Rangarajan was born in Kumbakonam to Sanskrit scholar R.V. Krishnamacharya. Rangarajan began writing at the age of 16 for Sakthi, a literary magazine run by V. Govindan. Later, he worked for another journal, Kalachakram. He then became associated with the popular Tamil weekly Kumudam for over four decades (~1950-1990) during which time he became a household name among Tamil readers. He wrote more than 1,500 short stories and over 50 novels that included several translated works from English such as Papillon and some Sidney Sheldon and Jeffrey Archer novels. He was the first person to write a Tamil historical novel (Naan, Krishna Devarayan) in first-person narrative, inspired by the English novel I Claudius. Rangarajan said he wrote the novel "because not much has been written about Krishna Deva Raya or the Vijayanagar Empire. He was one of the greatest kings with many dimensions." The novel involved extensive research, including visits to libraries, as well as discussions with historians and artists. Rangarajan stated that he was "an admirer of Kalki Krishnamurthy" and that he "tried to emulate his style." Rangarajan said his inspirations were Charles Dickens, Alexander Dumas and Jeffrey Archer in English; Kalki Krishnamurthy in Tamil ரங்கராஜன் கும்பகோணத்தில் சமஸ்கிருத அறிஞர் ஆர்.வி. கிருஷ்ணமாச்சார்யா. ரங்கராஜன் தனது 16வது வயதில் வி.கோவிந்தனால் நடத்தப்படும் சக்தி என்ற இலக்கிய இதழில் எழுதத் தொடங்கினார்.[1] பின்னர், காலச்சக்கரம் என்ற மற்றொரு இதழில் பணியாற்றினார். நான்கு தசாப்தங்களாக (~1950-1990) பிரபலமான தமிழ் வார இதழான குமுதத்துடன் அவர் இணைந்தார், அந்த நேரத்தில் அவர் தமிழ் வாசகர்களிடையே வீட்டுப் பெயரானார். அவர் 1,500 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார் அதில் பாப்பிலன் மற்றும் சில சிட்னி ஷெல்டன் மற்றும் ஜெஃப்ரி ஆர்ச்சர் நாவல்கள் போன்ற பல ஆங்கில மொழி பெயர்க்கப்பட்ட படைப்புகள் அடங்கும். I Claudius என்ற ஆங்கில நாவலால் ஈர்க்கப்பட்டு, முதல் நபர் கதையில் ஒரு தமிழ் வரலாற்று நாவலை (நான், கிருஷ்ண தேவராயன்) எழுதிய முதல் நபர் இவரே. "கிருஷ்ண தேவராயரைப் பற்றியோ, விஜயநகரப் பேரரசைப் பற்றியோ அதிகம் எழுதப்படாததால் தான் இந்த நாவலை எழுதியதாக ரங்கராஜன் கூறினார். அவர் பல பரிமாணங்களைக் கொண்ட மிகப் பெரிய அரசர்களில் ஒருவர்." நூலகங்களுக்குச் செல்வது, வரலாற்றாசிரியர்கள் மற்றும் கலைஞர்களுடனான விவாதங்கள் உள்ளிட்ட விரிவான ஆராய்ச்சிகள் இந்த நாவல் உள்ளடக்கியது. ரங்கராஜன், தான் "கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அபிமானி" என்றும், "அவரது பாணியை பின்பற்ற முயன்றார்" என்று கூறினார்.[3] ஆங்கிலத்தில் சார்லஸ் டிக்கன்ஸ், அலெக்சாண்டர் டுமாஸ் மற்றும் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஆகியோர் தான் உத்வேகம் அளிப்பதாக ரங்கராஜன் கூறினார்; தமிழில் கல்கி கிருஷ்ணமூர்த்தி. தமிழில் ரா கி ரங்கராஜனின் "சுமை தாங்கி" படித்துள்ளீர்களா? K Rajaram IRS 28524
On Tue, 28 May 2024 at 09:42, Narayanaswamy Sekar <nsekar...@gmail.com> wrote: > > > ---------- Forwarded message --------- > From: N Sekar <nseka...@yahoo.com> > Date: Tue, May 28, 2024, 6:41 PM > Subject: Re: Fwd: Sujatha - ரா.கி.ரங்கராஜன் பாராட்டுரை > To: Chittanandam V R <chittananda...@gmail.com> > Cc: Kerala Iyer <keralaiy...@googlegroups.com>, Rangarajan T.N.C. < > tncrangara...@yahoo.com>, Mathangi K. Kumar <mathangikku...@gmail.com>, > Narayanaswamy Sekar <nsekar...@gmail.com>, APS Mani <m...@manijpn.in>, > Srinivasan Sridharan <sridhsriniva...@gmail.com>, SRIRAMAJAYAM < > vabal...@gmail.com>, Rama (Iyer 123 Group) <kaviran...@gmail.com> > > > > Thanks Sir. > > A fitting tribute to a very versatile author who excelled in several > fields. I have readmost of the stories, essays, Q & A mentioned here. > > There is a separate book titled " Sri Rangatthu Devadaigal" - a > collection of several short stories, but some sentences there make you > squirm. > > But what I don't understand is the first line > " Sujatha patri Raa Ki Rengarajan ezhdiya katturai" meaning > What R K Rengarajan wrote about Sujatha. > > But this is written by, may be, by Madurai S. Krishnan going by the last > line. > > N Sekar > > > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> > > On Tue, May 28, 2024 at 5:44 PM, Chittanandam V R > <chittananda...@gmail.com> wrote: > > *அவரைப்போல் இனி ஒருவர் வரமாட்டார்!* > *= சுஜாதா பற்றி ரா.கி. ரங்கராஜன் ஜூனியர் விகடனில் 2008-ம் ஆண்டு எழுதிய > கட்டுரை* > > *நாற்பத்தைந்து வருடங்களாக எனக்கு ஒரே சமயத்தில் குருவாகவும், சீடராகவும், > தோழனாகவும் இருந்த சுஜாதா என்கிற மேதை மறைந்துவிட்ட துக்கத்தை எங்கே போய் > ஆற்றிக்கொள்வேன்!* > > *நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது... தபாலில் வந்திருந்த சிறுகதைகளைப் > படித்துக்கொண்டு இருந்ததும், ஃபுல்ஸ்கேப் பேப்பரில் பொடிப் பொடியாக > எழுதப்பட்டிருந்த ஒரு கதையைப் படித்துக்கொண்டு இருந்ததும்! என்ன நடை, என்ன > உத்தி, என்ன ட்விஸ்ட் என்று பிரமித்தவனாக எங்கள் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் > அறைக்கு ஓடிச்சென்று, ''ஒரு பிரமாதமான கதை... டெல்லியிலிருந்து ரங்கராஜன் > என்ற ஒருவர் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்'' **என்கிறேன். > ''அவ்வளவு பிரமாதம் என்றால் பிரஸ்ஸுக்கு அனுப்புங்கள். பிறகு பார்க்கிறேன்'' > என்கிறார். 'சசி காத்திருக்கிறாள்' என்ற அந்தக் கதையை, இதழ் வெளியான பிறகு > அவர் படித்துப் பார்த்துவிட்டு, ''மணியார்டர் அனுப்பி விட்டீர்களா?'' > என்கிறார். இல்லையென்று நான் சொன்னதும், ஃபாரத்தைக் கொண்டு வரச் சொல்லி, > கூப்பனில் நான் எழுதியிருந்த வரிகளின் கீழே, 'கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. > அடிக்கடி எழுதுங்கள்' என்று தன் கைப்பட எழுதி, அன்பளிப்பு 20 ரூபாய் > என்றிருந்ததை அடித்து, 30 ரூபாய் என்று திருத்தியதும் கண்ணீருக்கு நடுவே > ஞாபகம் வருகிறது.* > > *'எஸ்.ரங்கராஜன், வெறும் ரங்கராஜன், சுஜாதா ரங்கராஜன்' என்றெல்லாம் அவர் > பெயரை மாற்றி மாற்றிப் போட்ட பின், கடைசியாக சுஜாதா என்ற பெயரை மட்டுமே > நிலைநாட்டினேன்.* > > *பேன்ட் அணிந்த இளைஞர்களும், சுடிதார் அணிந்த மங்கைகளும், கிதார் > வாசிப்பவர்களும், டெல்லி கோடீஸ்வரர்களும், அவர்களுடைய ஆடம்பர மனைவிகளும் > பாத்திரங்களாக அவரது கதைகளில் இடம்பெற்று, மத்திய வர்க்க பிராமணக் > குடும்பத்தையே மையமாகக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுகதை உலகத்தைத் தலைகீழாக > மாற்றிவிட்டார்.* > > * 'கணையாழி' இலக்கிய இதழில், கடைசிப் பக்கத்தில் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' என்ற > பெயரில் எழுதப்பட்டு வந்த கட்டுரைகளில் எஸ்.ஏ.பி.க்குத் தனி மோகம். > சுஜாதாதான் அந்த ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று சொன்னதை நம்பாமல், சுஜாதாவையே > நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டார். சுஜாதா எழுதிய முதல் நாவல் 'நைலான் > கயிறு'. அப்போது அவர் சென்னைக்கு வந்திருந்தார். பகல் சாப்பாட்டுக்கு > என்னுடன் என் வீட்டுக்கு வந்தார். போகும் வழியில், ''கணையாழி இதழில் ஒரு > சிறுகதை எழுதியிருக்கிறேன். அதைத் தொடர்கதையாக டெவலப் பண்ண ஆசை. எப்படிச் > செய்யலாம்?'' என்று யோசனை கேட்டார். எனக்குத் தெரிந்தவரையில் சொன்னேன். > அருமையான திருப்பங்களுடன் மாடர்ன் டச் கொடுத்து எழுதி, அபார புகழ் பெற்றார். > அடுத்து, 'அனிதா இளம் மனைவி'. அதுவும் சிகரமான தொடர்கதை. அதன்பின் எத்தனை > எத்தனை நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள்..!* > > *அவர் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகள் வேறு எந்தப் பத்திரிகையையும்விட > ஆனந்த விகடனில்தான் அதிகம் வெளியாகியிருக்கின்றன. அவர் விகடனில் எழுதிய > 'கரையெல்லாம் செண்பகப் பூ' ரொம்ப வித்தியாசமான, எல்லோராலும் பாராட்டப்பட்ட > தொடர்கதை. ஜூனியர் விகடனில் அவர் தொடர்ந்து எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?', > 'தலைமைச் செயலகம்' ஆகியவை அறிவியல்பூர்வமான அறிவுப் பொக்கிஷங்கள். விகடனில் > அவர் பல விஷயங்கள் குறித்து எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' பகுதியின் தீவிர > வாசகன் நான்.* > > *எந்த விஷயம் குறித்து எழுதச் சொன்னாலும், உடனே எழுதிவிடுவார் சுஜாதா. > அவருடைய தந்தை காலமானபோது, அவரைப் பற்றி எழுதும்படி கேட்டுக்கொண்டோம். வெகு > உருக்கமாக எழுதினார். கேரளாவில் ஓர் இடைத் தேர்தலில் மின்பதிவு முறையில் > வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு அடித்தளம் இட்டவர் சுஜாதாதான். > தேர்தலின்போது அவர் அந்தத் தொகுதிக்குச் சென்றிருந்தார். அந்த அனுபவங்களை > எழுதும்படி சொன்னபோதும், தனக்கே உரிய எளிமை நடையில் உடனே எழுதித் தந்தார். > எழுத்தில் அவரைப் போல வீச்சும் வேகமும் உள்ள ஒருவரை இனிமேல் காண முடியாது.* > > *நாலு வரி எழுதினாலும், அவருக்கே உரிய முறையில் 'நச்'சென்று எழுதுவது > அவருடைய தனிச் சிறப்பு. என் குமாரன் ஸ்ரீதருக்குத் திருமணம் நடந்தபோது, > வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அதில்... 'சின்னப் பையனாக இருந்த ஸ்ரீதருக்கா > கல்யாணம்! இப்போதுதான் தெரிகிறது, எனக்கு எவ்வளவு வயதாகிவிட்டதென்று!' என்று > எழுதியிருந்தார்.* > > *ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை எனக்கு அனுப்பினார் அது போல நானும் எழுதவேண்டும் > என்று! வெறுமே அனுப்பியிருக்கலாம். ஆனால், அதன் முதல் பக்கத்தில், 'நண்பர் > ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு, கொஞ்ச நாள் நான் வைத்திருந்து, ஜூலை மாதம் 5ம் > தேதி அன்புடன் அனுப்பிய புத்தகம் இது' என்று குறிப்பிட்டு, தேதியுடன் > கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் (புத்தகம் கொஞ்சம் பழசாகியிருந்ததே > காரணம்!).* > > *திருமாலின் திருவடியில் சேரப்போகும் நாள் சமீபித்துவிட்டது என்ற எண்ணம் > வந்ததோ என்னவோ, ஆழ்வார் பாசுரங்களின் சிறப்புப் பற்றி சமீப காலமாகக் > கல்கியில் எழுதிவந்தார். முதல் கட்டுரை வெளிவந்தபோது படித்துவிட்டு, > 'குறிப்பிட்ட பாசுரத்தைப் பற்றி உங்கள் கண்ணோட் டத்தை அழகாக > எழுதியிருக்கிறீர்கள். இறுதிப் பகுதியில் அந்தப் பாசுரம் பற்றி முன்னோர்கள் > தப்பாக வியாக்கியானம் செய்தார்கள் என்று ஏன் சொல்லியிருக்கிறீர்கள்? அவர்கள் > பெரிய மகான்கள். அவர்களுடைய நோக்கில் எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் குறை > சொல்லவேண்டும்?' என்று போனில் சொன்னேன். அதன்பின் அத்தகைய விமர்சனத்தை > விட்டுவிட்டு, பாசுரத்தின் இலக்கியச் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதினார். > 'மெய்ப் பொருள் காண்பதே அறிவு' என்பதை உணர்ந்த பெருந்தகை அவர்.* > > *புதிய எழுத்தாளர்கள் அவரைப் போல எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதுவது > உண்டு. அவ்வளவு ஏன்... ஆரம்ப காலத்தில் நானே அவரைப்போல எழுதிப் புகழ்பெற > வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஆசைப்பட்டதுண்டு. அவருடைய நுட்பமான அறிவு, > அளவிட முடியாத உழைப்பு, படிப்பு, நட்பு வட்டாரம், பெரிய இடத்துப் பழக்க > வழக்கங்கள் இவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எனக்கு வராது என்பதை உணர்ந்து, > அவரை முந்தவேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டேன். மரணம் ஒன்றில்தான் அவரை > முந்த முடியும் என்று எண்ணியிருந்தேன். அதையும் பொய்ப்பித்துவிட்டார் என் > அருமை நண்பர் சுஜாதா.* > > > *நன்றி: மதுரை எஸ்.கிருஷ்ணன் * > ****************************************************** > > *சித்தானந்தம் * > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to thatha_patty+unsubscr...@googlegroups.com. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zc47GK3vHSs2w3vbkGcH_6wj-v1BZhre1fJnHR-2958%2BQ%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zc47GK3vHSs2w3vbkGcH_6wj-v1BZhre1fJnHR-2958%2BQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoognHSorxFyV_hDf12Rgs65hBKjR9F6CNpL%3DuRcieBeXQ%40mail.gmail.com.