400 பேரிடம் ரூ.200 கோடி மோசடி? - கோடிகளைச் சுருட்டிய ‘ஸ்வர்ணதாரா’!

எஸ்.மகேஷ்

சென்னையைச் சேர்ந்த சுப்பையா என்பவரைத் தூண்டில் புழுவாக்கி, அவருடைய
உறவினர்கள், நண்பர்கள் என 25 பேரிடம் 1.49 கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறது
இந்தக் கும்பல்.

கலர் கலராக ரீல்விட்டு, கோடிகளைச் சுருட்டிய இரு குடும்பத்தினரைக் கூண்டோடு
கைதுசெய்திருக்கிறது போலீஸ். இவர்களிடம் பணத்தை இழந்தவர்களில் ஒருவர்
கூட்டுறவுத்துறையில் இணை பதிவாளராக இருந்தவர்!

‘அதீத வட்டி தருவதாகச் சொல்வோரை நம்பக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து
விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எப்படி ஏமாந்தீர்கள்?’ என்று புகார்தாரரான சென்னை
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இணை பதிவாளர் ராஜகோபாலிடம் கேட்டோம். “
நான் பணி ஓய்வுபெற்ற பிறகு, எனது பணப் பலன்களை எப்படி புத்திசாலித்தனமாக
முதலீடு செய்வது என்ற யோசனையில் இருந்தேன். அப்போது, அண்ணாநகர் பகுதியில்
செயல்பட்ட ‘ஸ்வர்ணதாரா குழுமம்’ என்ற நிதி நிறுவனம், கவர்ச்சிகரமான முதலீட்டுத்
திட்டங்களை அறிவித்தது. அந்த நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட
முதலீட்டாளர்கள் சந்திப்புக் கூட்டத்துக்குச் சென்றேன். அந்தக் கூட்டத்துக்கு
வந்திருந்த செட்டப் ஆட்கள், தாங்கள் முதலீடு செய்த பணத்தைவிட இரட்டிப்பு
லாபத்தைப் பெற்றதாகச் சொன்னார்கள்.

ஸ்வர்ணதாரா குழுமத்தின் சேர்மன் வெங்கடரங்க குப்தா, இயக்குநர்கள் ஹரிகரன்,
விஜயஸ்ரீகுப்தா ஆகியோரும் என்னிடம் கேன்வாஸ் செய்தார்கள். ‘எங்களின் நிறுவனம்
ஆர்.பி.ஐ அனுமதிபெற்று முதலீடுகளைப் பெறுவதால், உங்களின் பணத்துக்கு 100
சதவிகிதம் உத்தரவாதம் இருக்கிறது. எங்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால்,
ஆண்டுதோறும் ஒரு லட்ச ரூபாய் தருவதாகவும், மூன்று வருடங்களுக்குப் பிறகு
முதலீடு செய்த தொகையையும் திரும்பப் பெறலாம்’ என்றும் சொன்னார்கள். மேலும், ‘
நாங்கள் வெளிநாடுகளில் தங்கத்தில் முதலீடு செய்வதுடன், மருத்துவ குணமிக்க தேன்
இறக்குமதியிலும் ஈடுபடுகிறோம். எனவே, பணத்தைத் திருப்பித் தருவதில் எந்தப்
பிரச்னையும் வராது’ என்றனர்.

அதை நம்பி 2015-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தேன் அடுத்த மூன்று ஆண்டுகளும் தலா
ஒரு லட்சம் பணம் திருப்பித் தந்தார்கள். அதனால் எனக்கு அவர்கள்மீது நம்பிக்கை
ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எனது உறவினர்கள், நண்பர்களென மொத்தம் 61 பேரை கடந்த
2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தேன்.
சுமார் 2.39 கோடி ரூபாயை ஸ்வர்ணதாரா நிறுவனத்தில் அவர்கள் முதலீடு செய்தார்கள்.
ஆனால், சொன்னபடி பணத்தைத் திரும்பத் தராமல் அனைவரையும் மோசடி செய்துவிட்டார்கள்”
என்றார் விரிவாக.

இதேபோல சென்னையைச் சேர்ந்த சுப்பையா என்பவரைத் தூண்டில் புழுவாக்கி, அவருடைய
உறவினர்கள், நண்பர்கள் என 25 பேரிடம் 1.49 கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறது
இந்தக் கும்பல். இப்படி, குறைந்தது 400 பேரிடம் சுமார் 200 கோடி ரூபாய் வரை
மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் போலீஸார்.

இந்த வழக்கை விசாரித்த உதவி கமிஷனர் ராஜசேகரனிடம் பேசினோம். ``ராஜகோபால்,
சுப்பையா ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஸ்வர்ணதாரா நிறுவனத்தின்
சேர்மன் வெங்கடரங்க குப்தா, அவரின் மனைவி, மகள், நண்பரான ஹரிகரன், அவரின் மனைவி,
மகன்கள் என இரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கைது செய்திருக்கிறோம்.
அவர்களிடமிருந்து ரூ.4.5 லட்சம் பணம், 44 சவரன் தங்க மற்றும் வைர நகைகள்,
சொகுசு கார்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மேலும், 12
வங்கிக் கணக்குகளிலிருந்த 17 லட்ச ரூபாயை முடக்கியிருக்கிறோம். விசாரணை
தொடர்கிறது” என்றார்.

Rs 200 Crore fraud on 400 people? - 'Swarnadara' who rolled crores!

S. Mahesh

This gang has cheated 1.49 crore rupees from 25 people like his relatives
and friends by baiting Subpaiah from Chennai.

The police have arrested two families who reeled off crores of rupees with
a cage. One of the people who lost money to them was a joint registrar in
the co-operative sector!

We asked the complainant Rajagopal, a retired associate registrar from
Madipakkam, Madipakkam, Madipakkam, Chennai, 'how could you be deceived
even though the RBI has been constantly raising awareness that people who
claim to pay exorbitant interest rates should not be trusted?' “After I
retired, I was thinking about how to invest my cash benefits wisely. At
that time, a financial institution called 'Swarnadhara Group' operating in
Annanagar area announced attractive investment schemes. I went to the
investors meeting held on behalf of that company. Investors who attended
the meeting said they got double the profit they invested.

Swarnadhara Group Chairman Venkatarang Gupta, Directors Harikaran and
Vijayasree Gupta also canvassed me. As our company is RBI approved and
receives investments, your money is 100 percent guaranteed. They said that
if you invest 1 lakh rupees with us, you will get 1 lakh rupees every year
and after three years you can get back the invested amount.' He further
said, 'We invest in gold abroad and import medicinal honey. Therefore,
there will be no problem in returning the money.

Trusting that, I invested Rs.3 lakh in 2015 and they returned Rs.1 lakh
each for the next three years. So I had faith in them. After that I made a
total of 61 people who are my relatives and friends to invest in this
company from 2018 to 2022. They invested about 2.39 crore rupees in
Swarnadhara. But they cheated everyone without returning the money as they
said," he said in detail.

Similarly, this gang has cheated 1.49 crore rupees from 25 people like his
relatives and friends by baiting Subbiah from Chennai. According to the
police, at least 400 people have been defrauded to the tune of Rs 200 crore.

We spoke to Assistant Commissioner Rajasekaran who investigated the case.
``On the basis of the complaint given by Rajagopal and Subpaiah, we have
arrested seven people from two families namely Chairman Venkataranga Gupta
of Swarnadara Company, his wife, daughter, friend Harikaran, his wife and
sons. Rs 4.5 lakh cash, 44 Sawarans of gold and diamond jewellery, luxury
cars and important documents have been seized from them. Also, we have
frozen 17 lakh rupees from 12 bank accounts. "The investigation is
continuing," he said.         K Rajaram IRS 5624

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo8TW_d9uB%2Bhx9S2M00W9Xodcoj1hOfBffB1QKzeCEepw%40mail.gmail.com.

Reply via email to