முதல் மடலில் நான் சுட்டிக்காட்டிய 4 வது மடல் பற்றி இவ்வாறு
குறிப்பிட்டுருந்தேன்.

//வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு
மற்றும்  பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்
நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும்,  ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில்
உள்ள குறியீடுகள் (- அம்புக்குறிகள், elipses) அவற்றிற்கான குறியேற்ற
இடங்களில் பொருத்தப்பட்ட தஸ்கி எழுத்துருவங்களைக் காண்பித்தல். (இதன்
திரைக்காட்சியை அடுத்த மடலில் இடுவேன்) . எல்லா  TSCu எழுத்துக்களயும்
அகற்றினல் இவ்வழு ஏற்படுவதில்லை.//

அவ்வழு தமிழ் மொழியிடச்சூழலில் பயர்பாக்சில் மட்டும் ஏற்படுகிறது.  மேலும் பல
செயலிகளை இயக்குகையில்  கீழே பலகத்திnf அவற்றின் தத்தல்களிலும் தோன்றுகிறது.

தமிழ் மொழியிடச்சூழலில்  இவ்வழுவைக் காட்டும் ஒரு திரைக்காட்சி :
http://i35.tinypic.com/2jbmm91.jpg . பயார்பாக்சை மட்டும் ஆங்கில
மொழியிடச்சூழலில் இயக்கும் போது தெரிவது :
http://i35.tinypic.com/29kpf21.jpg.  (அதாவது இரண்டுக்கும்
மேசைத்தளத்திற்கு  தமிழ் மொழியிடச்சூழலில் தான். ஆனால்
இரண்டாவதில் பயர்பாக்சை ஆரம்பித்தது "LANG=en_US.UTF-8 firefox" என முனையத்தில்
கட்டளை கொடுத்து. அதாவது மேசைத்தளம் ta_IN, பயர்பாக்ஸ் மட்டும் en_US
மொழியிடச்சூழல்). ஆதாலால் இரண்டிலும் பலகத்தில்,   தொடர்ச்சி உள்ளது எனபதைக்
காட்டும் "Elipses" எனப்படும்  மூன்று புள்ளிகளாலான ('...') குறியீடு அதே ஆஸ்கி
குறியேற்றம் உள்ள தஸ்கியின்  'ஸ' வாகத் தோன்றுகின்றது.  அவற்றை சிவப்பு
வட்டங்களிட்டு காட்டியுள்ளேன். அதே போல   ஆங்கில மொழியிடச்சூழலில் (என்னால்
சிவப்பு கீழ்கோடிடிப்பட்ட) இரட்டை மற்றும் ஒற்றை அம்புக்குறிகள் மற்றும் சில
குறியீடுகள் தமிழ் மொழியிடச்சூழலில் அவ் ஆஸ்கி மேலரங்க குறியேற்றங்களைக் கொண்ட
தஸ்கி எழுத்துருவங்ககளாக மாறுகின்றன (என்னால் சிவப்பு வட்டங்களிட்டு
காட்டப்படுபவை). அவ்வாறு தோன்றும் ஒவ்வொரு எழுத்துருவமும் தஸ்கி
தகுதரத்திலிருந்து வருகின்றன வேறு தாம்/தாப் போன்றவைகள் அல்ல என்பதும்
புலனாகியது.   எல்லா TSCu எழுத்துருக்களையும் அகற்றறினால் இவ்வழு தோன்றுவதில்லை
!


//
2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>

>
> மயூரன்,
>
> System --> Preferences --> Appearance --> Subpixel Smoothing செய்தால் நிகழ்
> வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே.
>
> மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது.
>
> //



ஆமாச்சு முதற்கண் தாங்கள் குறிப்பிடும் அப்பொதியின் சரியான பெயர்
ttf-indic-fonts-core (indic-core-fonts அல்ல) .

எனது முன்னைய இரு மடல்களும் வாசித்தீர்களா? அதில் 3 ஆம் வழுவாக நான்
குறிப்பிடும் "படருதல்" வழு முன்னர்  ஹார்டியில் ta_IN சூழலில் FF3 இல்
ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் கண்டபின் வழுயறிக்கைத்தளத்தில்
வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பு அந்த ttf-indic-fonts-core ஐ அகற்றுவது. ஆனால் அது
அறுதித் தேவைக்குக்கு கூடுதலான செயல். ஏனெனில் ttf-indic-fonts-core ஐ
அகற்றாமல் அப்பொதியினால் சேர்க்கப்படுத்தப்படும் lohit_ta.ttf எழுத்துருவை
மட்டும் அகற்றுதல் அவ்வழுவைக் களைகிறது ! தற்போதைய 8.10 இல்  lohit_ta.ttf
இருக்கையில் ta_IN சூழலில் ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் இவ்வழு
காணப்படவில்லை - ஆனால் Google Groups மற்றும் unicode.org  இன் (!!) சில
பக்கங்களிலும் இப்போதும் lohit_ta.ttf  இருக்கையில் வழு உள்ளது.

//இதைத் தவிர வேறு செய்ய வேண்டியிருக்கிறதா? நான் பயன்படுத்தும் கணினியில்
இவையிரண்டையும் செய்தால் சிக்கல் தீர்கிறது. //

அதாவது ttf-indic-fonts-core என்ற பல இந்திய  கட்டற்ற எழுத்துருக்களை கொண்டதும்
அவற்றில் ஒன்றான  எல்லா லினக்ஸ் தளங்களுக்கும் தமிழிற்கு அடிப்படையாகப்
பாவிக்கும் lohit_ta.ttf அகற்றுதலை பராவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம் என
எண்ணுகிறீர்களா?

தற்போதைய 8.10 இல் தமிழிற்கான எல்லா துணை மற்றும் மொழியாக்கப் பொதிகளையும்
சேர்க்காமல் ஆங்கில அல்லது வேற்று மொழிகளில் பயன்படுத்துவோர்கள்
ttf-tamil-fonts பொதியை மட்டும் நிறுவினால் போதும் முதல் வழு தீர்ந்துவிடும்,
TSCu எழுத்துருக்களின் மேலாதிக்கத்தால். (  Anti-alising / Hinting twekaing
களை செய்த பின்). ஆக வழு 2,3 தீர்க்கவே lohit_ta.ttf அகற்றுதல் ஒழு வழி. அதே
வாத அடிப்படையில்  வழு 4 தீர்க்க  எல்லா TSCu ளையும் அகற்றி விடலாமா?
அவற்றிற்கெல்லாம் மாற்றீடு என்ன?

எனவேதான் எவற்றையும் அகற்றா ஒரு முறையை முன் வைக்கவுள்ளேன். உபுண்டு கநோமில்
சோதிக்கும் முறையை இன்று பின் மாலை பதிவேன்.

ஆமாச்சு kde / குபுண்டுவில் சோதிக்க தங்கள் பங்குபற்றல் அவசியாமாகும்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க