WELCOME ALWAYS nICE WRITINGS KR

On Fri, 22 May 2026 at 08:54, indirapriyadarsini m <
[email protected]> wrote:

> நன்றி சார்
>
> On Fri, 22 May 2026, 08:42 Rajaram Krishnamurthy, <[email protected]>
> wrote:
>
>>
>>
>> “கற்றலில் கேட்டலே நன்று”, “கற்றிலனாயிலும் கேட்க.” - இவை சான்றோர் வாக்கு.
>> முன்னர், ஏடுகள் அரிதாகவே கிடைப்பனவாதலாலும், முறையான பாடசாலைகளும்
>> அரியனவாகவே இருந்தன என்பதாலும், வீடுகளிலே அமர்ந்து வாசித்து, மகிழுவதும்
>> அரியதாகவே இருந்தது. இந்த நிலையில் பொது மன்றத்தில் பலர் கூடியிருக்க,
>> ஒருவர், ஒரு நூலையோ, பாடத்தையோ உரக்கப் படித்து அதற்குப் பொருளும்
>> விளக்கமும் சொல்லுதல் என்பது அன்றைய நிலையாக இருந்தது ; அதுவே கல்வி
>> முறையாகவும் இருந்தது. எனவே, கேள்வி அல்லது செவிவழிச் செல்வம், அன்று
>> பெரிதும் பாராட்டத் தகுந்ததாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. இந்தச்
>> சூழ்நிலையில் தான் விளக்குதல் என்பது உரைத்தல் என்பதாகவும் இருந்தது. ஒரு
>> நூலையோ, பாடத்தையோ, ஒரு குழு அல்லது கூட்டத்தின் முன்னால் உரைப்பது என்பது
>> அப்படியே அந்த நூலை வரிவரியாக வாசிப்பது அல்லது ஒப்பிப்பது என்பதாகாது. மாறாக,
>> அதனை விளக்குவது, உடனிருப்போரின் ஐயங்களை நீக்குவது, அவர்களுடைய
>> வினாக்களுக்கு விடைகள் தருவது, கேட்போரின் கருத்தை ஈர்ப்பது என்பதாக அது
>> இருந்தது. இது, இன்றைய நடைமுறையில், பாடம் சொல்லுவது, பாடம் கேட்பது
>> உள்ளிட்ட கல்வி முறை (Pedagogy) ஆகும். உரையின் இத்தகைய பண்பு போன்றதுதான், 
>> திறனாய்வின்
>> அடிப்படைப் பண்பு ஆகும். திறனாய்வில் பல புதிய கொள்கைகள் பெருகிவிட்டபோதும்,
>> அது கல்விசார்ந்த ஒரு முறையியலாக மேலை நாட்டவர் பலரால் இன்றும் கருதப்பட்டு
>> வருகிறது.
>>
>> 1.2.1 இறையனார் அகப்பொருளுரை தரும் விளக்கம்
>>
>>      அறுபது நூற்பாக்கள் கொண்ட இறையனார் அகப்பொருள் அல்லது இறையனார் களவியல்
>> என்று வழங்கப்பெறும் நூலுக்கு உரைகள் சில எழுதப்பட்டன ; ஓதப்பட்டன.
>> அவற்றுள் சிறந்த ஒன்றை (அதாவது இன்று வழங்குகின்ற உரையை) உருத்திர சன்மன்
>> என்பவன் தேர்ந்தெடுத்தான் என்று அந்த உரை கூறுகிறது. இந்த உரைதான், முதன்முதலாக
>> முச்சங்கங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. அந்த உரை கூறும் சில செய்திகள்
>> இங்கே நமக்கு ஏற்புடையனவாக இருக்கும். மூலநூல் எதுவாயினும் - அது இறையனாரின்
>> அகப்பொருள் நூலாயினும் - அதற்கு     உரை என்பது இன்றியமையாதது. உரை சொல்லும்
>> போதுதான், மூலநூல் சரியான விளக்கம் பெறுகிறது. இவ்வழி, திறனாய்வு எவ்வளவு
>> அவசியமானது என்பது தெரியவரும். ஒரு நூலுக்குப் பல உரைகள் எழக்கூடும். ஆயின்
>> எல்லாம் மிகச் சரியான விளக்கங்களைத் தரும் என்பதில்லை. அவையும் மதிப்பீடு
>> செய்வதற்குரியவையே. இந்த அகப்பொருளுக்குச் செய்யப்பட்ட உரை, புலவர்கள், 
>> சான்றோர்கள்
>> பலர் இருக்கும் அவையில் உரைக்கப்பட்ட உரையாகும். மேலும், இது தொடர்ந்து பல
>> தலைமுறைகளாக வரிசையாகச் சொல்லப்பட்டு வந்தது. ‘மதுரைக்கணக்காயனார் மகனார்
>> நக்கீரனார், தம்மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார் ; அவர்
>> தேனூர்கிழார்க்கு உரைத்தார் ; அவர், படியங்கொற்றனார்க்கு உரைத்தார்...’
>> என்று இப்படியே வரிசைப்படுத்திக் கூறிச் செல்லுகிறது, உரை. இதன்மூலம்
>> உரை     என்பது     தொடர்ந்து பல தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் படியாக, 
>> போற்றும்
>> படியாக இருக்க வேண்டும் என்ற கருத்துப் புலப்படுகிறது. திறனாய்வு, தலைமுறை
>> இடைவெளிகளை இட்டு நிரப்புவது ; ஒரு செய்தியைப் பல தலைமுறைகளுக்கு கொண்டு
>> செல்வது. {TAMIL VIRTUAL ACADEMY}
>>
>>     இறையனார் அகப்பொருளுரை பல வகைகளில் சிறப்புடையது. பழைய மரபுகளைக் கொண்டு
>> வந்து ஒப்பவைத்து சொல்லுதல், புதிய செய்திகளைச் சொல்லுதல், பிறருடைய
>> கருத்துகளைச் சொல்லி அவற்றை, ஏற்புடையனவெனின் ஏற்றுக் கொள்ளுதல், அல்லவெனில்
>> மறுத்தல், வினாக்களை எழுப்புதல், அவற்றிற்கு விடைகள் சொல்லுதல், நூற்பாக்கள்
>> சார்ந்த பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு வந்து சொல்லுதல் என்று பல பண்புகளை
>> இதிலே காணலாம். இவையெல்லாம் திறனாய்வு நெறிகள் உகந்தவை. தமிழ் உரைமரபு, இவ்வாறு
>> திறனாய்வின் வரலாற்றோடு இணைந்திருக்கிறது.
>>
>>                 Pazhamozhi nanuru  urai:     அறிதலைக் காட்டினும், அவற்றைத்
>> தக்க ஆசிரியர் மாரிடம் முறையோடு பாடங்கேட்டு அறிந்து கொள்ளுதலே
>> நன்மையானதாகும். -உணற்கினிய இன்னி பிறிதுழி இல்லென்னும் கிணற்றகத்துத்
>> தேரைபோல் ஆகார்--கணக்கினை முற்றப் பகலும் முனியா தினிதோதிக் கற்றலின் கேட்டலே
>> நன்று. தானே கற்று வரும்போது எழும் ஐ  யங்கள் தீர்வின்றி போகும்; ஆகவே
>> பொருள் அறிந்து கற்றுப் பயனடைய வேண்டுமானால், ஆசிரியர் ஒருவனை அண்டிக்
>> கேட்டுத் தெளிவதே சிறப்பு. கற்றலின் கேட்டலே நன்று’ என்பது பழமொழி.
>> செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பதும் இதுவே. 143 144. முட்டாள்
>> கற்றும் பயனில்லை
>>
>>          மலைச்சாரல்களிலே, பாறைகளின் மேல் வீழ்கின்ற அருவி கள் பலவாக
>> விளங்கும் நல்லநாட்டையுடையவனே சொல்லப் போகும் சொற்களைக் கவனத்திலே கொண்டு, 
>> துடியிலே
>> பண் உண்டாக்கலாம். அதுபோல, நல்ல அறிவு இயல்பாக இல்லாத வர்களைக் கல்வி
>> போதிப்பதால் அறிவுடையவராக நிலை பெறுத்தவே முடியாது. ஆகையினாலே, நூல்களைக்
>> கற்பதனால் வரும் அறிவு மட்டுமே உலகத்தில் முற்றிலும் செல்லுபடியாவதில்லை என்று
>> அறிவாயாக
>>
>>     நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே சொற்குறி கொண்டு துடிபண்
>> உறுத்துவபோல் வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட! கற்றறிவு போகா கடை. - 
>> தட்டுவார்
>> இல்வழித்துடியினின்றும் பண் எழுவதில்லை. அதுபோல, அறிவுறுத்துவார் இல்லாத
>> போது கடையரின் அறிவும் செயற்படாது. அவர் கற்றும் பயனில்லை. அவர்க்குக்
>> கற்பிப்பது வீண் என்பது கருத்து கற்றறிவு போகா கடை” என்பது பழமொழி. - 144
>> 145 கல்வியை நாளும் கற்க தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச்சென்று சொல்லும்
>> பொழுதிலெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம்.அதனால், சோர்வு அடையவே
>> கூடாது.
>>
>> K RAJARAM IRS 22526
>>
>> ---------- Forwarded message ---------
>> From: Chittanandam V R <[email protected]>
>> Date: Thu, 21 May 2026 at 19:53
>> Subject: Fwd: Indira Priyadarshini - Sravanam
>> To:
>>
>>
>>
>>
>> *ஸ்ரவணம்*
>>
>> *இந்திரா ப்ரியதர்ஷிணி *
>>
>>
>> ஸ்ரவணம். இதன் சரியான தமிழ் வடிவம் கேள்வி என்பதாகும். இந்தக் கேள்வி வினா
>> அல்ல. கேட்கும் செவித் திறன். கேட்பது எப்படி திறனாகும்? கேள்வியின் போது வாயை
>> மூடும் ஒரு தன்மை வேண்டி வருதலாலும்,  கேட்பதை கூர்ந்து கவனிக்க வேண்டி
>> இருப்பதாலும் அது திறம்.
>>
>> இதை எழுதுகையில் 'ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறம்' என்றும் ஸ்ரீ குலசேகர
>> ஆழ்வார் சாதிப்பதும் நினைவுக்கு வருகிறது. ஆனேறேழ் வென்று ஏறு தழுவி
>> நப்பின்னைப் பிராட்டியைக் கண்ணன் மணந்தான்.  இறைவனுக்கு அடிமையாக இருத்தல்
>> திறம். அடிமை வாழ்வு திறம். இறையிடம் மட்டும்.  சப்த நாடியும் ஒடுங்கி
>> ஐம்புலனும் அடங்கி அவனன்றி சரணல்லால் சரணில்லை என்று இருத்தல் பெரிய
>> திறம்தான். மீளா அடிமை உனக்கே ஆளாய் என்பது தம்பிரான் தோழர் வாக்கு.
>>
>> ஏனென்றால் 'எனது, யானும்' அருணகிரிப் பெருமான் காட்டுவது மாதிரி வேறாகி
>> 'எவரும், யாதும்' யானாகும் இதய பாவானாதீதம் வந்தாலன்றி இதெல்லாம்
>> சாத்தியமில்லை. பாழும் "நான் மற்றும் எனது" நம்மோடு கூடக் கூட "மண்டை உள்ள
>> மட்டும் சளி உண்டு" என வந்து கொண்டே இருக்கும். இதைச் சுருட்டி வைக்க
>> வேண்டும்.
>>
>> கேள்வி என வள்ளுவம் அதிகாரம் வைத்திருக்கிறது.'செல்வத்துட் செல்வஞ்
>> செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந்      தலை.'  செல்வத்தில் தலையாய
>> செல்வம் கேட்டல். இந்தக் கேட்டல் ஒருவரின் கருத்து, மனக்குமுறல், நம்மைப்
>> பற்றிய பின்னூட்டம், பரிந்துரை, ஆலோசனை, இடித்துரை எனப் பலவகைப்படும்.
>> கேட்கும் போது குறுக்கிடீன்றிக் கேட்க வேண்டும். திறந்த மனதோடு கேட்க
>> வேண்டும். யாரிடம் இருந்தும் கேட்கக் காது வேண்டும். நம்மின் வலியாரைக்
>> கேட்பது தவிர்க்க இயலாது. நம்மின் மெலியாரைக் கேட்டல் மிக மிக அவசியம்.  இது
>> அஹங்கராம் மேலிட்டால் இயலாது. வாய் புறப்பட்டு விடும்.
>>
>> அதுவும் அதிகாரத்தில் இருப்பவர் காதுகளை நன்கு திறந்து வைத்து நாலாப்பக்கம்
>> இருந்து கேட்க நாளங்கள் வைத்திருக்க வேண்டும். தலைமை தனிமை மாயை. கேட்க
>> விரும்புவதே பேசப்படும். 'இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும்
>> கெடும்'. இன்று பல பெருங் குழுமங்களில் மிகப் பெரிய அவலம் இந்தக் கேள்வி இன்மை
>> தான். பல வியூகங்கள் பொய்க்க கேள்வி மற்றும் நிதர்சன அறிவின்மை தான் காரணம்.
>> எப்போதும் பலர் குழுக்களைக் கூட்டி அதில் தலைமை தாமே பேச, அதற்கு நாலு பேர் கை
>> தட்டி துதி பாட மிக மோசமான நேர விரயம்.
>>
>> தற்கொலை முயற்சி செய்வார் கூட யாரேனும் இறுதி நொடியில் அவர்கள் மனம் பேசுவதை
>> இடை மறிக்காமல் புத்தி சொல்லாமல் கேட்டால் மாறி விடுவார்களாம். சிறு வயதில்
>> குழந்தைகள் நிறையக் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஈகோ குறைவு. நமக்கு வாய்,
>> சாப்பிட, பேச அறிவுரை, சொல்ல, வயதாகும் போது ஏகத்துக்கு நீண்டு விடுகிறது.
>> இன்றைய அவசர உலகில் கேள்வி பெரும் திறம். கேட்டல், சிந்தித்தல்,
>> தெளிதல், நிட்டைகூடல் என்ற ஞானத்தின் படிநிலைகளில் முதலாவதாக இருப்பது
>> ஸ்ரவணம்.
>>
>> இதனை, கேட்டல் ஞானம் என்றே சிவஞான சித்தியார் குறிப்பிடும்  கேள்வியில்
>> ஞானம் அபாரம். குருகுலக் கல்வி ஸ்ரவணம். மனனம். என்ன விந்தை என்றால் தோல்வி
>> ஆய்வு குறை தீர்க்கும் கூட்டங்களில் கூட பெரு நிறுவனத் தலைமைகள் மருந்துக்குக்
>> கூடக் செவி திறந்து கேட்பதில்லை. முழு நேரமும் அவர்களே பேசி விட்டு
>> சம்பிரதாயத்திற்காக  மனித வள? மகநீயர்கள் "யாரேனும் ஏதேனும் இப்போது சொல்ல
>> விழைகிறீர்களா" என்று கேட்க இரண்டு துதியுடன் கூட்டம் முடிகிறது. ஆர்வக்
>> கோளாறில் இளந்துருக்கியர் வாய் திறக்க முற்பட்டால் மனித வளம் "நேர அவகாசம்
>> முற்றியதால் பின்னால் தனியாகத் தொடர்பு கொள்ளலாம்" என்று சங்கூதி விடுவார்கள்.
>> தலைமை,  மனித வளம் வேறு பசையுள்ள பாட்டைக்குப் போகும். திறமுள்ள இளந்துருக்கி
>> புதிய பசுந்தரை நோக்கிப் பாயும். நல்ல அடித்தளம் உள்ள நிறுவனத்திற்கும்
>> இங்ஙனம் கேளாமையால் சங்கூதப்படும். என்ன ஊதிய பின் தான் தெரிய வரும்.
>>
>> நம் தனி மனித வாழ்விலும் தந்தை தாய் மனைவி கணவன் தோழர் குழந்தைகள் எல்லார்
>> பேசுவதையும் கேட்க நாம் செலவிடும் தருணங்கள் நிச்சயம் வாழ்வில் உணர்வு
>> சேர்ப்பவை. வீட்டில் இறை நாமம் எப்போதும் ஒலித்துக் கேட்க நல்ல அதிர்வலைகள்
>> உண்டாகும். எல்லாம் வல்ல இராமபிரானும் சொல்லின் செல்வனும் எளியோர் சொல் கேட்க
>> நாம் எம்மாத்திரம்?  ஸ்ரவணம் மதுரம். மதுராதிபதே அகிலம் மதுரம். நாள் இனியது.
>>
>> *இந்திரா ப்ரியதர்ஷிணி *
>>
>> ************************************************************
>>
>> *சித்தானந்தம் *
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "societyforservingseniors" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to [email protected].
>> To view this discussion, visit
>> https://groups.google.com/d/msgid/society4servingseniors/CAL5XZor%3Dad1PDat1ga%2B_V7LvmY%2BMR7-Z8NtmdCWQ0NynHwC9mw%40mail.gmail.com
>> <https://groups.google.com/d/msgid/society4servingseniors/CAL5XZor%3Dad1PDat1ga%2B_V7LvmY%2BMR7-Z8NtmdCWQ0NynHwC9mw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
>> .
>>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooX6Lzv1wV8EhfTQnrzGvqdLLCWxzh7jj4cWz%3DrhSVNNg%40mail.gmail.com.

Reply via email to