அனைவருக்கும் வணக்கம்,

தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை,
நடத்தியது,

இவ்விழாவிற்கு "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ,
"பிராபிர் புர்காஷ்தா" தில்லி அறிவியல் குழம செயலாளர் மற்றும் "கிரன் சந்திரா"
கட்டற்ற மென்பொருள் குழமம், இந்தியா ஆகியோர் வருகை தந்திருந்தார்கள்.

உபுனண்டு தமிழ் குழுமம் மற்றும் சென்னை லினக்ஸ் குழுமம் சார்பாக  "கட்டற்ற
மென்பொருள்" புத்தகத்தினை தமிழில் அதன் ஆசிரியர் ஸ்ரீ மா.ராமதாஸ்  முதல்
பிரதியை வெளியிட  பிராபிர் புர்காஷ்தா. கிரன் சந்திரா மற்றும் திபிஸ் தாஸ்
ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அதைத் தோடர்ந்து ஆமாச்சு சென்னை லினக்ஸ் குழும நண்பர்களை அழைத்தது பாராட்டினார்

பின்னர் ராமதாஸ் "கட்டற்ற மென்பொருள்" என முழக்கமிட கூட்டத்தில் இருந்த
அனைவரும் முழக்கமிட்டனர்...அதைத் தொடர்ந்து "இது 21 நூற்றாண்டின் விடுதலை போர்"
எனவும் கோஷமிடப்பட்டது.

அந்த நேரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

பின்னர் "கட்டற்ற மென்பொருளின்" 25 ஆண்டு பிறந்த நாளை கிரன் சந்திராவால் கேக்
வேட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.

பின்னர் "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , எப்படி
கட்டற்ற மென்பொருட்களை எப்படி அரசு கனிணி மைமாக்ளுக்கு பயன்படுத்துவது எனப்
பேசினார்,

அதைத்தொடர்ந்து தில்லி அறிவியல் குழமத் செயலாளர்"பிராபிர் புர்காஷ்தா"
காப்புரிமை, படைப்புரிமை ஆகிவற்றை விரிவாகப்பேசினார்,

கடைசியாக "கிரன் சந்திரா" கட்டற்ற மென்பொருள் குழமம், இந்திய அவர்கள்  கட்டற்ற
மென்பொருள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.

நிகழச்சியானது இனிதே முடிந்தது.


-- 
அன்புடன்
அருண்

------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க