2008/8/25 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>

> //மொழியிடச்சூழல்//
>
> அழகான சொல் சேது.
> எங்கே பெற்றீர்கள்?
>
> உங்களுடையதா?
>

ஓம்.

locale என்பதற்கு விக்கசனரியில் சேர்க்கப்படுள்ள சொல் தமிழ் இணையப் பல்கலைக்கழக
அகரமுதலியிலிருந்து ஏற்கப்பட்ட "நிகழ்வு இயலிடம்" . அது  நிருவாகத்துறைக்கான
ஒரு கலைச்சொல். அவ்வகரமுதலி அதனை administration என வகைப்படுத்தியுள்ளதை
அவதானிக்கவும்.

கணினித்துறையில் locale எனப்படுவது ஒரு பயனரின் மொழி, நாடு மற்றும் வேறு
சிறப்பு விருப்புக்களை வரையறைப்படுத்தும் துணையலகுகளின் கொத்தாகும். அதனை
முதன்மையாக அடையாளப்படுத்துவது மொழி அத்துடன் இடம் ஆகியவற்றிற்கான குறியீடுகள்
வழியே. காட்டாக ta_IN, ta_LK, en_US, en_GB...
(உசாத்துணை: http://en.wikipedia.org/wiki/Locale )

locale குறியீடுகளில் இடத்துக்கான (IN, LK, GB, போன்ற) உபக்குறியீடுகள்
ஆங்கிலத்தில் Region Tag அல்லது Territory Tag என்றுதான் குறிப்பிடப்படுகின்றன.
Country Tag   என்றல்ல. நாம் பொதுவாக அதை இடக்குறியீடு என்றே தமிழில்
குறிப்பிடலாம்.

மொழி+இடம் ஆகியன ஒரு locale ஐ அடையாளப்படுவதால் locale க்கு "மொழியிடம்" என்ற
தமிழ் சொல்லாக்கம்  பொருத்தமாகலாம் என முதலில் கருதினேன்.  ஆயினும் "இடம்"
பெயர்ச்சொல்லுடன் ஏழாம் வேற்றுமை உருபாக சேரக்கூடியது அல்லவா?  உன்னிடம்,
என்னிடம்,... போல.

காட்டாக http://valavu.blogspot.com/2007/01/2_23.html இல் இராம.கி.
பதிந்ததில் :

//பிழை என்பது நம்மிடம் இருக்கிறது; மொழியிடம் அல்ல" என்று எத்தனை தரம் தான்
சொல்லுவது? //

எனவே locale க்கு "மொழியிடம்" என்ற சொல் சிலவிடங்களில் பொருள்
குழப்பத்திற்குள்ளாகக்கூடும் என எண்ணுவதால் அதனுடன்  சூழலையும் சேர்த்து
"மொழியிடச்சூழல்" என குறிப்பிடுகிறேன்.

இம்மறுமொழியை விக்சனரி குழுமத்திற்கும் நகலிடுகிறேன். ஏனையோர் கருத்துக்கள்
அறிய விரும்புகிறேன்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க