wow KR Mandukya Karika, verse 3.37 र्वाभिलापविगतः सर्वचिन्तासमुत्थितः । सुप्रशान्तः सकृज्ज्योतिः समाधिरचलोऽभयः ॥ ३७ ॥
sarvābhilāpavigataḥ sarvacintāsamutthitaḥ | supraśāntaḥ sakṛjjyotiḥ samādhiracalo'bhayaḥ || 37 || 37. (*This Ātman is) beyond all expression by words beyond all acts of mind; (It is) all peace, eternal effulgence free from activity and fear and attainable by concentrated understanding (of the Jīva).* Shankara Bhashya Similarly, it is beyond all activities of the mind. The word “*Chintā*” in the text stands for “mind” (or the internal organ of thought). For, the *Śruti* says, “It is verily without *Prana* and without mind”, “It is higher than the imperishable Supreme.” It is all peace as it is free from all distinctions. The word, Chintā (चिन्ता), is derived from the root – चिन्त् meaning - to think, consider, reflect, ponder over; and by itself means – thinking, thought, sad or sorrowful thought, reflection, consideration, anxiety. Chintā is one of thirty-three *Vyabhichāri bhavas*, the transient feelings which rise irregularly and support the permanent basic sentiments, because of their fleeting nature they are also called *sanchāri bhavas*. *Manas*, which is the ordinary mental equipment of the individual, is the perceiving and arranging mind. In Samkhya system it refers to the personal organ of thought, not diffused like the*ātman* but localized in the individual. *Manas* has its own illumination (*chetas*) which gives man awareness or consciousness (*chetna*), faculties of perception (*pratyaksha <https://dharmawiki.org/index.php?title=Pratyaksha&action=edit&redlink=1>*), thought (*chintā*), imagination (*kalpanā*) and volition (*praytana*). Chintā is the faculty whereby the current of thought dwells, thinks and contemplates upon the subject so recalled by *Samarnam* (memory), and previously known and determined by *buddhi <https://dharmawiki.org/index.php?title=Buddhi&action=edit&redlink=1>* (intellect). Hence Kavalai is a part of chinta. as emotion and pragmatism have the good and the bd sp tto the chinta; if it iws sindanai sey maname well it is good. But as you said then avoid. K Rajaram IRS 29524 On Wed, 29 May 2024 at 02:59, Narayanaswamy Sekar <nsekar...@gmail.com> wrote: > > ---------- Forwarded message --------- > From: N Sekar <nseka...@yahoo.com> > Date: Wed, May 29, 2024, 11:58 AM > Subject: Fwd - On the futility of worrying > To: Kerala Iyer <keralaiy...@googlegroups.com>, Rangarajan T.N.C. < > tncrangara...@yahoo.com>, Chittanandam V. R. <chittananda...@gmail.com>, > Mathangi K. Kumar <mathangikku...@gmail.com>, Narayanaswamy Sekar < > nsekar...@gmail.com>, APS Mani <m...@manijpn.in>, Srinivasan Sridharan < > sridhsriniva...@gmail.com>, SRIRAMAJAYAM <vabal...@gmail.com>, Rama (Iyer > 123 Group) <kaviran...@gmail.com> > > > > *இன்றைய சிந்தனை.* > > > *நிழலை விரட்டியவன்!* > > > கவலைகள் ஏன் மனித முகத்தை இவ்வளவு வாட்டம் கொள்ளச் செய்கின்றன? கோயிலுக்குப் > போகும் போது கவலை படிந்த முகங்களை நிறைய காண்கிறேன். அந்த முகமே அவர்களின் > துயரத்தை சொல்லி விடுகிறது. > > 'கன்னத்தில் கை வைக்கக் கூடாது; அது கவலையின் அடையாளம்’ என திட்டுவார்கள். > இன்று கன்னத்தில் கை வைப்பது இயல்பாகிவிட்டது. பின்பு எப்படி கவலையை > வெளிப்படுத்துகிறார்கள்? > > கவலைதான் கோபமாகிறது. கவலைதான் பொறாமையாகிறது. கவலைதான் இயலாமையாகிறது. > கவலைதான் குரோதமாகிறது. > > கவலைகள் பல்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. மனதில் ஒரு கவலை தீரும்போது, > இன்னொரு கவலை உருவாகிவிடுகிறது. > > > கவலையே இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். > ஆனால், கவலைகளின் கூடாரமாகவே பலர் இங்கு வாழ்கிறார்கள். > > தலைமுறை தலைமுறையாக சில கவலைகள் கடத்தப்படுகின்றன. ஏன் கவலைகளை விலக்க > முடிவதேயில்லை? > > ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான கவலை நம்மைப் பற்றிக் கொள்கிறது. > > நாளை விடுமுறையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற கவலை சிறார்களுக்கு. > > கடனை எப்படி அடைப்பது? எப்போது வீடு வாங்குவது? எப்போது கார் வாங்குவது? > திருமணம் எப்போது நடக்கும் என ஆளுக்கு ஒரு விதமான கவலை. தன் கவலைகளை > யாரிடமாவது கொட்டிவிடவே பெரும்பான்மையினர் முயற்சிக்கிறார்கள். தேடிப் போய் > கவலைகளை பரிமாறுகிறார்கள். > > > எனக்குத் தெரிந்த ஒருவர், தனது கவலையை மறக்க நிறைய சாப்பிடுவார். அதுவும் > தேடித் தேடிப் போய் விதவிதமாக உணவுகளை சாப்பிடுவார். எதற்காக சாப்பாட்டில் > இவ்வளவு ஆர்வம் எனக் கேட்டால், ''மனசு நிறைய கவலையிருக்கு சார்; அதை > மறைக்கிறதுக்கு இப்படி எதையாவது செய்ய வேண்டியிருக்கு…’’ என்பார். > > இன்னொரு ' பெண் கவலையாக இருக்கிறது…’ என்று சொல்லி சாப்பிடவே மாட்டார். > வற்புறுத்தினால் ஒரு இட்லி அல்லது ஒரு டம்ளர் பால் இவ்வளவே அவரது ஒருநாள் > உணவு. ஒருவர் அப்படி; மற்றவர் இப்படி. இருவரும் கவலையால் பீடிக்கப்பட்டவர்களே. > > நம் கவலைக்கு சிலர் காரணமாக இருப்பதைப் போல, சிலரது கவலைக்கு நாம் காரணமாக > இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். கவலைகொள்வது அலாரத்தில் மணி > அடிப்பதைப் போன்றது. > > நாம்தான் அந்த அலாரத்தை செட் செய்து வைத்திருக்கிறோம். அது அடிக்கும்போது > சத்தமாக ஒலிக்க வேண்டும் என்று ரெடி செய்திருக்கிறோம். > > அலாரம் அடிக்கும்போது நமக்கு அது பிடிக்கவில்லை என்றால், தவறு யார் மீது? > எந்த அலாரமும் தானே அடித்துக் கொள்வதில்லையே! > > எப்போதுமே நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகளை நமக்கு > சொல்லிவிடுகிறது. நாம்தான் அதைக் கேட்காமல் அலட்சியப் > படுத்துகிறோம். வீண் எதிர்ப்பார்ப்புகளை, பொய்யான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் > கொள்கிறோம். அல்லது குருட்டு அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கிறோம். > > நாம் ஏமாற்றப்படும்போதோ, நாம் நினைத்தபடி நடக்காதபோதோ, விரும்பியது கிடைக்காத > போதோ நாம் கவலைப்படுகிறோம். அப்போது நாம், > 'அப்பவே நினைச்சேன்’ என நமக்குள் சொல்லிக் கொள்ளவே செய்கிறோம். அது மனம் > சொன்னதை கேட்காமல் விட்டுவிட்டோம் என்பதன் அறிகுறியே. > > சந்தோஷத்தை உண்டாக்கவும், பகிரவும் தெரியாமல் போவதே கவலை கொள்வதற்கான காரணம். > > உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் > நீங்கள் செய்யும் வேலை சிறியதாக இருக்கக் கூடாது. எவ்வளவு சிறப்பாக செயலை > செய்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். நிறைவான வேலை > செய்து விட்டவனுக்கு கவலைகள் தோன்றாது. > > நமக்கு எது தேவை என்பதைப் போலவே, எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. > கடவுளிடம் கேட்டது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறோம். > > ஆனால், ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பலன்கள் மட்டுமே தீர்வு கிடையாது. > > *சில தீர்வுகள் நாம் அறியாத வடிவத்தில் அறியாத விதத்தில், எந்த நேரத்திலும் > வந்து சேரக்கூடும் என்பதை உணர முயற்சியுங்கள்.* > > உண்மையில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் எதிரி இருக்கிறான். அவன் நாம் > விரும்பாததை நம்மைக் கொண்டே செய்ய வைக்கிறான். அவனைக் கண்டறிவதும், அவன் > உருவாகும் விதம் பற்றி ஆராய்வதுமே கவலையை விரட்டுவதற்கான வழிகள். > > அரபுக் கதை ஒன்றிருக்கிறது. அதில் ஒரு மனிதன் தன் நிழல் ஏன் கூடவே வருகிறது? > அதை எப்படியாவது விரட்டியடிக்க வேண்டும் என விரும்புகிறான். என்ன செய்தாலும் > அவனால் தன் நிழலை விரட்டவே முடியவில்லை. > > நிழலை விரட்ட இருட்டுக்குள் போய்விடுவது ஒரு வழியாக அவனுக்குத் தெரிந்தது. > ஆனால், அவனுக்கு இருட்டு என்றால் பயம். வெளிச்சத்திலும் வாழவேண்டும்; ஆனால் > நிழலும் இருக்கக் கூடாது என நினைத்தான். > > அவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. தன் நிழலை புதைத்துவிட்டால் > என்னவென்று நினைத்து, ஓர் ஆளை அழைத்து குழி தோண்ட வைத்தான். மேட்டில் நின்று > கொண்டு, > > தன் நிழல் குழியில் விழும்போது மண்ணை போட்டு மூடினான். பெரிய புதைமேடு > உருவானது. ' நல்லவேளை நிழலைப் புதைத்துவிட்டேன்…’ என சந்தோஷமாக நினைத்தபோது > புதைமேட்டின் மீது அவனது நிழல் தெரிந்தது. > > பாவம் அவன் ஏமாந்து போனான் என கதை நிறைவு பெறுகிறது. > > > நிழலைப் புதைக்க முயன்ற மனிதனை போன்றதே கவலையை ஒழிக்க முயற்சிப்பதும். > எதிர்பார்ப்புகள் யாவும் எளிதாக நிறைவேறுவதில்லை என்ற உண்மையைத்தான் கவலைகள் > புலப்படுத்துகின்றன. > > வறுமையும், நோயும், உடற்குறைபாடுகளும் ஏற்படுத்திய கவலைகளைத் தாண்டி எத்தனையோ > மனிதர்கள் அரும்பெரும் சாதனைகள் செய்திருக்கிறார்கள். > > ஒருவரது சந்தோஷம் மற்றவருக்குத் தொற்றிக் கொள்வதில்லை. ஆனால், கவலைகள் உடனே > தொற்றிக் கொண்டு விடுகின்றன. > > *வயல் இருக்கும் வரை களைகள் முளைக்கவே செய்யும். களைகளைக் கண்டறிந்து > பிடுங்கி எறிவதுதான் விவசாயி செய்யும் முதற்பணி.* > > *அற்ப கவலைகள் விஷயத்தில் அதுதான் நாம் செய்யவேண்டிய வேலையும் ஆகும்.* > > சிந்திப்போம்... > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to thatha_patty+unsubscr...@googlegroups.com. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdQNJuZn4KOsvSAnbvKKfqP6rjPZFu-UtbS9__SHe6EZQ%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdQNJuZn4KOsvSAnbvKKfqP6rjPZFu-UtbS9__SHe6EZQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopBeaMptR6P0d8_fZ-euw8A8PpMuW%3DE-FOqc2tTDbLjkg%40mail.gmail.com.