On 7/12/07, senthil raja <[EMAIL PROTECTED]> wrote:

Sethu,

Your questions are valid.  But, should we give so much importance on
pronounciations?

I feel, we can arrive at a suitable word suiting our own language.

Regards,
Senthil Raja.


எழுத்துப்பெயர்ப்பு ( transliteration) செய்கையில் உச்சரிப்புக்கு
முக்கியத்துவம் கொடுக்கத்தானே வேண்டும்?

அதுவும் இங்கு  scim , skim  கிட்டத்தட்ட ஒரே மாதிரி வருவதால்.

பொதுவாக ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புக்கள் வட்டரா வழக்கங்களுக்கு ஏற்ப
நாடுகளுக்கு இடையே மாறுபடுவதுதான். உதரணமாக பெயர்களை  உச்சரிப்பதில் உள்ள
வேறுபாடுகள் John = ஜோன் / ஜான்..  Brian = பிராயன் / பிரய்ன் . (ஒரு
நாட்டினுள்ளேயேயும்  ஊர்களுக்கிடையே உச்சரிப்புக்கள் பலவிதமாகவும் மாறுபடலாம்.
ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கூட அபப்டித்தான் )

இங்கு நமக்கு தோன்றியுள்ளது அப்படிபட்ட  வட்டாரவழக்க வேறுபாடுகளால் எழும்
பிரச்சினை அல்ல.

முதலில் ஒரு acronym  ஆக ஆக்கப்பட்டது scim என்ற பெயர். அது "Smart Common
Input Method" என்பதன் சுருக்கமாக. பின் அதிலிருந்து c க்குப் பதில் k ஐ செருகி
(kde க்கான உறை என்பதால்) உருவாக்கியதே skim என்ற வார்த்தை. ஆக skim ஒரு
abbreviation உம் அல்ல, acronym மும் அல்ல ஆனால் ஒரு புது வார்த்தை. அதுவும்
பெயர். ஒரு பொதுவான வாசகர்  அதை ஸ்கிம் என்றுதான் உச்சரிப்பார். ஏற்கனவே
புழக்கத்தில் உள்ள skim milk  மற்றும் skim என்ற வினைச்சொல் ஆகியவற்றில் skim
மை உச்சரிப்பதுபோல.

அப்படியானால்  scim  க்கு வேறுபாடான  உச்சரிப்பு  ஏதாவது மேம்பாட்டாளர்கள்
பாவிக்கிறார்களா என்று அறியவே scim-devel குழுமத்துக்கு அக் கேள்வியை
அனுப்பினேன். வந்த இரு பதில்களில் இருந்து தெரிவது என்னவென்றால் உச்சரிப்பதில்
அவற்றிற்றிடையே  உள்ள வித்தியாசம் பற்றி  அவர்கள் இதுவரை யோசித்திருக்கவில்லை
என்பதே.

ஆம் ஆங்கிலத்திலேயே இவ்வார்த்தைகள் எழுதுவதாயின் நீங்கள் சொல்வது போல அவைகளின்
சரியானா உச்சரிப்பு என்ன என்பது முக்கியமற்றது. ஆங்கிலத்தில் எழுதுபவருக்கும்
வாசிப்பவருக்கும் உச்சரிப்பு வித்தியாசம் பற்றி யோசிக்கவே வேண்டியதில்லை.
அவர்கள் எண்ணங்களில் அவற்றின் செயல்முறைகளின் தொழினுட்ப வித்தியாசங்களே
முக்கியமான அடையாளம் காட்டும் காரணிகளாக இருக்கும். ஒருவர் அவற்றைப் பற்றி
விரிவுரை ஆற்றுகையிலும் ஒரே மாதிரி உச்சரிப்பினும் - உதாரணத்திற்கு இரண்டையும்
ஸ்கிம் என உச்சரிப்பின், நான் இப்போது சொல்வது  sc ஸ்கிம் அல்லது sk ஸ்கிம்
என்றும் கேட்போருக்குத் தெளிவுபடுத்தி விட்டு விரிவுரையை தொடராலாம்.

ஆனால் இங்கு நமக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது எழுத்துப் பெயர்ப்பு
செய்யவேண்டியுள்ளது என்பதால்தான்.

நமது மொழிக்கு பொருத்தமான சொல் கிடைக்கலாம் என்று உணர்வதாக  முடிதுள்ளீர்கள் .

எழுத்துப்பெயர்ப்புதான் நாம் செய்ய வேண்டியுள்ளது என்று நாம் ஏற்றுக்
கொள்வோமாயின் அவர்கள்  உச்சரிப்புக்கள் எவை என்பதை கூடிய சீக்கிரம் சொல்லி
விடுவார்கள் என்பதை நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்.

மாறாக தமிழிலேயே வேறு  சொல்  ஆக்குவோம் என்ற கருத்தைத்தான் நீங்கள்
சொல்லியிருந்தீர்களாயின் இத்தகைய சொற்களுக்கு  அக்காரியம் இலகுவானதல்ல என்பதே
என் கருத்து.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க