வணக்கம்,

உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸின் தமிழ் வடிவம் ஈரோடு ஐடி அசோசியேஸன் சார்பில்,
நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஐடி அசோசியேஸனின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு
பயனடைந்தனர். உபுண்டு தமிழ் குழுமம்/ சென்னை குனு லினக்ஸ் பயனர் குழு சார்பாக
ஸ்ரீராமதாஸ், ஊட்டி பத்மநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தித் தந்தனர்.

கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் தமிழ் வசதிகள் செய்து
கொள்வது, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் பொதிகள் நிர்வாகம், குனு/
லினக்ஸ் கோப்பு முறைமை உள்ளிட்ட தலைப்புகளில் செய்முறை விளக்கங்கள் தரப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

   - இந்நிகழச்சியில் உபுண்டுவின் நேரடி வெளியீடு பயன்படுத்தப்படாமல் திரையில்
   தோன்றும் முதல் மொழியே தமிழ் மொழியாகக் கொண்ட மாற்றப்பட்ட வடிவத்தினை நிறுவி
   பயன்படுத்தியமை. (தொடர்ச்சியாக பங்களித்து வரும் குநோம் உள்ளிட்ட தமிழாக்கக்
   குழுக்களுக்கு நன்றி.)
   - சென்னைக்கு வெளியே நிகழச்சியினை நடத்திட வேண்டும் என நாங்கள் கோரிய போது
   மிக வேகமாக செயல்பட்டு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நடத்திக்
   காட்டிய ஈரோடு ஐடி அசோசியேஸன்.
   - ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஈரோடு ஐடி அசோசியேஷன் உறுப்பினர்கள்.
   - கற்றது விட்டுப்போகக் கூடாது என்பதற்காக, அதிரடியாக இன்னும் சில
   வாரங்களுக்குள்  கலந்து கொண்டோருக்காக
   - ஈரோடு ஐடி அசோசியேஸன் அறிவித்துள்ள உபுண்டு போட்டி.

கனிவான உபசரிப்போடு இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முன்னின்று உழைத்த திரு.
இராஜா, திரு பாலு, திரு ஸ்ரீநிவாஸன், திரு முத்தரசு, திரு மனோகர் உள்ளிட்ட
ஈரோடு ஐடி அசோசியேஸனின் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மனமார்ந்த
நன்றிகள். முழுமையான மன நிறைவை ஏற்படுத்திய நிகழ்வு இது.

இந்நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட மின்னேட்டினைப் பெற்றுக்
கொள்ள:http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/nov/erode/
காட்சிப்பதிவுகளுடன் கூடிய செய்தியை வாசிக்க:
http://kanimozhi.org.in/kanimozhi/?p=149

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
  • [உபுண்டு_தமிழ்] ... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M

அவர்களுக்கு பதிலளிக்க