On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:
> 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள் > இடம்பெறலாம் என்ற ஆலோசனை. > துரதிருஷ்டவசமாக http://ubuntu-tam.org/avanam அடைவு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அழிக்கப்பட்டுவிட்டது. அதில் இருந்த ஆவணங்கள் வேறொரு கணினியில் காத்து வைத்துள்ளதாக நினைவு. நாளை மீட்டுத் தர முயற்சிக்கின்றேன். > 3. அங்கே வருபவர்களுக்கு தமிழ் வசதிகள் பொதியப்பட்டு மீளக்கட்டப்பட்ட > உபுண்டு வழங்கல் ஒன்றை வழங்க எண்ணியுள்ளேன். என்னென்ன வசதிகள் > சேர்க்கப்படலாம்? எவற்றை நீக்கலாம்? இதன் பொருட்டு உபுண்டு தன்மயமாக்கக் கருவி (uck.sourceforge.net) பயன்படுத்தப்பட்டது. வழங்கலின் முதல் மொழியே தமிழ் மொழியாகக் கொள்ளப்பட்டது. ஆக தமிழுக்குண்டான பொதிகள் இயல்பாகவே சேர்க்கப்பட்டுவிடும். scim-m17n, ttf-tamil-fonts உள்ளிட்ட பொதிகள் சேர்க்கப்படுகின்றனவா என சோதித்தறியவும். எம் பி 3, பிளாஷ் உள்ளிட்டவற்றை செயற்படுத்திட வேண்டி, இத்தகையதைத் தொகுத்து தொகுத்து உபுண்டு வழங்கும் ubuntu-restricted-extras, VLC இயக்கி போன்ற பொதிகள் சேர்க்கப்பட்டன. gwget, gftp (அ) filezilla போன்ற பொதிகளும் சேர்க்கப்பட்டன. வைனும் சேர்க்கப்பட்டது. இன்க்ஸ்கேப், ஸ்கரைபஸ் பிளென்டர் போன்றவையும் சேர்க்கப்பட்டதாக நினைவு. எல்லாம் சேர்த்து 870 MB அளவிற்கு வந்தது. தாங்கள் வைன் சேர்ப்பதோடு Wine-Doors(1) ஐயும் சேர்த்து விடுங்கள். அது மயக்கத்தில் இருந்து மீட்க பேருதவியாய் இருக்கும் ;-) winetricks(2) என்றொன்று இருக்கிறது. அது முனைய வழி. wine-doors சேர்ப்பதை பரிசீலிக்கவும். குநோமுக்கானது. நிறுவியதும் சிக்குன்னு Applications இழுதி(drop down menu)யில் உட்கார்ந்து கொள்ளும். (1) http://wddb.wine-doors.org/ (2) http://wiki.winehq.org/winetricks மற்றபடி நிரலாக்கம் தேவைப்படுமென்றால் அதற்குண்டான பொதிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள். சில நண்பர்கள் remastersys பயன்படுத்துவது பற்றி கேள்விப்பட்டதுண்டு. நான் பயன்படுத்திப்பார்த்ததில்லை. வசதியாயின் பயன்படுத்திப்பாருங்கள். வேறேதும் தோன்றினால் எழுதுகிறேன். -- ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam