கௌடம்.. இன்றைய வங்கதேசம்.. அந்நாட்டு மன்னன்.. அயோத்தியில் இருந்த அரங்கனைப் பற்றியும்.. பிரணவாகார விமானம் பற்றியும் அறிந்தவன்..
மிகச் சிறந்த பக்திமான்.. தான் என்ற ஓர் கர்வம் அவனது பக்தியைக் காட்டிலும் ஒரு துளி அவனிடம் அதிகம்.. வடக்கில் இருந்த விக்கிரகமும்.. விமானமும்.. தெற்கிலே போயிற்றே.. அங்கே அவைகளுக்கான பூஜைகள்.. பிரசாதங்கள்.. சரிவர கிடைக்கின்றனவா.. அந்தப் பெருமானையும் விமானத்தையும் நான் ஸேவிக்க வேண்டும்.. அவனுக்கான பொன்னையும் பொருளையும் நிறைய கொடுக்க வேண்டும்.. முடிந்தால் அவனை மீண்டும் வடக்கே வரவழைக்க வேண்டும்.. இந்த எண்ணத்துடன் அவன் வங்கதேசம் கிளம்பி ரங்கதேசம் வந்தான்.. தான் மட்டும் வரவில்லை.. தனது பரிவாரங்களுடன்.. யானைகள்.. குதிரைகள்.. நிறைய நிறைய வண்டிகள்.. அவை நிரம்பி வழியும்படி பொன்னும் பொருளும்.. இவனது வருகைக்குப் பின் அரங்கனின் தேசமே பிதுங்கி வழிந்தது.. தெருக்களின் முகங்கள் சற்று சுருங்கிப் போயின.. மன்னனைச் சுற்றி திருவரங்க மக்கள் சூழ்ந்து.. தாங்கள் யாரோ? இத்தனைப் பரிவாரங்களுடன் பொன்னும் மணியும்.. எதற்காக இங்கே விஜயம்? என்ன மக்களே.. வேடிக்கையான கேள்வி.. நான் ஒரு மன்னன் என்பதை நானேதான் சொல்லணுமா? என்னை வரவேற்க இந்தச் சோழ தேசத்தில் மன்னன் இல்லையா? ஒருவேளை தெற்குக்கு வரவேற்கவா தெரியாதா? கௌட நாட்டு மன்னன் வந்திருப்பதாய் உங்கள் மன்னனிடம் சொல்லுங்கள்.. அப்படியா.. மன்னனே.. தங்களின் அரங்க விஜயம் அரசாங்கச் சம்பந்தப்பட்டதா? இல்லை.. இல்லை.. அரங்கனை ஸேவிக்கவே இங்கே நான் வந்தேன்.. வேறு இங்கே எனக்கென்ன வேலை? அதனால்தான் தங்கள் வருகையை எங்கள் மன்னன் அறியவில்லை போலும்.. வந்தாரை வரவேற்பதும் அவரை வாழ வைப்பதுமே தெற்கினுடைய தர்மமாகும்.. ஓஹோ.. அப்படியா.. தெற்கு வாழ வைத்துத்தான் வடக்கு பிழைக்கிறதோ.. இதோ.. என்னுடன் இங்கே பயணித்து வந்துள்ளார்களே.. எனது பரிவாரங்கள்.. அவர்களின் அலங்காரம்.. உம்மிடம் இருக்கிறதா? உண்மைதான்.. எம்மிடம் அலங்காரமும் இல்லை.. அகங்காரமும் இல்லை.. தாங்கள் வந்த விஷயம்.. அரங்கனை ஸேவிப்பதுதானே.. ஸேவித்து நகருங்கள்.. ஆனால் ஒன்று.. என்ன ஆனால் ஒன்று.. எதற்கு இந்த இழுவை? மன்னனே.. தாங்கள் மட்டுமே உள்ளே செல்லலாம்.. இந்த பொன்னோ.. மணியோ.. உமது வீண் அகங்காரமோ.. உள்ளே அனுமதி கிடையாது.. சோழ தேசத்து மக்களே.. விரும்பி வரும் செல்வத்தை உதறித் தள்ளுகிறீர்களே.. இது நல்லதல்ல.. இவை எம்பெருமானைச் சேர வேண்டும்.. மன்னனே.. அதற்கு முதலில் அரங்கன் அனுமதிக்க வேண்டும்.. என்ன உளறுகிறீர்கள்? அரங்கன் நேரில் வந்து அனுமதிப்பானா என்ன? நேரில் வர வேண்டியதில்லை.. அவனது விருப்பத்தை அவனே தெரிவிப்பான்.. எப்படி.. எப்படி.. எப்படி.. எத்தனை அவமானம் எனக்கு.. கோபம் வேண்டாம் மன்னனே.. இதோ அவனுக்குப் பிடித்தமான துளசியும்.. தாமரையும்.. இங்கே மாலைகளாக.. ஒரு சிறு குழந்தையை.. அதில் ஒன்றை எடுக்கச் சொல்வோம்.. தாமரையை எடுத்தால் அவைகளை அவன் ஏற்கிறான்.. துளசியை எடுத்தாலோ தாங்கள் மட்டுமே செல்லலாம்.. இது.. இது.. இது என்ன குழந்தைத்தனமான விளையாட்டு.. அரங்கன் உங்களுக்கு விளையாட்டுப் பொருளா என்ன? இத்தனைச் செல்வம்.. உதறித் தள்ளுவது வேதனையே.. அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.. இத்தனைச் செல்வங்களையும் உதறித் தள்ள நாங்கள் முட்டாள்கள் அல்ல.. ஆனால் அரங்கன் அனுமதி கிடைக்காமல் எதுவும் உள்நுழைய முடியாது.. அது மட்டுமல்ல மன்னனே.. அடிக்கடி பெருஞ்செல்வம் என ஏதோ சொல்கிறீரே.. உமக்குத்தான் அவைகள் பெருஞ் செல்வங்களாகும்.. அரங்கனைப் பொறுத்தவரை அவன் படைப்புகளில் ஒன்று.. எங்களுக்கான பெருஞ் செல்வம் எது தெரியுமா? அந்த அரங்கன் மட்டுமே.. இனி இவர்களிடம் பேச முடியாது.. என்ன நடக்கிறது பார்ப்போம்.. சம்மதித்தான் வங்கதேச மன்னன்.. குழந்தை எடுத்தது துளசி மலரை.. அவன் கொண்டுவந்த அனைத்தும் அரங்கனால் புறக்கணிக்கப்பட்டன.. சோழ தேசத்து மக்களே.. இன்னொரு முறை குழந்தையை மலரை எடுக்கச் சொல்லலாமே.. மன்னனே.. அதற்காக நீ இன்னும் ஒரு வருட காலம் இங்கே காத்திருக்க வேண்டும்.. அடிக்கடி அரங்கனை அழைக்க இங்கே அனுமதி இல்லை.. காத்திருந்தான் மன்னன்.. அவனுக்குள் இருந்த அகங்காரமும் மெல்ல மெல்ல அவனிடமிருந்து விலகியது.. கொண்டு வந்ததை அவனால் திருப்பி எடுத்தச் செல்ல துளியும் மனமில்லை.. அவன் சாதாரணமானவன் அல்லவே.. மன்னனாயிற்றே.. அவசர அலுவல்கள் அவனைத் திரும்ப அழைக்க.. அங்கிருந்து நகர முடிவெடுத்தான் அவன்.. அவனுடன் வந்த பட்டர்களைத் தன்னிடம் அழைத்தான்.. இந்தப் பொருட்களுக்குக் காவலாய் இங்கேயே இருந்து.. அரங்கனின் அனுமதி பெற்று.. அவைகளைச் சேர்த்து.. பின் அங்கே வாருங்கள்.. ஆணையிட்டு அவன் நகர.. அந்த வாயிலின் படியிலே.. படியோடு படியாக.. காத்திருந்தனர் பட்டர்கள்.. சும்மாதானே இருக்கிறோம்.. அரங்கனின் கோயிலில் கைங்கர்யம் செய்தபடி.. கோயிலையும்.. கொண்டு வந்த பொருட்களையும் இரவிலே காத்திருந்தபடி.. நாட்களைக் கழித்தனர்.. அவர்களது பக்தி.. அரங்க நகர் மக்களை மட்டுமல்ல.. அரங்கனையும் மகிழ்ச்சிப்படுத்த.. தாமரையைத் தேர்ந்தெடுத்து.. அனுமதி தந்தான் அரங்கன்.. அரங்கனைக் கண்டனர்.. பிரிய மனம் விரும்பவில்லை.. அங்கேயே தங்கி அரங்க சேவையில் தம் நாட்களைக் கழித்தனர் அவர்கள்.. தாம் மட்டுமல்ல.. தமது வம்சாவளியே.. அரங்கனின் சேவையில்.. தங்களை ஆட்படுத்திக் கொள்ளும் என உறுதியோடு இருந்தனர்.. வடக்கிலிருந்து வந்ததால் ஆர்யபட்டர்கள் என்றும்.. அவர்கள் படியாய் கிடந்த இடம் ஆர்யபடாள் வாயில் என்றும்.. இன்றும் அழைக்கப்படுகிறது.. அது மட்டுமல்ல.. அந்த வாயிலை நம்பெருமாள் கடக்கும் சமயங்களில்.. வங்கதேச மன்னனுக்கு அருளப்பாடு சாதிப்பதும் பின்னர் வழக்கமாயிற்று.. எல்லாம்.. எல்லாம்.. அரங்கனின் ஏற்பாடே.. -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdscKDg0%2Bznjm5e4Q8T2ACnSSRm47bVmATcd9CvUTs5vJg%40mail.gmail.com.
