கண்ணன் வரவு கண்டு யசோதை மகிழ்தல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன்றிப்பூ*
கோலப் பணைக்கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும்*
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்துகாணீர்*
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!நானோ மற்றாருமில்லை. (1)
கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா! பாவியேன் வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின்மனம் வலியாள் ஒருபெண் இல்லை என்குட்டனே முத்தம்தா. (2)
காடுகளூடு போய்க்கன்றுகள் மேய்த்து மறியோடி* கார்க்கோடல்பூச்
சூடி வருகின்ற தாமோதரா! கற்றுத்தூளிகாண் உன்னுடம்பு*
பேடை மயிற்சாயல் பின்னைமணாளா! நீராட்டமைத்து வைத்தேன்*
ஆடிஅமுதுசெய் அப்பனுமுண்டிலன் உன்னோடு உடனேயுண்பான். (3)
கடியார் பொழிலணி வேங்கடவா! கரும்போரேறே!* நீயுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*
கடிய வெங்கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட்டச் செங்கமல
அடியும் வெதும்பி* உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீஎம்பிரான். (4)
பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போரேறே!*
எஞ்சிற்றாயர் சிங்கமே! சீதைமணாளா! சிறுக்குட்டச் செங்கண்மாலே!*
சிற்றாடையும் சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல் வைத்துப்போய்*
கற்றாயரோடு நீகன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும். (5)
அஞ்சுடராழி உன்கையகத் தேந்தும் அழகா! நீபொய்கைபுக்கு*
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்திருந்தேன்*
என்செய்ய என்னைவயிறு மறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை*
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.(6)
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற்கடல்வண்ணா!* உன்மேல்
கன்றினுருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரர் தம்மை*
சென்றுபிடித்துச் சிறுக்கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும்*
என்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமாவார்களே. (7)
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா! கோவலர் இந்திரற்கு*
கட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்*
ஊட்ட முதலிலேன் உன்தன்னைக் கொண்டு ஒருபோதும் எனக்கரிது*
வாட்ட மிலாப்புகழ் வாசுதேவா! உன்னை அஞ்சுவன் இன்றுதொட்டும். (8)
திண்ணார் வெண்சங்குடையாய்! திருநாள் திருவோணமின் றேழுநாள்* முன்
பண்ணோர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்*
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்*
கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம் செய்திங்கேயிரு.(9) 3-
வது திருமொழி –
பாசுர விளக்கம்
இப்பாசுரத்தின் கண் ஸ்வாமி ஸ்ரீ பெரியாழ்வார்,
பகைவர்களின் திறத்தில் திண்மைபொருந்தியதான ஸ்ரீபாஞ்சசன்னியத்தை திருக்கைகளில்
சதா தரித்துக் கொண்டிருப்பவனே, ஸ்ரீக்ருஷ்ணா, நீ திருஅவதாரம் செய்தருளிய
திருவோண நக்ஷத்ரம் இன்றிலிருந்து ஏழாவது திருநாளாகும், நான் முதன் முதலில்
அழகிய பண்களோடு கூடிய பேச்சுத் திறத்தினை உடைய பெண்களை அழைத்து உனக்காக
அங்குரார்ப்பணம் செய்து உனக்குப் பல்லாண்டும் பாடிடச் செய்தேன், உனக்கு
திருக்கல்யாணம் செய்வதற்கு கறியும்,அரிசியும் கலங்களில் சேமித்து வைத்தேன், நீ
நாளை முதல் கன்றுகள் மேய்த்து வருவதற்காக காட்டிற்குச் செல்லாமல் வீட்டிலேயே
அழகாக உனது திருமேனிக்கு ஏற்ற வண்ணம் அலங்காலங்கள் செய்து கொண்டு இருப்பாயாக,
என்று யசோதை கண்ணனிடம் கூறுவதாக அருளிச் செய்கிறார்,9
K Rajaram IRS 4425
---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Fri, 4 Apr 2025 at 01:40
Subject: Fwd: School going boy!
To: Rajaram Krishnamurthy <[email protected]>
*From:* Srinivasan Sridharan <[email protected]>
*Date:* April 3, 2025
*Subject:* *School going boy!*
அந்தக்குழந்தை படிக்கும் பள்ளி வெகுதொலைவில் மந்தைவெளியில் இருந்தது!
எப்படியோ அந்தத்தாய் முதல்நாள் தன்மகனை பள்ளிக்கு அனுப்பினாள் !
ஆனால்வீட்டிற்கு திரும்பிவந்த தாய்க்கு மகனைப்பிரிந்திருப்பது முடியவில்லை!
ஆதலால் அந்தத்தாய் ஒருமுடிவிற்கு வந்தாள்! ஆனால் ருசிகண்ட பூனையைப்போல் அந்த
மகன் காலையிலேயே பள்ளிக்குச்செல்லத் தயாராய் நின்றான்!
இப்போது தாய் தன் மகனைப் பள்ளிக்குச்செல்லாமல் வீட்டிலேயே லூட்டி
அடித்துக்கொண்டு இரு என்கிறாள்! புதுக்கதை அல்ல ! பழம்பெரும் கதை! இதோ!
திண்ணார் வெண்சங்குடையாய் !திருநாள் திருஓணம் இன்றேழுநாள்!
பண்ணேர் மொழியாரைக்கூவி
முளையட்டிப்பல்லாண்டு கூறுவித்தேன்!
கண்ணாலம் செய்யக் கறியும்
கலத்தரிசியும் ஆக்கிவைத்தேன்!
கண்ணா! நீ! நாளைதொட்டுக்கன்றின் பின் போகேல்! கோலம் செய்து இங்கே இரு!
( பெரியாழ்வார் திருமொழி)
Sridharan
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo%3DHu1TVwZ3SeBhdT0XPf8CB3FH0s8NPkTnp4T_PUayZw%40mail.gmail.com.