வணக்கம்

உபுண்டுவின் அடுத்த வெளியீடு இந்திரிபிட் ஐபக்ஸ் வெளிவர இன்னும் பதினாறு
நாட்களே உள்ளன. முந்தைய வெளியீடுகளின் போது எளிய வெளியீட்டு நிகழச்சிகளை
நடத்தியது போலவே இம்முறையும் வெளியீட்டு நிகழ்ச்சியொன்றை உபுண்டு தமிழ்
குழுமம் நடத்த உள்ளது. நவம்பர் ஒன்று அதற்குரிய நாளாக கருதுகிறோம்.

சிறிய மாற்றமாக எப்போதும் சென்னையிலேயே இதனைச் செய்து வந்த நாங்கள்
இம்முறை சென்னையைத் தாண்டி கொண்டாட வேண்டும் எனக் கருதுகிறோம். தாங்கள்
வசிக்கும் ஊரில் இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இயலுமாயின் அதனை
வரவேற்கிறோம்.

நவம்பர் 01, 02 சனி ஞாயிறாக இருப்பதால் உபுண்டுவை மக்களுக்கு/
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இது அமையலாம். உபுண்டு
நிறுவும் முறை, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் தமிழ்,
உபுண்டுவில் பாடல் கேட்பது எனப் பலவற்றையும் செய்முறையாக விளக்கிக்
காட்டலாம்... தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகள்/ கல்விக் கூடங்களில்
இதற்கான ஏற்பாட்டை செய்ய இயலுமாயின் மகிழ்ச்சி. உபுண்டு ஆசான்
திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாகவும் இது அமையலாம்.

எங்கள் குழுமத்திலுருந்து இருவர் உங்களை நாடி உபுண்டுவுடன் வருவோம்.
தங்களால் தங்களூரில் ஒருங்கிணைத்து உதவ முடியுமா? மூன்று... ஐந்து
கணினிகள்... பத்து.. இருபது.. எவ்வளவு பேர் இருந்தாலும் சரி.. மென்
விடுதலை வேட்கை இருந்தால் போதும்... எமது முகவரிக்கு விரைந்து மடல்
அனுப்பவும். இச்செய்தியை பிறருக்கும் தெரியப்படுத்தி உதவுமாறும் கேட்டுக்
கொள்கிறோம்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க