2008/7/19 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>:

> அனைவருக்கும் வணக்கம்,
>
> உபுண்டு தமிழ் குழுமம் வட்டுகளை வழங்க கைப்பிடி தோழர்கள் திட்டத்தை முழுமையாக
> செயல்படுத்திவிட்டது. ஏறத்தாழ ஏழு தோழர்கள் தமிழகம் முழுவதும்
> செயல்படுகிறார்கள்.
>
> கைப்பிடி தோழர்களின் விலாசம் மற்றும் மடல் உள்ளிட்ட தகவல்களுக்கு கீழ்க்கண்ட
> இணைய முகவரியை சொடுக்கவும்
>
>
>
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
>
>
இதன் மூலமும் பயணிக்கலாம், பரப்பிடலாம்:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Kaipidi_Thozargal

இத்தகைய திட்டத்தை தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழுவாக செயற்படுத்த
முடிந்தமைக்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் இலவசமாக உபுண்டு வட்டுக்களை
பெறாது தங்களால் இயன்றதை தந்து பெற்றுக்கொண்டோர் செய்த பேருதவியே ஆகும்.

ஆகையால் தாங்களும் மேற்கண்ட முகவரியிலுள்ளோரிடமிருந்து வட்டுக்களைப் பெற்றுக்
கொள்ள நேர்ந்தால் இலவசமாகப் பெறாது தங்களால் இயன்ற தொகைத் தந்து பெற்றுக்
கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

இது குனு/ லினக்ஸ் என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது விடுதலையை
அடிப்படையாகக் கொண்டது எனும் செய்தி பரவ வழி வகுக்கும்.

இத்திட்டத்தை தமிழகம் நெடுகிலும் விரிவுபடுத்த இன்னும் பல தன்னார்வலர்களை
எதிர்பார்க்கிறோம்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க