாா்த்து பாா்த்து சலிப்படைந்தாா். எந்த
அடையாளமும் இல்லாத பல குகைகளில் புகுந்தபோது அங்கிருந்த புலிகள்., மலை
பாம்புகள்., விஷ ஜந்துக்கள் என்பவற்றின் ஆபத்தில் இருந்தெல்லாம் தெய்வத்தின்
கருணையினால் தப்பித்து வந்துள்ளார். அந்த ஒரு கட்டத்தில் 1916 ஆம் ஆண்டில்
தண்டலம் ஸ்ரீ சங்கர நாராயண சாஸ்திரிகள் என்பவரால் எழுதப்பட்டு இருந்த ‘சங்கரா்
காலம்’ எனும் நூலை தற்செயலாக திரு நாகராஜா சர்மா படிக்க நேரிட்டது. அதில் ஆதி
சங்கரரின் குருவான ஸ்ரீ கோவிந்த பகவத் பாதரும் அவருடைய குருவான ஸ்ரீ
கௌடபாதரும் எந்த குகையில் அமர்ந்து கொண்டு தவமியற்றினார்களோ அந்த குகையிலேதான்
ஆதி சங்கரரும் தங்கி வேத பாடங்களைக் கற்றறிந்தாா் என்றும் அந்த தலத்தில்தான்
ஸ்ரீ கோவிந்த பாகவத பாதரும் சித்தி அடைந்தாா் என்றும்., அந்த குகை
தற்போதிருந்த இடத்தைக் குறித்தும் தகவல் இருந்தது. அந்த தகவலின் அடிப்படையில்
மீண்டும் தமது தேடுதல் படலத்தை தொடா்ந்தாா் திரு நாகராஜா சர்மா. 1978 ஆம்
ஆண்டு சிவராத்திரி அன்று அந்த தலத்தை  காணும் பேறு பெற்றாராம். திரு நாகராஜா
சர்மாவின் கூற்றின்படி ‘ஆதி சங்கரருக்கு இந்த தலத்தில்தான் சன்னியாசம்
அளிக்கப்பட்டது.’ அந்த தலத்தில்தான் ஆதிசங்கரரின் பரம குருவான ஸ்ரீ கௌடபாதா்
வியாகரண பாஷ்யத்தை பிரும்ம ராக்ஷஷன்  ரூபத்தில் இருந்து கொண்டு ஸ்ரீ கோவிந்த
பாகவத பாதருக்கு  இரவு பகலாக போதனை செய்தாராம். குருவின் பாதுகைகளை குகையின்
வாசலில் பாா்த்த்தவுடன் ஆதி சங்கரரின் நாவில் இருந்து *‘குரு பாதுகா பஞ்சகம்’*
உதயமாயிற்றாம். குகையில் நிஷ்டையில் இருந்த குரு ஸ்ரீ கோவிந்த பாகவத பாதரை
குகையில் புகுந்த நதியின் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற  நதியின் நீரை தமது
கமண்டலத்தில் மொண்டு நர்மதையின் உக்ரத்தை  தணித்தாராம்.’ இவ்வளவு மகிமை
வாய்ந்த குகையை தேடி தீவீரமாக அலையத்  துவங்கியவா் அங்கு பல குகைகளைக்
கண்டார். முடிவாக காஞ்சி முனிவா் தனது ஞான திஷ்டியினால் அந்த குகையின்
அமைப்பைக் கூறி இருந்ததை போல  குகையின் உள்ளே நதிநீா் எடுத்து வர ஒரு சுரங்கம்
உள்ளதையும்  கண்டவா் வியந்து நின்றார். அதைத் தவிர அதன் உள்  பகுதியில்
ஒம்காரேஸ்வரா் ஆலயத்துக்கு சென்று வர மேலும் மூன்று சுரங்கங்கள் இருந்ததையும்
கண்டார். ஆனால் அவை அடைக்கப்பட்டு இருந்தன. அந்த நதியின்  அருகிலேயே ஒரு சிறு
மண்டபம் இருந்ததை கண்டார். அது ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருடைய சமாதி என உள்ளூர்
மக்கள் கூறினாலும் பின்னா் அதுவே ஆதி சங்கரா் தீட்ஷை பெற்ற  இடம் என்பது
தெளிவாயிற்று. அந்த குகையின் அமைப்பையும் கலைநயத்தையும் விவாித்த திரு சர்மா
அவா்கள்., அந்த குகையை அழகிய கலை மண்டபமாக ஆக்கிய பெருமை ஸ்ரீ கோவிந்த பாகவத
பாதருக்கு பூர்வாஸ்ரமத்தில் பிறந்த புத்திரரும்., உஜ்ஜயினியை ஆண்ட மன்னனுமான
ஸ்ரீ ஹா்ஷ விக்ரமாதித்தியன் என்பதாக ‘பிரஹத் சங்கர விஜயம்’ எனும் நூலில்
கூறப்பட்டு உள்ள விவரத்தையும் தமது  கட்டுரையில் குறிப்பிட்டு  உள்ளார்.
இப்படியாக பல இன்னல்களை தாங்கி கொண்டு ஆதி சங்கரா் சன்னியாசம் பெற்ற குகையை
கண்டு பிடித்து விட்ட  திரு. நாகராஜா சர்மாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட
 துவாரகா  பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வாமி அபிநவசச்சிதானந்தரும்., ஜ்யோதிஷ்
மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தரும்., 1979 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் 7.,
8 தேதிகளில் திரு சர்மா அவா்களுடன் ஒம்காரேஸ்வரா்   தலத்தில் இருந்த அந்த
குகைக்கு சென்று அதை பாா்வை இட்டார்கள். அதுவே ஆதிசங்கரா் தவம் இருந்த குகை
என்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டு., திரு சர்மாவின் மகத்தான சாதனைக்கு பாராட்டு
தொிவித்து இருமகான்களும் அவரை ஆசீர்வதித்தாா்கள். ஆனாலும் நாகராஜ சர்மாவிற்கு
மனதில் ஒரு குறை  இருந்து கொண்டே இருந்ததாம். அதாவது காஞ்சி மகானின்
அங்கீகாிப்பும் அதற்கு கிடைத்தால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என
நினைத்தவா் ஹம்பியில் முகாம் இட்டு இருந்த அந்த ஞானப் பேரொளியை 29-01-1979
அன்று சந்தித்து அனைத்து de விவரங்களையும் எடுத்துரைத்தாராம்.  ஆனால் அந்த
மாமுனிவரோ திரு சர்மாவிற்கு விளையாட்டு காட்ட வேண்டும் என நினைத்தோ என்னவோ
“அந்த குகையும்   இருக்காது என கூறி விட்டால் என்ன செய்வதாக உத்தேசம்” என
விளையாட்டாக கேட்க அப்படியே அதிர்ந்து போனார் திரு நாகராஜா சர்மா. நர்மதை இரு
கரைகளிலும்  இருந்த அத்தனை குகைகளையும் தேடியாயிற்று.,  இனி அங்கு தேடுவதற்கு
வேறு எதாவது  குகையும்   கிடையாதே என்பதினால் ஆதி சங்கரா் தமது குருவை வேறு
எங்காவது குகையில் சந்தித்து இருக்க வேண்டும் என  தன் விரக்தியை
வெளிப்படுத்தி விட்டு எழுந்தபோது “சாி அமர்ந்து கொள்” எனக் கூறிய பொியவாள்
சுமாா் அரை மணி நேரம் தமது கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருக்கலானார்.
பதட்டமும் படபடப்பும் அடைந்து என் உடலும் உள்ளமும் சம நிலைக்கு வர சற்று நேரம்
பிடித்தது. உள் மனம் வெளி மனமாக மாறியது, பொியவாளிடம் அனாவசியமாக உரக்க  பேசி
விட்டேனா.? எப்போது எழுந்து நின்றேன் என்று கூட நான் அறியவில்லையே.!
வாா்த்தைகளில்  தடுமாற்றம் நிகழ்ந்ததா.? நர்மதை சம நிலத்தில் பாய்கின்றது
என்று உண்மைக்கு புறம்பான வாா்த்தைகள் என் நாவில் இருந்து ஏன் பிறக்க
வேண்டும்..? சே.. இவ்வளவோ பொறுப்பற்றவனா நான் சே.? என்னையே நான் கடிந்து
கொண்டேன். பலியிடப்போகும் ஆடு போல என் தலை வெட்கத்தால் குனிந்து நிற்க நேரம்
போய் கொண்டே இருந்தது. சுமாா் அரை மணி நேரம் கழித்தே அவா் தியானம் கலைந்தது.
சற்று மெளனமாக இருந்து விட்டு எனது கண்டு பிடிப்பை ஆதாிக்கும் பாவனையில் அந்த
தெய்வம் சிரத்தை அசைத்துக் கொண்டே குபீரென வாய்விட்டு  சிரித்தாா். அச்
சிரிப்பின் ஒலியில்  என் அங்கமெல்லாம் அணு அணுவாக சிலிர்த்தது. ஆதிசங்கரா்
நேரில் தாிசனம் தனது பாராட்டியது போன்ற பிரமை! அதுவும் அவ்வாிய காட்சி ஒரு
க்ஷணம்தான் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்கள் ஆனந்தத்தால் நீா்
சுரக்க உடலெல்லாம் வியா்வைக் கொட்ட வாயடைத்து குரல் எழும்பாமல் அத்
தெய்வத்தின் திருமுகத்தையே நோக்கி எவ்வளவு நேரம் நின்று இருந்தேனோ தொியாது.
ஆனால் பழைய நிலையை அடைய சில நிமிடங்களாவது பிடித்து இருக்க வேண்டும்”
இப்படியாக பாராட்டு பெற்றவருக்கு இன்னொரு  அபூர்வ சம்பவம் நடந்ததாம். திரு
நாகராஜா சர்மாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
அங்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
அந்த இடத்தின் புனிதத்தன்மையைக் கண்டு வியந்து அதை சீரமைத்து புனரமைக்க
போபாலில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி., குகையின் சீரமைப்பு முடிந்ததும் 1987 ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி  அதற்கு “குகை மந்திர்” என்ற பெயா் சூட்டி
நாட்டுக்கு அர்பணித்தாராம்.குகையின் பெருமையையும்., அருமையையும் அறிந்த அன்றைய
குடியரசுத் தலைவா் திரு ஆர். வெங்கடராமன் நேரில் வந்து குகையை பார்வையிட்டு
பரவசமானதோடு 06-09-1988 அன்று ராஷ்ரபவனுக்கு திரு நாகராஜ சர்மாவை அழைத்து
மிகவும் பாராட்டினார். இப்படி ஆதி சங்கரா் சன்யாச தீட்க்ஷை பெற்று தவம்
இருந்து அவருடைய குருநாதா் மூலம் அனைத்து சாஸ்திரங்களையும்  கற்றறிந்த புனித
குகை திரு. நாகராஜ சர்மா   அவா்களின் கடுமையான முயற்சியினால் கண்டு
பிடிக்கப்பட்டது.
  https://www.youtube.com/watch?v=Uge4f-Eyht4

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

*நண்பா் திரு. Chandramouli Ganapathy பதிவிலிருந்து
ஜய  ஜய  சங்கர
ஹர ஹர சங்கர
Adi Shankar Deeksha*
  *Patri Omkareswarar* *Cave*

Where is the Omkareshwarar Cave where Sri Adisankar received Deeksha?
No one in the world has known that. The honor of bringing it to the outside
world goes to Mr. Nagaraja Sharma, who was working as an electrical
engineering officer in Madhya Pradesh in the 1970s. The painstaking efforts
he took to find it, the background of his efforts and the amazing
experiences he had in it are amazing. A strange event prompted him to
discover the location of the cave. He has said this about it.

Once he was standing on the banks of the Narmada River, "Daddy, are you
researching the many temples on this side and publishing them in Tamil
magazines. The cave where Adi Shankar took sannyasam and learned the
shastras is right here. Do you want something..?”   After a Tamil
grandmother who had come to bathe in the river asked him this question, he
was unable to answer it and kept saying, "Let's look for it and find it"
and the grandmother entered the crowd and disappeared. Although he did not
understand who she was till date, Mr. Nagaraja Sharma, who had been working
in many places in Madhya Pradesh for a long time after the grandmother said
that and disappeared, got deep in her thoughts. In 1971, he started the
search for the cave because he was eager to find the place himself.
Anantasree Vibhusheeth Jagathguru Shankaracharya Jyotish Peedadeeswar Swami
Swaroopananda Saraswati himself encouraged his efforts from the very
beginning and also gave some advice. According to his advice Mr. Nagaraja
Sharma launched a search for them. He has written about that experience
like this. First I reached the hamlet of Sankalgad. We had to walk to the
village which is 35 km away from Kotegaung railway station.   It is said
that Sankargat is the first name of Sankalgat, the confluence of river
Hiran with Narmada. As soon as I read in the Hindi book 'Narmatha Secret'
that Sri Adi Shankar had stayed here, my excitement ran wild. It was dark
when we reached the village. The next morning despite the weather, I set
out to find a cave there with the help of the locals. As the caves were on
the opposite bank, the river Narmada had to be crossed. I crossed the river
in a narrow boat called a tonga, which could only be carried by two people.
Only two people can sit in Tonga. It needs experience. Balance is very
important in this tonga ride, just like balance on a bike.   When my
balance went bankrupt in the Narmada, the boat and I capsized with the
tonga and drowned in the river. The habit of swimming in the Kaveri saved
me by lending a hand. Further journey is with dripping wet clothes. That
too in the cold season..! I walked wet for about four kilometers along the
banks of the river Narmada and reached a cave about half a meter away from
the bank of the river. The mouth of the cave has been closed many years ago
due to the fact that evil animals such as tigers used to stay in that cave
and attack cattle suddenly. There is a rock like a temple bell built in its
gate area, and if you tap it, not only a sound like sangha natham will be
heard, but if you press your foot across the region, a sound like bronze
natham will be heard. There were two holes for light to enter the cave.
After staying there for two days and gathering some more news, I again met
Swami Swarupanand and gave all the details. Not only that, I also told him
that Adi Shankar met his Guru at a place called 'Sangarakanga', that place
is dedicated only to Sri Chandra Sekarendra Saraswati Swami and the news
found in an English book called *'Sankararum Shanmadham'*. On hearing that,
Swami Swaroopanand advised me that they should go to Kanchi Mutt once and
visit the Paramacharya. Deciding to meet Kanji Maha Poiyavara, Mr. Nagaraja
Sharma left to visit the Poiyavara who was camping in Denambakkam near
Kanchi on 15.07.1974. At that time Poiyav was on a fast of silence and did
not talk to anyone, so going there at that time was a futile effort. It is
only by reading what Mr. Nagaraja Sharma has written that one can
appreciate his true feelings. Written by Mr. Nagaraja Sharma. I reached
Thanambakkam early in the morning. There was someone talking loudly to my
ear. Why did you talk so loudly in the shrine of the liars?
Immediately he covered my mouth and said 'Apacharam. It's an apacharam for
you to ask like this. Poiyava has broken his silence today after many days.
They are the ones talking now. I was surprised to say, 'You are blessed to
hear the divine voice.' Alas…mercy is the mercy of a false sword. Has God
broken the silence for me? I was surprised to see the Lord and Guru.
Achiresh learned that I had come there through a disciple and said that he
would call me later. He ordered me to once again look at all the books,
notes and pictures that I had taken till then. It blew me away.   This did
not stop him from seeing why I had come here. I was shocked as to how
Immakhan knew that the cave had come with books. Like a student frantically
flipping through books and memorizing before entering the exam hall, I
hastily rummaged through what I had gathered.   The auspicious time I had
been waiting for had arrived. He let me in and made me sit face to face and
talk to him. The talk started. "How long are you worrying about this, tell
me first!'' Mr. Nagaraja Sharma did not expect such a question from Maha
Poiyava. It would take a long time to tell the details about the cave. The
others would be interrupted. When he was thinking for a while about what to
answer, Piyava again commanded him to say it boldly so that the others
could hear it. After closing the meditation, Maha Periyava again said, “You
say that the Sangadgad cave you saw is far from the river. So the cave
could not be this. The cave must be very close to the river. Also the cave
should have a facility to bring river water to the cave. Swami Swaroopanand
is that neighbor... Keep what I said and see him again” Like a kicked ball,
he went back to Swami Swaroopanand and told him the details and after
receiving his blessings, Mr. Sharma's research journey continued in search
of the cave. Entering the cave as a symbol of the presence of Sri Govinda
Bhagavata Bhathar at the gate of the cave, he was bored by seeing many
mountains and caves, bearing in mind the message he had read in the book
'Sankara Vijayam' that he was Sri Adi Shankar Taisithar. He has escaped
from the danger of tigers, mountain snakes and poisonous animals when he
entered many unmarked caves by the grace of God. At one point in the year
1916, Mr. Nagaraja Sharma happened to read the book 'Sankara Kalam' which
was written by Thandalam Sri Sankara Narayana Sastri. In it, Adi Shankara's
guru Sri Govinda Bhagavad Bhatra and his guru Sri Gautama Buddha sat in the
cave where Adi Shankara stayed and learned Vedic lessons and Sri Govinda
Bhagavad Bhatra also attained siddhi in that cave. There was also
information about the present location of that cave. Based on that
information, Mr. Nagaraja Sharma again continued his search. He was blessed
to see that place on Shivaratri in 1978. According to Mr. Nagaraja Sharma,
'Adi Sankara was given sannyasam at this place.' It was at that place that
Adi Shankara's supreme guru, Sri Gautabad Vyakarana Bhashya, took the form
of Brahma Rakshasha and taught Sri Govinda Bhagavata Pathar day and night.
As soon as he saw Guru's footprints at the entrance of the cave, Adi
Sankara's tongue uttered *'Guru Paduka Panchakam'*. Guru Shri Govinda
Bhagavata, who was resting in the cave, saved the water of the river from
the flood of the Bukunda river in his Kamandalam. Finally Kanji Munivar was
amazed to see that there is a tunnel inside the cave to bring river water
as he had told the layout of the cave with his knowledge. Apart from that,
he found three more tunnels in its inner part leading to Omkareswarar
temple. But they were stuffed. He saw that there was a small hall near the
river. Local people say that it is the samadhi of Shri Govinda Bhagavata
Bhatt, but later it became clear that it is the place where Adi Shankar
received Deesh. Mr. Sharma, who discussed the structure and artistic style
of the cave, is the son of Shri Govinda Bhagavata Patar who was born in
Purvasram and the king who ruled Ujjain, Sri Hasha Vikramadityan, who is
credited with making the cave a beautiful art hall. Mr. Sharma has
mentioned in his article that Sri Hasha Vikramadityan, the king who ruled
Ujjain, was the son of Sri Govinda Bhagavata Patar, who was credited with
making the cave into a beautiful art hall. Having endured many hardships,
Mr. Accepting Nagaraja Sharma's request, Dwarka Dean Shankaracharya Swami
Abhinavasachidananda and Jyotish Abbot Shankaracharya Swaroopananda visited
the cave at Omkareswarar on 7th and 8th January 1979 with Mr. Sharma.
Confirming that it was the cave where Adi Shankar had done penance, the two
kings praised Mr. Sharma for his great achievement and blessed him. But
Nagaraja Sharma still had a flaw in his mind. That is, if Kanji Mahan's
recognition is also received, he thought that his heart would be very
happy.   But Mr. Nagaraja Sharma was shocked to ask Mr. Nagaraja Sharma
jokingly, "What do you intend to do if you say that the cave does not
exist?" After searching all the caves on both banks of the Narmada, since
there was no other cave to search there, Adi Shankar expressed his
frustration that he must have met his guru somewhere else in a cave. When
he got up, Poiyaval said, "Sit down" and closed his eyes for about half an
hour and remained in meditation. . It took a while for my body and mind to
settle into a state of nervousness and panic. The inner mind has become the
outer mind, have I spoken unnecessarily loudly to the liar? I don't even
know when I stood up. Has there been a mistake in the words? Why should the
untrue words that Narmada flows on level ground be born from my tongue..?
Se.. Am I so irresponsible Se.? I scolded myself. Time went by as my head
bowed in shame like a goat about to be sacrificed. After about half an
hour, his meditation broke. The deity kept a little silent and smiled with
his mouth while shaking his head as if to support my discovery. At the
sound of that laughter, every part of me was thrilled. Adi Shankar's praise
of the vision in person! That and such a scene was only for a moment and my
happiness knew no bounds. No matter how long I stood looking at the face of
that deity without raising my voice, my eyes watering with joy, my body
sweating, my mouth closed. But it should take at least a few minutes to
reach the old level.” Another rare incident happened to the person who
received such praise. Accepting Mr. Nagaraja Sharma's request, Kanchi
Kamakodi Prefect Sri Jayendra Saraswati Swami, who visited there in April
1980, marveled at the sanctity of the place and established a trust in
Bhopal to repair and restore the cave. Bey Sooty dedicated to the country.
Knowing the glory and beauty of the cave, the President of the day, Mr. R.
Venkataraman personally visited the cave and was ecstatic and called Mr.
Nagaraja Sharma to Rashrapavan on 06-09-1988 and praised him highly. Thus,
Adi Shankar received Sanyasa Deeksha and learned all the scriptures through
his Guru Nath through penance. Nagaraja Sharma was found out by their
intense efforts.     https://www.youtube.com/watch?v=Uge4f-Eyht4
Apara Karuna Sindhum Gnanadam Shantha Rubinam Sri Chandrasekhara Gurum
Pranamami Muthanvaham
Hara Hara Sankara Jaya Jaya Sankara        K RAJARAM IRS  23524//24524

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor0Kg2rvMkp5vhmQ1DNDNvSRcSGo9nhFMaoXKmh8Rxpkg%40mail.gmail.com.

Reply via email to