‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டம் குழந்தைப் பருவத்திலேயே முதலீடு செய்யத் தொடங்கினாலும், அடிப்படையில் இது ஓர் ஓய்வுக் காலத் திட்டமே!
குழந்தைகளின் எதிர்காலப் பணத் தேவையை நிறைவேற்ற மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய திட்டம்தான் என்.பி.எஸ் வாத்சல்யா (NPS - Vatsalya). நீண்ட கால அடிப்படை யில் குழந்தைகளின் ஓய்வுக்காலத்துக்குத் தேவையான நிதியைச் சேர்க்கவே இந்தத் திட்டம். அனைவருக்கும் என்.பி.எஸ்... அரசு ஊழியர்களுக்காக 2004-ம் ஆண்டில் என்.பி.எஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர், அனைத்து இந்தியர் களுமே என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்கால நிதியும், ஓய்வூதியமும் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். மேலும், இந்தத் திட்டத்தில் வருமான வரி சலுகையும் கிடைக்கிறது. என்.பி.எஸ் திட்டத்தில் அதிகபட்ச மாக 75% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே, என்.பி.எஸ் திட்டத்தில் சேரும் ஒருவரின் சேமிப்பானது, நீண்ட கால அடிப்படையில் அதிக வளர்ச்சி பெறு வதற்கான வாய்ப்புகள் அதிகம். செல்வமகள் திட்டத்தைவிட சிறப்பானதா ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டம்..? யார் சேரலாம்..? குழந்தைகளின் சார்பில் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக மாதம் 500 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 6,000 ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தப் பணம் என்.பி.எஸ் திட்டத்தில் வளர்ந்து கொண்டே வரும். குழந்தைக்குப் 18 வயது முடிந்து மேஜரான பிறகு ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ கணக்கு தானாகவே வழக்கமான என்.பி.எஸ் கணக்காக மாறிவிடும். அந்தக் குழந்தை படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு என்.பி.எஸ் கணக்கில் சேர்க்கும் பணம், குழந்தைப் பருவத்தில் ஏற்கெனவே முதலீடு செய்து வளர்ந்த பணம் என இரண்டும் ஒன்று சேர்ந்து நீண்ட காலத்தில் மிகப் பெரிய அளவில் பலனைத் தரும். சிறப்பு அம்சங்கள் என்ன? இந்தத் திட்டம் மூலம் குழந்தைப் பருவத்திலேயே முதலீட்டுப் பயணம் தொடங்கிவிடுவதால், நீண்ட காலத்தில் கிடைக்கக்கூடிய முதலீட்டுப் பலன்கள் கிடைக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்கு சேமிப்பின் முக்கியத்துவமும், நிதிக் கல்வி யறிவும் கிடைக்கும். என்.பி.எஸ் வாத்சல்யா திட்டத்தின் நோக்கம்... செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஆனால், ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டத்தில் ஆண், பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலீடு செய்ய முடியும். குழந்தைப் பருவத்திலேயே முதலீடு செய்யத் தொடங்கினாலும், அடிப்படையில் இதுவொரு ரிடையர்மென்ட் திட்டமே. எனவே, குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டத்தில் முதலீடு செய்வது உகந்ததாக இருக்காது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், குழந்தைகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்கு இப்போதே முதலீடு செய்யவும், நீண்ட கால நோக்கில் முதலீட்டின் மூலம் முழுப் பயனை அடையவும் இந்தத் திட்டம் நிச்சயம் உதவும். குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற விரும்புவோருக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏற்கெனவே உள்ளன என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். காத்திருப்போம்... ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டம் பற்றி இன்னும் முழுமையான விவரங்களை அரசு வெளியிடவில்லை. இந்தத் திட்டத்தில் சேருவதால், எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும், இதில் உள்ள ரிஸ்க்குகள் என்ன என்கிற மாதிரியான முழு விவரங்களையும் நன்கு புரிந்துகொண்ட பிறகே இதில் முதலீடு செய்யத் தொடங்கும் முடிவை எடுக்கலாம். அதுவரை காத்திருப்போம்! Although the 'NBS Vatsalya' scheme starts investing at an early age, it is basically a retirement scheme! NPS - Vatsalya is a new scheme brought by the central government to meet the future monetary needs of children. The plan is to add funds for children's retirement on a long-term basis. NPS to all... A National Pension Scheme called NPS was introduced in 2004 for government employees. Later, all Indians were allowed to invest in the NPS scheme. The objective of this scheme is to provide retirement fund and pension to the retirees. Also, income tax benefit is available in this scheme. A maximum of 75% is allowed to be invested in the stock market under the NPS scheme. Hence, the savings of a person who joins the NPS scheme is more likely to grow over the long term. Is 'NPS Vatsalya' project better than Selvamalam project..? Who can join..? Parents or guardians can invest in 'NBS Vatsalya' scheme on behalf of children. Minimum investment is Rs 500 per month or Rs 6,000 per year. This money will continue to grow in the NPS scheme. After the child completes 18 years of age and becomes a major, the 'NBS Vatsalya' account will automatically convert into a regular NPS account. The money added to the NBS account after the child completes his studies and joins the job, and the money already invested in childhood, both together will yield huge benefits in the long run. What are the special features? With this scheme, the investment journey starts at an early age, and the investment benefits are available over a long period of time. Through this, children will be taught the importance of saving and financial literacy. The objective of NPS Vatsalya scheme is to… Only girl children can be invested in the Selvams Savings Scheme. But in 'NPS Vatsalya' scheme, all children, boys and girls, can invest. It is basically a retirement plan, even if you start investing at an early age. Therefore, experts feel that investing in 'NBS Vatsalya' scheme for children's needs like higher education and marriage is not optimal. But this plan will definitely help you to invest now for your children's future financial security and reap the full benefits of the investment in the long run. It is also important to note that mutual fund schemes are already available for those who wish to fulfill the future needs of their children. Let's wait... The government is yet to release complete details about the 'NPS Vatsalya' scheme. By joining this scheme, you can decide to start investing after understanding the full details like how much profit you will get and what are the risks involved. Let's wait until then! K Rajaram IRS 2824 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo0adWqzP2Cq7bVz52-YxqO%2BBeziEUGFm5BfK0gj1FKng%40mail.gmail.com.
