🙏🙏🙏

On Mon, 25 May 2026 at 17:11, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> #சிம்மாசனம்
>
> காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும்
> நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை
> தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
>
> சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார்.
> மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து
> கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.
>
> "கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம்
> கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.
>
> எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்...
> தருகிறேன்" சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப்
> பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.
>
> ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன்
> ஏற்பவர்கள். கோபமில்லாதவர்கள். எதிரே இருப்பவன் அரசனோ, அசுரனோ, அறிவிலியோ,
> ஆராய்ந்து அறிந்த பண்டிதனோ யாராயினும் தரக்குறைவாகப் பேசமாட்டார்கள்.
>
> எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை. ஞானியின் கைகள் எப்போதும்
> பிறருக்காகத்தான் தானம் கேட்கும். ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.
>
> ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது.
> பல செல்வந்தர்களுக்கு இந்த எளிமை புரியாத விஷயமாக இருக்கிறது.
>
> சற்று உயரமாக மேடை போட்டு... உலகமே தன் கீழ் என்கிற மமதை வந்துவிடுகிறது.
> ஆட்சியாளர் பலருக்கு இதுவே வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.
>
> ஆட்சியில் அமர்வது என்பது இடையறாது தந்திரம், கணக்கில்லாத துரோகங்கள், கலவரம்
> ஊட்டும் வன்முறைகளால் நிகழ்வது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு
> இருந்தால்கூட அவனுக்கு நல்ல தூக்கம் என்பதில்லை. மூன்றையும் கொண்டவனுக்கு
> எவ்விதம் தூக்கம் வரும்.
>
> ஆழ்ந்து தூங்காதவனிடம் அமைதி எப்படி குடிகொண்டு இருக்கும். அமைதியில்லாத
> எவனும் பிறரை எளிதில் அவமதிப்பான். ஆட்சியாளர்கள் சகலரையும் அவமானப்படுத்த
> இந்த அமைதியின்மையே காரணம்.
>
> மறுநாள் விடிந்தது. காசி தேசத்துச் சான்றோர்கள் அவையில் கூடினார்கள்.
> பாட்டுப் பாடுகிற வித்வான்களும், ஆடல் மகளிரும், அரபியில் கவிதை
> சொல்கிறவர்களும், அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும்
> ஒன்றுகூடினார்கள்.
>
> "எங்கே அந்த மதுரைக் கிழவர்...?" நவாப் விசாரித்தார்.
>
> "அவர் அரபி படிக்க போயிருக்கிறார்." யாரோ சொல்ல, சபை சிரித்தது.
>
> "அப்படியா... ஆயுஸுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று
> சொல்லுங்கள்..." மறுபடி சபை சிரித்தது.
>
> "அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க
> வேண்டும்." யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.
>
> "அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே...
> வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."
>
> "இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில் நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட
> முடியும்.." ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.
>
> "சில சவுக்கடிகள்..." ஒரு உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். மறுபடியும் அந்த
> நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.
>
> "ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."
>
> "வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக்
> கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார். உம்முடைய
> அழுக்குத் துணிகளைச் சுமப்பார். அதுவரை பொறுத்திருங்கள்.
>
> நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார்
> என்கிறீர்களா..."
>
> "ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.
>
> வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத்
> திரும்பினார்கள். பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு
> முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.
>
> குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன்
> பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண்
> சிங்கம் போல் காட்சியளித்தார்.
>
> அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று வயிறு வரை
> நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான
> பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல்
> காட்டின.
>
> அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும்
> வந்தன. நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக்
> கொண்டு பதட்டத்துடன் நின்றான்.
>
> "என்ன இது..." கத்தினான்.
>
> "நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்."
>
> "இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."
>
> "இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என்
> சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம்.
> பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர்
> நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா..."
>
> காலியான ஒரு ஆசனத்தில் உட்காரும் பொருட்டு அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு
> அருகே நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்.
>
> ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. சிறுநீர் விட்டது. மற்ற
> சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற
> கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று. உலகத்தில் எந்த துதிபாடியும்
> ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.
>
> குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள்
> அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று
> உட்கார்ந்தான்.
>
> குமரகுருபரர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன.
> முகச் சுருக்கங்கள் சிரித்தன. இதழ்க் கடைகள் சிரித்தன. காது வளையங்கள்
> சிரித்தன. அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.
>
> நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க
> வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக
> எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம்
> செய்தான்.
>
> "தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
>
> "காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம்
> கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும்."
>
> "நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே."
>
> "நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி
> புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..."
>
> "ஆமாம். பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள்.
> எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று?"
>
> "இறையருள்."
>
> "எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."
>
> "உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும்
> பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு."
>
> "ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"
>
> "ஒரு நொடியில் கொடுத்தான்."
>
> "நீங்கள் மண்டியிட்டு வேண்டினீர்களா..."
>
> 'சகலகலாவல்லி மாலை' என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில்
> இறைவனை வேண்டினேன்.
>
> "மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு
> வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில்
> உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை
> செய்து கொள்ளலாம்.
>
> கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல்
> எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..." நவாப் பணிவாகப் பேசினார்.
>
> #எழுத்துச்சித்தர் #பாலகுமாரன்
> அவர்கள் பதிவில் இருந்து
>
> Repost
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddtif3jw94cLyUC%2BSTEZD4sj9oreq%2BJOTxp53GcoCJ0NAQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddtif3jw94cLyUC%2BSTEZD4sj9oreq%2BJOTxp53GcoCJ0NAQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorAp_VH82h%2B77J9-dAHqGZQEqatpgfAqWNhUzBpn2PuSA%40mail.gmail.com.
  • Kumara Guruparar Venkatachalam Subramanian
    • Re: Kumara Guruparar Rajaram Krishnamurthy

Reply via email to