---------- Forwarded message ---------
From: N Sekar <nseka...@yahoo.com>
Date: Fri, Oct 4, 2024, 7:09 AM
Subject: Re: Fwd: Nammalavaar by Sujatha - எல்லாம் நானே
To: <chittananda...@gmail.com>
Cc: Kerala Iyer <keralaiy...@googlegroups.com>, Rangarajan T.N.C. <
tncrangara...@yahoo.com>, Narayanaswamy Sekar <nsekar...@gmail.com>,
Mathangi K. Kumar <mathangikku...@gmail.com>, Srinivasan Sridharan <
sridhsriniva...@gmail.com>, Rama (Iyer 123 Group) <kaviran...@gmail.com>


Thanks.

Although I have learnt Gita under a Guru,  I am not that well versed in
Divyaprabhandam - just " Kelvi Gnanam".

 Sujatha's these writings create an urge that I should learn these Tamizh
treasures. If you read good writings that are on other books, they create
this urge  and induce you to learn more. Therein lies the writer's success.

N Sekar

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>

On Fri, Oct 4, 2024 at 5:08 AM, Chittanandam V R
<chittananda...@gmail.com> wrote:

*'எல்லாம் நானே' என்கிறாள் *

*சுஜாதா *
பகவத் கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  அர்ஜுனனுக்கு
தான் யார் என்று நேரடியாக விளக்கிச் சொல்லும் பிரமிப்பூட்டும் சுலோகங்கள்
உள்ளன. பகவத் கீதையை உலகின் தலை சிறந்த நூல்களில் ஒன்றாகச் சொல்வதற்கு
முக்கியக் காரணம் இந்தப் பத்தாம் அத்தியாயம். இதன் கருத்துகளை நம்மாழ்வார்
அப்படியே கிரகித்துக்கொண்டு அவற்றை ஒரு தாய் தன் பெண் என்னென்னவோ
பிதற்றுகிறாளே என்று கவலைப்படுவதாக அமைந்த பாசுரங்களாக மாற்றி கீதையின்
ஆழ்ந்த கருத்துகளை குறிப்பாக பத்தாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அத்தனை
கருத்துகளையும் எளிமையாகச் சொல்லிவிடுகிறார்.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டெனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்து  ஈசன் வந்து ஏறக்கொலோ?
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?

(கடல் ஞாலம் - கடல் சூழ்ந்த உலகம், கீண்டேன் - பிளந்தேன், கற்கின்றவே -
சொல்வதெல்லாம்.)

நீரையும் நிலத்தையும் செய்ததும் நானே என்கிறாள். அது ஆவதும் நான்; அதைக்
கொண்டதும் நான்; அதைப் பிளந்ததும் நான்; உண்டதும் நான் என்கிறாள். திருமால்
வந்து புகுந்ததாலோ என்னவோ, உலகத்தவர்களே!, என் மகள் இப்படிப் பேசுகிறாள்.

இந்தப் பாடலையும், கீதையின் பத்தாம் அத்தியாயத்தில் 32ஆம் சுலோகத்தையும்
ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஸர்காணாம் ஆதிர்அந்தஸ்ச மத்யம் சைவாஹம் அர்ஜுன
அத்யாத்ம வித்யாவித்யானாம் வாதஹ ப்ரவத்தாம் அஹம்

"அர்ஜுனா! யானே சிருஷ்டி அனைத்தையும் படைத்தவன், காத்தவன், அழித்தவன்.
அடிப்படை ஞானமும் தர்க்கமும் முடிவுகளும் யானே!"

திவ்யப்பிரபந்தத்தில் கீதோபதேசம் பற்றி நேரடியான குறிப்புகள் எதுவும்
இல்லைதான்.
ஆனால், கீதையைப் படித்திராமல் நம்மாழ்வாரால் இந்த வரிகளை
எழுதியிருக்க முடியாது.

*-- சுஜாதா*
*********************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Ze%2B9HiDDk%2BhJ4NepdrnLTLt1z3U3XYieq6ren2eLBPjuw%40mail.gmail.com.

Reply via email to