வணக்கம்

07.01.2009 திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல்லூரியில் கட்டற்ற மென்பொருளும்
தமிழ்க் கணிமையும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இரு
நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குனு லினக்ஸில் தமிழ் வசதிகள்,  மின்னெழுத்துக்கள் பற்றிய அறிமுகம்,
பன்மொழித்தன்மை வாய்ந்த நிரலாக்கம், மொழிபெயர்ப்பு உதவிக் கருவிகள், யுக்திகள்
முதலியன செய்முறையாக விளக்கப்பட்டன. உபுண்டு இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டது.

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  சிலர் தமிழாக்கத்திற்கு பங்களிக்க
முனவந்துள்ளனர். வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தமைக்கு தியாகராஜன் அவர்களுக்கு
நன்றி.

நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்தித் தந்த அருணை பொறியியல் கல்லூரி, கணினி
அறிவியல் துறைத் தலைவர், திரு. செல்லத் தமிழன் அவர்களுக்கு நன்றி.

-- 

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க