An excellent version on Tamarai by Indra Priyadarshini Kindly appreciate
Thank you KR IRS 6724 7724

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <chittananda...@gmail.com>
Date: Sat, 6 Jul 2024 at 19:30
Subject: Fwd: Indira Priyathashini - Lotus
To:




*தாமரை*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

*இரண்டு நாட்களுக்கு முன் காலையில் நண்பர் கமாண்டர் குருமூர்த்தி தாமரை பூத்த
தடாகம் ஒன்றின் சித்திரம் இட்டிருந்தார். *

*தாமரை பற்றிய ஒரு பொறி. இலக்கிய உவமைகளில் தாமரை போன்று அங்கிங்கெனாதபடி
எங்கும் இருக்கும் உவமை வேறு கிடையாது. தாமரை உருவகமாக உவமையாக தமிழ் இலக்கிய
உலகில் உலவுகிறது. பல வேறு பெயர்கள் கொண்ட தாமரை போல் உள்ள வேன்று கிடையாது.
தாமரைக்கு கமலம் பங்கயம் முண்டகம் அம்புஜம் பத்மம் ராஜீவம் சரோஜம் ஜலஜம்
அம்போருகம் வாரிஜம் புண்டரீகம் இண்டை அரவிந்தம்  நளினி சதபத்ரி மலர் என்று
பல்வேறு பெயர்கள்.*

*தெய்வங்களுக்கு அமரும் பீடமாகவும் கையிலும்  பாதபத்மமாகவும் தாமரை இருக்கும்.
கஞ்ச தளம் என்றாலும் தாமரை தான். தாமரை பொதுமொழியாக வருகையில் மலரையும் தொடர்
மொழியாக தா + மரை என்றால் தாவுகின்ற மான் எனவும் பொருள் படும். *

*பல பெண் தெய்வங்களுக்கு தாமரை சார்ந்த திருநாமங்கள் உண்டு. கமலாயதாக்ஷி
என்பது திருவாரூர் அம்பாள் பெயர். அவள் குளம் கமலாலயம். கடலில் பாதி கமலாலயம்.
மன்னார்குடித் தாயார் திருநாமம் செங்கமல வல்லி நாச்சியார். இன்னும் ஸ்ரீ
முஷ்ணத்தில் அம்புஜவல்லி நாச்சியார். பெருமாளுக்கு அரவிந்த லோசனன் என்ற
திருநாமம் திருத்துலைவில்லி மங்கலம் இரட்டைத் திருப்பதியில். நிறையக்
கீர்த்தனங்கள் தோத்திரங்களில் தாமரைப் பிரயோகம் காணலாம். "வாரம் வாரம் வந்தனம்
அஸ்துத வாரிஜதள நயனா கோபாலா" பூரய மமகாமம் ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலா
தரங்கிணி. "இண்டை கொண்டு தொண்டர் ஏத்த" எங்கள் திருவள்ளூர்ப் பாசுரம்..பெரிய
திருமொழி. "பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்" பதினாலாவது பாசுரம்.
திருப்பாவை. உங்கள் புழக்கடைத் தோட்டத்து.*

* "சரோஜ தள நேத்ரி" ஸ்ரீ சியாம சாஸ்திரி அவர்களின் பிரபலமான கிருதி கம்பீரமான
சங்கராபரண ராகம். "சரஸிஜ நிலயே சரோஜ ஹஸ்தே" ஸ்ரீ ஸுக்தம்.  "போற்றி மால்
நான்முகனும் காணாத புண்டரீகம்" திருவெம்பாவை இறுதிப் பாட்டு. திருவெள்ளறைப்
பதியில் உறையும் பெருமாள் புண்டரீகாக்ஷன். தாயார் பங்கயச்செல்வி. அம்போருக
ரஞ்சனி தோடி ராக வர்ணம் இருக்கிறது. "முந்தியம்போருகத் தேமலர்ந்து தேமேவு
தண்டுழாய் மாலையுந் திருவுமொரு" என்ற வரி ஸ்ரீ மங்களேஸ்வரி அம்மை பிள்ளைத்
தமிழில் வலையில் பார்த்தேன். இப்பிரபந்தம் முதன்முதலாக 1901-ஆம் ஆண்டில்
தணிகைமணி ராவ்பஹதூர் ஸ்ரீமான். வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்களது தந்தையார்
ஸ்ரீ வ. த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் அச்சிடப் பெற்றது. இந்த அம்மை
யாராம்? மணிவாசக சுவாமி பாடிப் பரவிய திரு உத்தரகோசமங்கை திருத்தலத்தில்
நின்று அருள் பாலிக்கும் அம்மைதான். வாழ்நாளில் நாம் காண வேண்டிய திருத்தலம்
உத்தர கோச மங்கை. திருவாசகமும் பொன்னூசலும் ஒரு மாதிரி கரைந்து போவோம்.
அப்புறம்  ஜலஜ நிவாஸினி என்று அன்னமய்யா கீர்த்தனையில் பார்த்தேன். ஸ்ரீ
முண்டகக் கண்ணி அம்மை சென்னையில் கொலு வீற்று இருக்கிறாள்.*

* தாமரை உவமை உருவகக் கையாளுதலில் கம்பனும் துளஸிதாசரும் யாரையும் விஞ்சி
விட்டனர்.  "ஸ்ரீ ராமசந்த்ர க்ருபாலு பஜூமன ஹரண பவபய தாருணம் நவகஞ்ச லோசன கஞ்ச
முக கர கஞ்ச பத கஞ்சாருணம்" அன்றலர்ந்த தாமரை போன்ற கண் கரம் பாதங்கள்
முகங்களை உடையவன் ராமன். "மெய்த் திருப்பதம் மேவு' என்றபோதினும்,*
*'இந்திருத்துறந்து ஏகு' என்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்" *
*நாடு உனக்கு முடிசூட்டு விழா என்றபோதும், முடி துறந்து காட்டிற்குச் செல்
என்றபோதும் சித்திரத்தில் இருக்கும் செந்தாமரை போல் மாறாதிருந்த கணவன் முகத்தை
நினைத்தாள் சீதைப் பிராட்டி. கம்பன் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை ஒரு போலே
இருக்கும் என்பதால் அந்த உவமை. நாட்டுப்படலத்தில் தாமரை உவமை "தண்டலை மயில்கள்
ஆட தாமரை விளக்கம் தாங்க" என்ற மருத நிலப் பாடலிலும் உண்டு. *

*தாமரையின் சிறப்பு கருதி அது நம் தேசீய மலராக இருக்கிறது. எங்கள்
பூர்ணத்ரயீசன் குருவாயூரப்பன் இருவரும் கையில் தாமரை வைத்திருப்பார்கள்.
குருவாயூரப்பனுக்கு அதிகாலை தரிசனத்தின் போது மட்டும் சிறு குழந்தைக்குப்
பசிக்கும் என்று தாமரையைப் போக்குக் காட்டி மாற்றி விட்டு சிறு கதலிப் பழம்
கொடுத்து விடுவார்கள். மற்றபடி அவன் கையின் தாமரை அவன் முக கமலம் பாத கமலம்
ஆகியவற்றின் முன் தோற்று நாணித்தான் நிற்கும். எங்கள்  ஸ்ரீ பூர்ணத்ரயீசனை
தாமரை மாலையின்றி தரிசனம் செய்ய இயலாது. *

*திருப்பார்த்தன்பள்ளிப் பெருமாளுக்கு தாமரையாள் கேள்வன் என்றுதான் திருநாமம்.
குறள் சொல்கிறது சோம்பல் இல்லாத மனிதரிடம் திருமகள் சேர்வாளாம்.  "மடியிலான்
தாளுளான் தாமரையினாள்". இசையரசு  ஸ்ரீ தண்டபாணி தேசிகர் பாடுவது மாதிரி தமிழ்
இலக்கிய உலகு செந்தமிழ்த் தேன் மணக்கும் தாமரை பூத்த தடாகம். பாமழையால்
வற்றாப் பொய்கைதான். தமிழறிவது நமையறிவதாகும். *

*-- இந்திரா ப்ரியதர்ஷிணி *

******************************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoovHRJa2zDUs1YG5Dji%2BMKXHiiOi_yTnXsB0VPX02BjVQ%40mail.gmail.com.

Reply via email to